சவர்மா

தேதி: December 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (10 votes)

 

சவர்மா ரொட்டி செய்ய:
மைதா மாவு - ஒரு கப்
பால் - அரை கப்
முட்டை - ஒன்று
வெண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - 2 மேசைக்கரண்டி
சீனி - அரை தேக்கரண்டி
ஈஸ்ட் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சவர்மா செய்ய:
மயோனைஸ் - கால் கப்
எலும்பில்லாத கோழி - கால் கிலோ
துருவிய காரட் - அரை கப்
துருவிய முட்டைகோஸ் - அரை கப்
துருவிய வெங்காயம் - முக்கால் கப்
தக்காளி - ஒன்று
புதினா, மல்லி - ஒரு கைப்பிடி
எலுமிச்சை - பாதி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் - 2 மேசைக்கரண்டி


 

சவர்மா செய்ய தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். கோழியுடன் இஞ்சி, பூண்டு விழுது, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து பின் அதை கொத்தி (அ) உதிரியாக்கிக் கொள்ளவும்.
சவர்மா செய்ய எடுத்து வைத்துள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிரட்டி வைத்து கொள்ளவும். தக்காளியை விதை நீக்கி பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். அனைத்து காய்களும் மயோனைசுடன் நன்கு சேர்ந்து இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மேலும் சிறிது மயோனைஸ் மற்றும் மிளகு சேர்த்து கொள்ளவும்.
சவர்மா ரொட்டி செய்வதற்கு செய்ய தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும்.
ஈஸ்ட்டை சிறிது வெந்நீரில் கரைக்கவும். கரைந்ததும் அனைத்து பொருட்களையும் மாவுடன் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு கொஞ்சம் இளகலாக கையில் ஒட்டும் அளவிற்கு மாவை பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை காற்று புகாதவாறு மூடி 2 (அ) 3 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். நேரம் செல்லச் செல்ல மாவு உப்பலாகும். எனவே, அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மாவை கையால் அழுத்தி குத்தி விடவும்.
மாவு ஊறியதும் ஒட்டாமல் இருக்க தாராளமாக பச்சை மாவு தொட்டு சப்பாத்தி போல போட்டு ரொட்டியை எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது போட்டு வைத்துள்ள ரொட்டியை நாண் ஸ்டிக் (அ) சாதாரண தவாவில் போட்டு, இரு பக்கமும் வேக விட்டு வெந்ததும் வெண்ணெய் (அ) நெய் சேர்த்து சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
இந்த ரொட்டியுடன்(நாண்) சிறிது சவர்மாவை வைத்து சுருட்டி ஒரு டூத் பிக் கொண்டு குத்தி வைக்கவும்.
சுவையான சவர்மா தயார். இதை டின்னருக்கு செய்யலாம். பார்ட்டி டைம்களில் செய்தால் அனைவரின் பாராட்டுகளும் நிச்சயம் கிடைக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்க சர்ப்ரைஸ் இதுதானே? இப்பதான் அறுசுவைக்குள் நுழைஞ்சேன். முகப்பில குறிப்பை பார்த்துட்டு போகலாம்னு பார்த்தா உங்க குறிப்பு. முதல்குறிப்பிலேயே கலக்கிட்டீங்க. தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் ஷமீஹா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வாவ்... முதல் குறிப்பு :) சூப்பர்... என்னோட ஃபேவரட்டும் கூட. சிரியாவில் தினமும் மாலை ஒன்னு முழுங்காம தூக்கம் வராது. அருமையா செய்து காட்டி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

masha allah mudhal kuripae arumai shameeha..kandippa try panitu solraen ma..Thodarndhu unga oor special items lam kuduthu asathungama..vazhthukkal shamee

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

ஹாய் ஷமீஹா அக்கா வெரி நைஸ் டிஷ் அக்கா ஈஸ்ட் கட்டாயமாக சேர்க்க வேன்டுமா அக்கா இல்ல அதுக்கு பதில் ஆப்ஷன் யேதாது இருக்கா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமிஹா,முதல்குறிப்பிலேயே அசத்திட்டீங்க.வாழ்த்துக்கள்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சமீஹா சவர்மா ரொம்ப சூப்பரா இருக்கு அப்படியே எடுத்து சாப்பிடதூண்டுது வாழ்த்துக்கள். சின்ன சந்தேகம் எலுமிச்சை பாதி சொல்லியிருக்கீங்க அதை எப்ப சேர்க்கனும் சவர்மா கலவையிலா?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சமீஹா,

சவர்மா... சூப்ப்பர்ர்மா!! :) படங்கள் எல்லாமும் ரொம்ப 'பளிச்'னு அழகா வந்து இருக்கு! முத்தான இந்த முதல் குறிப்புக்கு என் வாழ்த்துக்கள். மேலும் நிறைய குறிப்புகள் தொடர்ந்து கொடுத்து கலக்கிடுங்க... :)

அன்புடன்
சுஸ்ரீ

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமிஹா, சவர்மா அருமையாக இருக்கு இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அலைக்கும் சமிஹா என்னை ஞாபகம் இருக்கா இல்லை என்னை அறிமுகபடுத்திக்கவா:)...சூப்ப்ர் பெரிய சாதனைதான் ஆரம்பமே அம்ர்க்களமாயிருக்கு வாழ்த்துக்கள் துபாயில 10 வருஷமாயிருக்கிர எனக்குக்கூட சவர்மா சுடத்தெரியாது கலக்கிட்டம்மா

சமீஹா,
புதுமையான குறிப்பு..
தொடர்ந்து குறிப்புகள் தர வாழ்த்துக்கள்!!!

என்றும் அன்புடன்,
கவிதா

thanks for sharing. I like shawarma very much

மிக அருமையாக செய்திருக்கீங்க.வேக வைத்த சிக்கன் சேர்த்த விபரம் விட்டு போய்விட்டது என்று நினைக்கிறேன்,ஷமீஹா.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சமீஹா இதுவரை கேள்விபட்டிராத புதுமையான பச்சைக்கண் குறிப்பு. நல்லா இருக்குங்க. என்னை பச்சைக்கண்தான் உள்ளே இழுத்து வந்தது. யாரு கண்ண நோண்டி வச்சு குறிப்பு குடுத்திருக்காங்கன்னு பார்க்கவந்தேன்.ஆனா படிக்கையிலேயே டேஸ்ட் தெரியுது. நிச்சயம் செய்து பார்ப்பேன்.வாழ்த்துக்கள் :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

சமீஹா
அருமையான குறிப்பு.கட்டாயம் செய்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்.

Kalai

ஷமீஹா உங்களுக்கு கண்டிப்பா எங்களுடைய பாராட்டுகள் நிச்சையம் உண்டு.. :) விளக்கப்படம் மிக அருமை... நல்லா செய்து இருக்கீங்க பா..

அன்புடன்,
லலிதா

எனது முதல் குறிப்பை வெளியிட்டு என்னை சந்தோஷ கடலில் மூழ்கடித்த அட்மின் அண்ணாவிற்கும் அட்மின் அண்ணா குழுவினருக்கும் மிக்க மிக்க நன்றி:)

SSaifudeen:)

நித்யா உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா...என் முதல் குறிப்பை முகப்பில் பார்க்க ரொம்ப ஆவலா இருந்தேன் அனால் அதை பார்க்கும் பாக்கியம் எனக்கு இல்லாமல் போய்விட்டது:(
காரணம் தான் உங்களுக்கு தெரியுமே நித்தி...!

SSaifudeen:)

வாழ்த்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி வனிதா அக்கா:)இது உங்களோட பேவரிட்டா !எனக்கும் எங்க தலைவருக்கும் தான்க்கா பேவரைட்.அதனால் தான் நானே செய்ய கத்துகிட்டேன்.நாம நினைத்த நேரமெல்லாம் ஹோட்டலுக்கு போகமுடியாது இல்லையா அதுக்கு தான்.

SSaifudeen:)

உங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சாம்.அப்பறம் நான் உங்களுக்கு இன்னொரு நன்றியும் சொல்லிகிறேன்.எதுக்கு தெரியுமா?
அரட்டையில் உங்க மெசேஜ் பார்த்த உடன் தான் என் குறிப்பை வெளியிட்டதே எனக்கு தெரியும்.பல டென்சனில் இதை சுத்தமா மறந்துட்டேன் சாம். பார்த்ததும் தூங்கிகொண்டு இருந்த உங்க அண்ணாவை சந்தோசத்தில் சத்தம் போட்டு எழுப்பி பார்க்க வைத்து கொண்டு இருக்கேன்:)சோ ஒன்ஸ் அகின் தேங்க்ஸ் சாம் .கண்டிப்பா எங்கள் ஊர் சமையல் சாரி சாரி நம்ம ஊர் சமையல் குறிப்புகளை அனுப்புறேன்மா...

SSaifudeen:)

ஈஸ்ட் சேக்காமல் என்றால் ஒன் பின்ஞ் பேக்கிங் சோடா, ஒன் பின்ஞ் பேக்கிங் பவ்டர், ஒன் அண்ட் ஹாப் கப் தயிர் சேர்த்து மீதி நான் சொன்ன பொருள் அனைத்தையும் சேர்த்து செய்து பாருங்க கனி நல்லா இருக்கும்.உங்க வருகைக்கும் வாழ்த்திற்கும் ரொம்ப நன்றி கனி.

SSaifudeen:)

வ அலைக்குமுஸ்ஸலாம்.உங்கள் குறிப்புகளின் ரசிகை நான்.உங்க வாழ்த்திற்கு ரொம்ப நன்றி முஹ்சீனா...

SSaifudeen:)

உங்கள் வாழ்த்திக்கு ரொம்ப நன்றி ஸ்வர்ணா...அப்படியே எடுத்து சாப்பிடுராதீங்க கம்ப்யுட்டர் ஸ்க்ரீன் வாயில் மாட்டிக்க போகுது.வேணும்ன்னா அட்ரஸ் தாங்க நான் கொரியர் பண்ணுறேன்:)
ஆமாம்ப்பா சவர்மாக்கு வேண்டிய எல்லா பொருட்களையும் மிக்ஸ் பண்ணும் போது இதையும் சேர்த்து மிக்ஸ் பண்ணுங்க.உங்களுக்கு இன்னும் கொஞ்சம் எழுமிச்சை டேஸ்ட் வேண்டும் என்றாலும் சேர்த்து கொள்ளலாம்:)

SSaifudeen:)

உங்கள் வாழ்த்திற்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி சுஸ்ரீ. ///சவர்மா... சூப்ப்பர்ர்மா!! ///ஹைய் ரைமிங் சூப்பரா இருக்கே!!!!

SSaifudeen:)

வ அலைக்குமுஸ்ஸலாம்....உங்கள் வாழ்த்திற்கு ரொம்ப நன்றி பார்வீன்...உங்கள் குறிப்புகளையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்...

SSaifudeen:)

வ அலைக்குமுஸ்ஸலாம்....அக்கா நீங்க யாரு??????ஓஓ!!!!நீங்க அந்த துபாய் மூணாவது தெருவுல ரெண்டாவது துபாய் குறுக்கு சந்துல துபாய் முதல் வீட்டில இருப்பீங்களே அவங்க தானே நீங்க:):):)...(எங்களுக்கேவா...)
உங்கள் வாழ்த்திற்கு ரொம்ப நன்றி நிஷா அக்கா...அதற்கென்ன அதான் இப்ப தெரிஞ்ச்சிகிட்டீங்களே இனிமே செய்து வீட்டை நீங்க அமர்க்கலப்படுத்துங்க:)

SSaifudeen:)

உங்கள் வாழ்த்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி கவி...

SSaifudeen:)

உங்கள் வருகைக்கும் உங்கள் விருப்பத்திற்கும் ரொம்ப நன்றி...உங்களுக்கு பதில் அனுப்ப எனக்கு கொஞ்ச நேரம் எடுத்துகொண்டு விட்டது காரணம் உங்க நேம் தெரியாமல் தான் இந்தியா...

SSaifudeen:)

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி...என்னுடைய முதல் படக் குறிப்பில் சொல்லி இருக்கேனே கவனிக்கலையாக்கா...

SSaifudeen:)

உங்கள் வாழ்த்திற்கு ரொம்ப நன்றி ஜெயா...

///பச்சை கண் குறிப்பு...///
அதுக்கு நான் அழகா சவர்மான்னு பேரு வெச்சு அனுப்பி இருக்கேன் நீங்க என்னடான்னா ஒரு புதுசா பேரு வக்கிறீங்களே ஜெயந்தி...:)
ஒன்னு பண்ணலாமா பேசாமல் அதுக்கு சிகப்பு ஒற்றை கண் குறிப்புன்னு வைக்கலாமா...(அவ்ளோ தான் யாரும் ஓபன் கூட பண்ணி பார்க்க மாட்டாங்க என்ன ஜெயந்தி...):)

SSaifudeen:)

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி கலா.கட்டாயம் செய்து பார்த்திட்டு பதிவிடுங்கள் கலா....

SSaifudeen:)

உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க ரொம்ப நன்றி லலி:)

SSaifudeen:)

சூப்பரா...........செஞ்சு இருகிங்க.................கண்டிப்பா ட்ரை பண்ணுறேன் அடுத்த குறிப்பு எப்பொ?................. :)

உங்கள் சூப்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ரூபி.கண்டிப்பா செய்து பார்த்திட்டு சொல்லுங்க:)இன்ஷா அல்லாஹ் இதோ உங்க குறிப்பை தொடர்ந்து வந்துகிட்டே இருக்கு...:)

SSaifudeen:)

இத எப்படி பார்க்காமல் விட்டேன்.
சூப்பரா இருக்கு சமீஹா..படங்களும் அருமை....எனக்கு ரொம்ப பிடிக்கும் சவர்மா...
வீட்டில் செய்தது இல்லை..கண்டிப்பா ட்ரை பன்றேன்...
வாழ்த்துக்கள்..இன்னும் நிரைய குறிப்பு அனுப்புங்கள்..
முதல் குறிப்புக்கு நான் கடைசியா விஷ் பன்றேன்....சாரி

ஹசீன்

இங்க சவர்மா மாஸ்டர் தேவைன்னு பேப்பர்ல படிச்சேன் உன்னோட ஐடி கொடுத்து கான்டக்ட் பன்ன சொல்லவா

எதுக்கு ஹசீன் சாரிலாம்? நீங்க வந்து வாழ்த்து சொன்னதே எனக்கு ரொம்ப பெரிய சந்தோசம்.உங்களுக்கு பிடிக்குமா ஹசீன்!!!!! இப்போ நீங்க செய்து பாருங்க ஊருக்கு வந்தால் நம்ம வீட்டுக்கு வாங்க அப்புறம் பாருங்க ... நீங்க, இப்போ போதும் மீதிய பார்ஸல் பண்ணி தாங்கன்னு சொல்லுற அளவுக்கு நான் உங்களுக்கு செஞ்சி தரேன் பாருங்க:)உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றிகள்...

SSaifudeen:)

நிஷா அக்கா இப்போ தான் நான் நிறைய சவர்மா மாஸ்ட்டரகலை உருவாகிட்டேனே அதுனால நீங்க எல்லோருடைய ஐடியையும் கொடுங்க அவங்களே செலெக்ட் பண்ணிப்பாங்க:)மறக்காமல் உங்க ஐடியையும் கொடுங்க சரியாக்கா...:)ஹீ...ஹீ...ஹீ...

SSaifudeen:)

சவர்மா செய்தேன்..நல்ல சுவையாக இருந்தது.குறிப்புக்கு நன்றிகள்

Kalai