நித்யாவுக்கு உதவுங்கள்-மகளுக்கு காய்ச்சல்...

தோழிகளே என் மகளுக்கு 19 மாதங்கள் ஆகிறது. இன்று காலைமுதல் கொஞ்சம் காய்ச்சல் ஆரம்பித்திருந்தது. க்ரோசின் ட்ராப்ஸ் குடுத்ததில் கொஞ்சம் குறைந்தது. மறுபடியும் மாலைமுதல் தலைமுதல் இடுப்பு வரை உடம்பு பயங்கர சூடாகவும், இடுப்புக்கு கீழே பாதம்வரை ஜில்லென்று இருக்கு. இப்படி யார் குழந்தைக்காவது இருந்ததுண்டா? இப்ப நான் என்ன செய்யன்னே புரியல. ப்ளீஸ் உதவுங்க தோழிகளே.

எனக்கு தெரியல நித்தி, ஆனால் குழந்தைங்க விசயத்தில் டாக்டர் கிட்ட காமிச்சுடரது பெட்டெர்... நாளை உங்கலுக்கு போன் பன்றேன்... டேக் கேர் ஆஃப் ஹர்ஷி பாப்பா...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நித்தி, நான் கூட என் குட்டீசுக்கு பீவர் டைம்ல குரோசின் ட்ராப்ஸ் தந்திருக்கேன். ஆனா நீங்க குட்டி பொண்ணு சொன்ன பீவர் மாதிரி இருந்ததான்னு கவனிக்கல பா ;( நாளைக்கு பீவர் குறையலன்னா நீங்க டாக்டர்கிட்டயே காட்டிடுங்க. பெரியவங்களுக்கு வாய்ல எதாவது வைத்தியம் சொல்லலாம் பா.. குட்டி குழந்தைங்களுக்கு அது வேணாமே.. க்ளைமேட் சேஞ்ச் ஆகுறதாலயும் அப்படி ஆகும். நீங்க கவலைப்படாதீங்க. நாளைக்கு ஜுரம் சரியாய்டும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹர்ஷிக்கு என்னாச்சு...........எதாவது ஒன்னு படுத்துது........பாவம் பிள்ளை தமதிக்காமல் டாக்டரிடம் போங்க.........கவலைபடாத்திங்க சரியாகிடும்........மாஷாஅல்லாஹ்!சூசூசூ...........

இப்படி எல்லாம் கேட்கிறதை விட்டுட்டு நீங்க நேராக ஹாஸ்பிட்டல் போங்க... சரியாகிடும்... குழந்தை விஷயத்துல எல்லாம் ரிஸ்க் எடுக்க கூடாது ... டேக் கேர்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நித்து அக்கா பாப்பாவுக்கு சீக்ரமா குனமாய்டும் அக்கா அம்மா சொஙான்க அக்கா ஒரு கைப்பிடியளவு புதினா கீரையை சட்டியிலிட்டு வதக்கி அத்துடன் மிளகு, சீரகம் அரை தேக்கரண்டி, சுக்கு துண்டு ஆகியவற்றை நைத்துப்போட்டு கால் லிட்டர் தண்ணீர் விட்டு பாதியாக சுண்டக்காய்ச்சி அதை மூன்று பங்காக்கி காலை, மதியம், மாலை என மூன்றுவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் எவ்விதமான காய்ச்சலும் குறையும் நு அப்புரம் சாதாரண காய்ச்சல் ஏற்பட்டால் 1 தேக்கரண்டி தேனில் சிறிது எலுமிச்சைச்சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் காய்ச்சல் குறையும். இல்லனா முருங்கப்பட்டையை எடுத்து இடித்து தண்ணீர் விட்டு நன்கு அவித்து சாறு எடுத்து ரசமாக்கி அதுல பாப்பாக்கு சாதம் குடுங்க அக்கா இல்லனா ரசமா வே குடுங்க அக்கா சேக்ரமா சரி ஆய்டுவா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நித்யா இப்ப ஹர்ஷிக்கு எப்படி இருக்கு டாக்டர்ட போய்னீங்களா?என்ன சொன்னாங்க???

நீங்க சொல்லும் வகை காய்ச்சல் சில டாக்டர்கள் சொல்லி கேட்டிருக்கேன்... ஃபிட்ஸ் வர கூடிய பிள்ளைகளுக்கோ அல்லது இன்ஃபெக்‌ஷன் உள்ள பிள்ளைகளுக்கோ உடல் சூடு வேறுபடும்னு. ஆனா இப்படி தான் இருக்குமான்னு தெரியல. எதுக்கும் டாக்டரை பார்த்துடுங்க. பயப்பட வேண்டாம்.... சில நேரம் காய்ச்சலா இருக்க பிள்ளையை நீங்க வார்மா மேல துணி போட்டு வெச்சிருக்குறதால் கூட மேல மட்டும் சூடாகவும், துணியால் மூடாத பாகங்கள் சில்லுன்னும் இருக்க வாய்ப்பு இருக்கு. சிக்கிரம் சரியாகிடும்... டாக்டரை பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னாச்சி ஹர்ஷிக் குட்டிக்கு...டாக்டரிடம் போய் காமிங்க...
ஹனுக்கும் சில சமயம் இப்படி தான் உடம்பு பார்ட்..பார்டா சுடும்..கை,கால் சில்லுனு இருக்கும் உடம்பு முழுதும் காய்ச்சல் அடிக்கும்....சம் டைம் தலை,கை,கால் நல்லா சுடும்..பயப்படாதீர்கள்...
இருந்தாலும் குழந்தைக்கு டாக்டரிடம் போய் காட்டுங்க நித்தி....கிளைமெட் வேற மாறுது இல்லியா..

ஹசீன்

நித்யா ஹர்சி குட்டிக்கு என்னப்பா ஆச்சி!எனக்கு தலைப்பை பார்த்ததும் ரொம்ப கஷ்டமா கவலையா போச்சி:(
பாவம்ப்பா ஹர்சி, காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் தாமதிக்காமல் நம்ம தோழிகள் சொன்னது போல் டாக்டரை போய் பாருங்க.இந்த காலத்தில் பெரியவங்களுக்கு காய்ச்சல் வந்தாலே வீட்டு வைத்தியம் எதுவும் செய்யாமல் டாக்டரிடம் காட்டும் காலமாக உள்ளது.அதுவும் சின்ன குழந்தைன்னா இப்படி வச்சிருக்காதீங்கம்மா.....
நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க ஹர்சி எப்போதும் போல இன்ஷா அல்லாஹ் ஆரோக்கியமா துள்ளி குதித்து விளையாட ஆரம்பித்து விடுவாள் பாருங்கள் ////மாஷா அல்லாஹ் ஸூ///
உங்க பொண்ணுக்கு நாங்க (ரூபி)ரெண்டு பெரும் சுத்தி போட்டிருக்கோம் சோ கண்டிப்பா சரியாயிடும்....

SSaifudeen:)

நித்யா,ஹர்சிகுட்டிக்கு என்னாச்சு?நீங்க உடனே மருத்துவரிடம் சென்று ஹர்சியை காண்பித்து மருந்து மாத்திரை வாங்கி கொடுங்கள்.ஹர்சிக்கு சீக்கிரமே குணமாக நான் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

மேலும் சில பதிவுகள்