38வது வாரம்... .. உதவுங்கள்..

எனக்கு இது 38வது வாரம்...4 நாட்களுக்கு முன் டாக்டர் செக் செய்துவிட்டு இடுப்பு எலும்பு குறுகலாகயிருக்கு மற்றபடி நீரின் அளவு,குழந்தையின் பொஷிஷன் எல்லாம் நார்மல் தான் .. 1 வாரம் கழித்தும் எலும்பு விலகி கொடுக்கவில்லையெனில் ஆப்ரெஷன் தான் என்று சொல்லிடாங்க......
இப்போ 2 நாளா வெள்ளைப்படுதல் இருக்கு... அடிவயறில் வலியும் எப்போவாவது இருக்கு... குழந்தையின் அசைவும் கொஞ்சம் கம்மியாயிருக்கு.... இது நார்மல் தானா... இடுப்பு எலும்பு விலக சான்ஸ் இருக்கா?? ஏன் வெள்ளைபடுகிறது?? நார்மலுக்கு வாய்ப்பு உள்ளதா?? பயமாயிருக்கு... சொல்லுங்க பீளீஸ்... _________________________________________________________________________
தோழிகளே இன்னையில் இருந்து எனக்கு 9 மாதம் தொடங்குகிறது.. ஒரு 10 நாட்களாக வயற்றில் அரிக்க தொடங்கியது.. டாக்டர் லோஷன் கொடுத்தார்கள்.. ஆனால் இப்போ அரிப்பு அதிகமாயிருக்கு.. இரவுல துக்கத்துல சொரிஞ்டறதால காயமாயிடுது.. கை காலில் வேற இப்போ அரிக்க ஆரம்பிக்குது... காயமாகி ரத்தம் வேற வருது... டாக்டரை கேட்டா அப்படி தான் இருக்கும் நு சொல்றாங்க.. பீளீஸ் என்ன பண்ணலாம்னு சொல்லுங்க..

எனக்கு 6 மாதம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ளது. கடந்த 2 நாட்களாக குழந்தையின் அசைவை சரியாக உணரமுடியவில்லை.. இதற்கு முன்பும் கூட அசைவு கம்மியாகவேயிருக்கு...இப்பொது எல்லாம் அசைவு நன்றாகவே தெரியும் என்று என் தோழிகள் சொல்றாங்க...
ஏற்கனவே 2 மாத கருவை வளர்ச்சி சரியில்லாமல் கலைத்து விட்டார்கள்.... இது நார்மல் தானா... இல்லை எதாவது பிரச்சினையிருக்குமானு பயமாயிருக்கு.... உதவுங்கள்.....

தோழி ஒன்றும் பயப்படும்படி இருக்காது. சில நேரங்களில் குழந்தை தூங்கும். எதற்கும் டாக்டரை ஒரு முறை பார்த்து ஆலோசனை பெறவும். நல்லதே நடக்கும். தைரியமாய் இருங்கள்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ரொம்ப நன்றி பா உடனே வந்து பதில் சொன்னதுக்கு... கடவுளை தான் நம்பியிருக்கோம்... நீங்களும் எனக்காக பிராத்தனை பன்னுங்க பா...

ALL IS WELL

உங்க பெயர் என்ன? உங்களை பற்றி சொல்லுங்கள். நிச்சயமாக உங்களுக்காக என் பிரார்த்தனை இருக்கும்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

உங்க பெயர் என்ன? உங்களை பற்றி சொல்லுங்கள். நிச்சயமாக உங்களுக்காக என் பிரார்த்தனை இருக்கும்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

என்னனோட பெயர் சுஜி.. கல்யாணமாகி 2 வருடம் முடியபோகிரது பா... ஏற்கனவே ஒருமுறை கர்ப்பமாகி 2 மாதம் வளர்ச்சியில்லைனு கருகலைப்பு செய்த்தார்கள் பா....

ALL IS WELL

6 மாதம் தானே... எல்லா டாக்டரும் 8 மாதத்தில் இருந்து தான் குழந்தை அசைவை கவனிக்க சொல்வாங்க. பயப்பட வேண்டாம்... விரும்பினா தைரியத்துக்கு ஒரு முறை டாக்டர் பாருங்க. ஆனா எனக்கு தெரிஞ்சு இப்போ 6 மாதத்தில் குழந்தையின் அசைவை ரெகுலரா ஃபீல் பண்ண முடியாது. எப்பவாது தான் தெரியும். அதுவும் ஒரு சிலருக்கு தான். 8 மாசம் துவங்கினா எப்பவும் ரெகுலரா தெரியும். அப்போ தான் டாகடர்ஸ் ஒரு நாளை இத்தனை மோவ்மன்ட்ஸ் நீங்க உணரனும்னு சொல்லுவாங்க, அது குறைஞ்சா டாக்டரை உடனே பார்க்க சொல்வாங்க.

பயப்படாதீங்க, டாகடரை பார்த்துக்கங்க, உங்க பயம் போக. பிராத்தனைகள் என்றும் உண்டு... கவலை வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா உங்களுடைய பதிவு தைரியம் அளிக்குது. நன்றி..என்னுடைய சந்தேகத்துக்கு நீங்கயெல்லாம் பதிலளிப்பது சந்தோஷமாயிருக்கு... அனைவருக்கும் நன்றி தங்களுடைய பிராத்தனைகளுக்கு.... என்னோட கணவர் எனக்கு 3 மாதம் தொடங்கும் போதே வெளிநாடு சென்றுவிட்டார்..அவர் இப்பொ கூட இருந்தால் நல்லயிருக்கும் தைரியமாயிருக்கும் நு தோனுது பா...

ALL IS WELL

சுஜி தைரியமா இருங்க.உங்களுக்காவும் குழந்தைக்காகவும் நாங்க பிராத்திக்கிறோம்.குழந்தை நல்ல படியா பிறக்கும் சுஜி.

karparakshmbikai ammanukku vendikkonga appuram parunga ungakuzhanthaiyoda asaiva

உங்கலுடைய பதிவுகளுக்கும் பிராத்தனைகளுக்கும் ரொம்ப நன்றி பா.....

ALL IS WELL

மேலும் சில பதிவுகள்