Dengue fever -method to prevent

அனைவருக்கும் வணக்கம்.நான் புதிய உறுப்பினர்.அறுசுவை பகுதிகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. என்னுடய குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் வந்து மிகவும் கஷ்டப்பட்டோம்.என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் மருத்துவரிடம் காண்பிக்கவும்.102 டிகிரி க்கு மேல் காய்ச்சல் வந்தால் வலிப்பு வரும். இதற்கு ஈரத் துணியால் குழந்தை உடம்பை துடைத்து விடவும்.இது மருத்துவரை பார்க்கும் வரை குழந்தை உடல் சூடு தனிய உதவியாக இருக்கும். கொசு கடித்து தடிப்புடன் சிவந்து இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்கவும்.முடிந்த அளவுக்கு குழந்தைக்கு முழு கை,முழு கால் சட்டை போடுங்கள்.கொசு வலை போட்டு வையுங்கள்.எந்த குழந்தைக்கும் இந்த காய்ச்சல் வராமல் இருக்க நான் இறைவனை வேண்டுகிறேன்.

தோழி என்ன சொல்றீங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு நீங்க சொல்றது. என் குழந்தைக்கு நேற்று வரை இரண்டுநாட்கள் தொடர்ந்து 103 டிகிரி ஜூரம் இருந்தது. ஹாஸ்பிடல் போய் பார்த்து மருந்து கொடுத்த பிறகு இப்போ ஃபீவர் இல்ல. டாக்டர் இது நிமோனியா ஆரம்பநிலைன்னு சொன்னாங்க. நீங்க டெங்குன்னு சொல்றது எனக்கு குழப்பமா இருக்கு.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மிக்க நன்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு....
மேலும் சில அறிகுறிகள் இருந்தால் அதையும், மருத்துவ பரிசோதனைகளையும் தெளிவாக குறிப்பிட்டால் அனைவருக்கும் உதவியாகவும் குழம்ப செய்யாமலும் இருக்கும்..........

நித்யா குழப்பம் வேண்டாம் டாக்டர் கன்பார்மாக நிமோனியா என்று சொல்லி விட்டார் அல்லவா.... அதற்கான மருந்துகளை சரியாக கொடுங்கள் போதும்... டாக்டர், இன்னும் 2 நாள் பார்ப்போம் அல்லது இது எந்த வகை காய்ச்சல் என்று குறிப்பிட்டு சொல்லாமல் இருந்தால் நீங்கள் குழப்பம் அடையலாம் இப்போ பயப்படாதீர்கள்பா.... தாய்ப்பால் கொடுப்பதால் உங்கள் உடல்னிலையையும் பார்த்து கொள்ளுங்கள்... காய்ச்சல், சளி பிடிக்காமல் இருக்கவேண்டும்... அது தான் முக்கியம்............

ரொம்ப நன்றிங்க. இந்த இழைல தோழி சொல்லியிருக்கிற காய்ச்சல் பற்றிய விஷயத்தை படிச்சதும் எனக்கு தூக்கிவாரி போட்ட மாதிரி ஆயிடிச்சு. தோழி Vid வந்து விளக்கமா சொன்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கும். ஆமாம் டாக்டர் என் மகளுக்கு நிமோனியான்னு சொல்லிட்டாங்க இருந்தாலும் எனக்கு இப்ப ப்ளட் டெஸ்ட் எடுத்து க்ளாரிஃபை பண்ணிடலாமான்னு இருக்கு. நன்றி ப்ரியா பதிலுக்கு.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

டெங்கு காய்ச்சல் வந்தால் நம் உடலில் உள்ள ரத்தவெள்ளை அணுக்களை அதிகரிக்க வழிசெய்தால் போதும். அதற்கு பப்பாளி பழம் ஜுஸ் மற்றும் முழு பப்பாளியை கொடுக்கவும். இது டெங்கு வந்த என் மூத்தார் மகனுக்கு டாக்டர் சொன்னது இதை மட்டும் தந்து வந்தாலே போதும். கவலை படவேண்டிய அவசியம் இல்லை.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

There are preventives for dengu in homeopathy medicine... once u take a course of the preventive,U'll be safe for like 3-6 months... If there still is dengue in your area after the 3-6 months period, u can take another course of preventive again... It's safe for kids aswell... absolutely no side-effects...

Likewise, they also have preventive for swine flu, chikunguniya, jaundice etc... when any of these is prevalent in ur area, just take the preventive and U'll be safe...

Prevention is always better than cure... :)

வணக்கம் நித்யா.உங்களை பயமுறுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன்.மன்னிக்கவும்.என்னுடய குழந்தைக்கு 4 1/2 மாதம் ஆகின்றது.அவனுக்கு கொசு கடித்து காலிலும் கைஇலும் தடிப்பாக இருந்தது.நாங்கள் சாதாரண கொசு கடி என்று விட்டு விட்டோம்.மறு நாள் சிவந்து இருந்தது கொசு கடித்த இடத்தில்.3வது நாள் 102' காய்ச்சல் இருந்ததும் டாக்டரிடம் காண்பித்தோம்.கால்பால் மருந்து குடுத்தனர்.ஆனால் காய்ச்சல் விட்டு விட்டு வந்தது.நான்காவது நாள் அட்மிட் பண்ண சொல்லி விட்டார்கள்.அவனுடைய இரத்தம் பரிசோதனைக்கு அனுப்பி இருந்தோம்.டெங்கு என்பதை உறுதி செய்ய 3 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று சொல்லி விட்டனர்.அவனுடய வெள்ளை இரத்த அணுக்கள் 36000 இருந்தது.அவை 1 இலட்சம் முதல் 3 இலட்சம் வரை இருக்க வேண்டுமாம்.படிப்படி யாக என் மகனுக்கு குறைந்து அவை 19000 வந்ததும்,அவனுக்கு வெள்ளை அணுக்கள் உடம்பில் ஏற்ற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.2 யூனிட் உடம்பில் ஏற்றினார்கள்.ஆனால் மறுபடியும் 12000 ஆக குறைந்து விட்டது.டாக்டர்கள் சற்று அபாய நிலை என்று சொல்லி விட்டார்கள்.எங்களுக்கு அந்த நாள் இரவு நினைத்தாலே குலை நடுங்குகிறது.மறுநாள் மறுபடி 2 யூனிட் உடம்பில் ஏற்றினார்கள்.அன்று முதல் படிப்படியாக வெள்ளை அணுக்கள் ஏறின.1 இலட்சம் வந்ததும் ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்தனர்.இன்று அவன் நலமாக இருக்கிறான்.

4 1/2 மாத குழந்தைக்கு வெள்ளை அணுக்கள் குறைந்து விட்டதா? குழந்தை இப்ப எப்படி இருக்கு? கவனமா பாத்துக்கோங்க.....

குட்டி பாப்பாக்கு fever இல்லைனு சொல்லி இருக்கிங்க. ரொம்ப சந்தோஷம். கவனமா பாத்துக்கோங்க.....

hi deepa.,

ipa kulanthai nalla irukan.thanks

மேலும் சில பதிவுகள்