பீர்க்கங்காய் பால் கூட்டு

தேதி: December 5, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

பீர்க்கங்காய் - ஒன்று
வெங்காயம், தக்காளி - ஒன்று
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 2
முதல் தேங்காய் பால் - கால் கப்
இரண்டாம் தேங்காய் பால் - கால் கப்
கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
உப்பு, கொத்தமல்லி - தேவைக்கு


 

பீர்க்கங்காயை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
இரண்டாம் தேங்காய் பாலுடன் பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வேக வைக்கவும்.
நன்கு சுண்டி, வெந்து வந்ததும், முதல் தேங்காய் பால், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். (கொஞ்சம் கெட்டியாக வேண்டுமெனில் அரிசி மாவை தண்ணீரில் கலந்து சேர்க்கவும்).
எண்ணெயில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வயிற்று வலி, அல்சர், உணவு ஓவ்வாமை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிடலாம். எனக்கு மருத்துவர் சொன்ன குறிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் கலர்ஃபுல் கூட்டு :) தொக்கு வகை முடிஞ்சுதா?? நல்லா இருக்கு கடைசி படம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் சூப்பர் ஹெல்தி கூட்டு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹெல்தியான சிம்ப்பிள் குறிப்பு. வாழ்த்துக்கள் கவிதா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கூட்டு அருமையாக இருக்கு.கவிதா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கூட்டு நல்லா செய்து இருக்கீங்க,முகப்பு படம் அருமை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

விருப்பப் பட்டியலில் சேர்த்தாச்சு.

‍- இமா க்றிஸ்

கவி பால்கூட்டு பார்க்கவே அழகா இருக்கு சுவையும் நல்லாருக்கும்னு தோணுது வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அருமையான,ஆரோக்கியமான குறிப்பு. பீர்க்கங்காய் பார்த்தாலே உங்க முகப்பு படம் தான் நியாபகத்தில் வரும்:) அந்த அளவுக்கு குறிப்பும் - படங்களும் டாப்.

எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின்,குழுவினருக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனி,
இன்னும் இருக்கு..எப்ப வேணும்னாலும் வரும்!!
வருகைக்கும்,பதிவிற்கும்,பாராட்டிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

கனி,
வருகைக்கும்,பதிவிற்கும்,பாராட்டிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

நித்யா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

ஹளிலா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

முசி,
வருகைக்கும்,பதிவிற்கும்,பாராட்டிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

இமா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

ஸ்வர்ணா,
கார குழம்பிற்கு சூப்பர் ஜோடி.செய்து பாருங்க
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

vibgy,
வருகைக்கும்,பதிவிற்கும்,பாராட்டிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

ஆரோக்கியமான குறிப்பு படங்கள் வழக்கம் போல அருமை கவி(:-
வாழ்த்துக்கள்!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா