பருப்பு சாதம்

தேதி: December 6, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (9 votes)

 

அரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - அரை கப்
சின்ன வெங்காயம் - ஒரு கப்
தக்காளி - 2
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்
சீரகம், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு
அரைக்க:
பச்சை மிளகாய் - 3
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
கிராம்பு - 2
சின்ன வெங்காயம் - 3
கறிவேப்பிலை
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 7 பல்


 

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். அரிசி மற்றும் பருப்பை சேர்த்து களைந்து நீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்க வேண்டியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றை தாளிக்கவும்.
தாளித்ததும் சின்ன வெங்காயம் (முழு வெங்காயமாக போடலாம்), தக்காளி மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகுமளவிற்கு வதக்கவும்.
பின்பு ஊற வைத்த அரிசி, பருப்பை சேர்த்து 1:2 விகிதத்தில் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 3 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
சுவையான பருப்பு சாதம் தயார். விரும்பினால் 2 தேக்கரண்டி நெய் சேர்க்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருள் சூப்பரா இருக்கு பருப்பு சாதம் கண்டிப்பா செய்து பார்த்து சொல்றேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அருட்செல்வி பருப்பு சாதம் ரொம்ப அருமையாக இருக்கு. கண்டிப்பாக செய்துப்பார்கிறேன்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

முதல் பதிவிட்டு வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி சுவா(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கண்டிப்பாக சமைத்துப்பாருங்கள் ஹலீ(:-
பாராட்டிற்கும்,பதிவிற்கும் மிக்க நன்றி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கும் குழுவினருக்கும் மிக்க நன்றி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பருப்புசாதம் சூப்பர் அருள். நான் வேறுமுறையில் செய்வேன். கொஞ்சம் கடலைபருப்பும் சேர்த்து. அடுத்தமுறை உங்க ஸ்டைல்லதான். வாழ்த்துக்கள் அருள்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பருப்புசாதம் நல்லா செய்து இருக்கீங்க.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கொங்கு நாட்டில் பருப்பு சாதம் செய்யாத வீடா? அதை உலகுக்கே அழகா பிரசன்ட் செய்த உங்கள் முயற்சியை வாழ்த்துகிறேன். சாப்பாடு இல்லைனாகூட பரவாயில்லை. சின்ன வெங்காயம் 2 கிலோ பார்சல்.பார்த்து எத்தனை வருசமாச்சு? :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

பருப்பு சாதம் ரொம்ப அழகா செய்து காட்டியிருக்கீங்க அருள்.நாளைக்கு இததான் செய்யணும் செய்துட்டு சொல்றேன் :)

Kalai

பருப்பு சாதம் மதியம் செய்து சாப்பிட்டாச்சு :) அருமையோ அருமை. செய்வதும் சுலபமா இருந்தது. வீட்டில் எல்லாருக்கும் பிடிச்சுது. நல்ல குறிப்புக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருள்,
அரைக்கும் பொருள் இல்லாமல் நானும் இப்படி செய்வதுண்டு..
அடுத்தமுறை உங்க முறைப்படி சுவையை enhance செய்துடுறேன்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இருமுறை பதிவு :(

என்றும் அன்புடன்,
கவிதா

பதிவிற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி நித்யா(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றிங்க முசி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அம்மாடி செயந்தி சின்ன வெங்காயம் கிலோ ரூ 50 சாமி!!!!!!
அரிசிம்பருப்பு சாதத்தை குறைவாக எடைபோடும் குடும்ப உறுப்பினர்களே உத்து பாத்து படிங்கோனு சொல்லப்போறேன்.

நன்றி தோழி பதிவிற்கும்,பாராட்டிற்கும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கண்டிப்பாக சமைத்து ருசித்து பதில்போடுங்கள், பதிவிற்கு மிக்க நன்றிங்க(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஐயோ என்னத்தைச் சொல்ல. இப்ப அதைத்தான் சமைத்து அடுப்பை நிறுத்திட்டு வந்திருக்கேன். சாப்பிட்டுட்டு வாரேன்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

வனி மிக்க நன்றி(:-
சமைச்சு ருசிச்சு பதில்போட்டு பருப்பு சாததோட பெருமைய ஊர் அறியச்செய்திட்டீங்க.

இன்னொரு விஷ்யம் அனைவருக்குமே-- அரிசிபருப்பு சாதம் இதனுடைய இன்னொரு பெயர். வீட்டிற்கு வரும் உறவினருக்கு இந்த சாதம் சமைத்து போடகூடாது எனச்சொல்வர். இத சாப்பிட கொடுத்தா மறுமுறை அந்த உறவினர் நம்ம வீட்டுக்கு வரமாட்டாங்களாம். திருமணம் முடிந்தவுடன் பெரியவர்கள் எனக்கு சொன்ன அறிவுரை இது. எனது அம்மாவும் உறவுகளுக்கு இதை சமைத்துப்போட்டதில்லை. இதை பற்றி யாராவது தெரிந்தால் கூறுங்கள் தோழிகளே!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பதிவிற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி கவி(:-
இது போல சமைத்துப்பாருங்கள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்க கூக்குரல கேட்டு ஓடோடி வந்தேன். இப்ப எந்தூரு ஒரம்பறை வந்துள்ளது கல்காரிக்கு. குடும்பத்திற்கு சமைப்பதற்கு என்ன பயம். இங்கு கோவையில் வாரம் ஒருமுறை இந்த ஐட்டத்த சமைத்து அசத்தும் பெண்மணிகள் இருக்காங்கப்பா!
கணவரோட சண்டையா? காலைல உப்புமா, மதியம் அரிசிம்பருப்பு என்ன ஒரு சரியான தண்டனை! இனி வருமா சண்டை. எங்கூட்டுக்காராரை சண்டைபோடவே யோசிக்க வெச்ச ஐட்டமல்லவா இது

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//உங்க கூக்குரல கேட்டு ஓடோடி வந்தேன். இப்ப எந்தூரு ஒரம்பறை வந்துள்ளது கல்காரிக்கு. குடும்பத்திற்கு சமைப்பதற்கு என்ன பயம். இங்கு கோவையில் வாரம் ஒருமுறை இந்த ஐட்டத்த சமைத்து அசத்தும் பெண்மணிகள் இருக்காங்கப்பா!
கணவரோட சண்டையா? காலைல உப்புமா, மதியம் அரிசிம்பருப்பு என்ன ஒரு சரியான தண்டனை! இனி வருமா சண்டை. எங்கூட்டுக்காராரை சண்டைபோடவே யோசிக்க வெச்ச ஐட்டமல்லவா இது// இந்த பதிவு எதுக்குன்னு புரியலயே?
//ஐயோ என்னத்தைச் சொல்ல. இப்ப அதைத்தான் சமைத்து அடுப்பை நிறுத்திட்டு வந்திருக்கேன். சாப்பிட்டுட்டு வாரேன்// இது எதுக்கு போட்டேனா. கரெக்டா அடுப்பை அணைத்துட்டு வந்ததும் உங்க பதிவு வந்திருந்தது. அந்த ஆச்சரியம்தான். சரி விசயத்திற்கு வாரேன். சாப்பாடு நல்ல மணமா சூப்பரா இருந்தது. செய்து ரொம்ப நாளாச்சு. அதுவும் அரைத்துவிடாம சாம்பார் பொடி போட்டு செய்வேன்.ஆனா இந்த சுவை எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது.:-)

எடிட்டிங் வேலை நடந்ததா? எதனால?

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

செயந்தி அப்ப நீங்க இந்த பதிவிற்கு //ஐயோ என்னத்தைச் சொல்ல//
இத சொல்லலயாப்பா ஓ மன்ச்சு நான் எழுதுனத பாத்துட்டு சொன்னீங்கனு நெனச்சேன். தப்பா எடுத்துக்காதீங்க தோழி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள், பருப்பு சேர்த்த ஐட்டங்கள்னாலே பால்மாறாம பக்கத்து வீட்டு சொத்தை கூட எழுதி வச்சுடுவேன் ;)) அம்புட்டு பிடிக்கும். பருப்பு சாதம் இது ஒரு விதமாக உள்ளது. அரிசிக்கு அரிசி தண்ணி அளவு வேறுபடுமே. அதான் என் பெரிய சந்தேகமே. அதனாலேயே இந்த குறிப்பு செய்ய முடியாமல் தடுமாறிட்டு இருக்கேன். ஊருக்கு போனதும் செய்து டேஸ்ட் பண்ணிடுவேன். முன்னை விட படங்கள் பளிச்.. என் பேவரட் குறிப்பு தந்ததற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் அருள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நல்ல வேளை பதிவு போட்டு என்னை ICU போகவிடாமல் காப்பாற்றினீர்கள். :-)அதுதான் நட்பு. என் நிலைமை ரொம்ப கவலைக்கிடமா போயிடுச்சி. இனி ரெண்டு நாளைக்கு பிஸி. வாரேன் பொறவு நல்ல விளக்கத்தோடு.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

பருப்பு சாதம் செய்தாச்சு.சுவையும்,மனமும் அருமையா இருந்துச்சு.இதேபோல் சுலபமான குறிப்புகள் நிறைய குடுங்க..வாழ்த்துக்கள்

Kalai

அருள் இன்னிக்கு பருப்பு சாதம் செய்தாச்சு ரொம்ப அருமையா சுவையா இருந்தது தேங்க்ஸ் பா குறிப்புக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இன்று உங்க பருப்பு சாதம் செய்து சாப்பிட்டாசு.செம ருசி.செய்து ரொம்ப நாள் ஆச்சு. ஊரை நியாபகபடுத்திட்டீங்க, நான் பட்டை,கிராம்பு சேர்க்காமல் செய்வேன்.
சேர்த்து செய்த போது மாறுபட்ட சுவையில் சூப்பராக இருந்தது .
தேங்க்ஸ் அருள் அருமையான குறிப்புக்கு.

கல்ப் மிக்க நன்றி உங்கள் பதிவிற்கும் பாராட்டிற்கும்(:-
நான் பொன்னி அரிசில சமைச்சேன், தண்ணீரின் அளவு வெள்ளை சாதத்திற்கு பயன்படுத்தும் அளவுதான். பருப்பிற்கும் 1:2 அளவிலேயே தண்ணீர் ஊற்றினேன். அதனால 2யும் ஒன்றாக எடுத்து அளந்து நீர் ஊற்றினாலெ சரியா இருக்கும்பா.
நன்றி கல்ப்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஜெயந்தி //எடிட்டிங் வேலை நடந்ததா? எதனால?//
எனக்கு ஒண்ணும் புரியலயே?
நான் எப்பவுமே கருத்து சொல்கவ அமுக்கிதான் பதில் போடுவேன். நான் அறுசுவைக்கு வந்த பிறகுதான் தமிழ் டைப் அடிக்க கத்துக்கிட்டேன். அப்பப சில எழுத்து பிழை,பெயர் விட்டு போதல் ஆகியவற்ரை சரி பண்ண எளிதாக இருக்கும்.
இங்க நான் எடிட்டிங் வேல எதுவுமே பண்ணலயே! நீங்க என்ன சொறீங்கப்பா புரியல எனக்கு.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப நன்றிங்க கலா உங்களோட பாராட்டுக்கும், பதிவிற்கும்(:- சமைச்சு பார்த்திட்டு பதிவு போட்டிருக்கிங்க மகிழ்ச்சியா இருக்கு.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க மகிழ்ச்சி(:- சமைச்சு பார்த்து பதில்போட்டு அசத்தும் சுவாவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தோழிகள் சமைச்சு சாப்பிட்டு பதில் போடுவது மனதுக்குள் மத்தாப்பு பூக்கவைக்கிறது. மிக்க நன்றி ப்ரியா(:-
நானும் பட்டை, கிராம்பு சேர்க்காமலும் சமைப்பதுண்டுப்பா. மேல கவி சொன்னமாதிரி எந்த பொருளுமே அரைத்து போடாமலும் சமைப்பதுண்டு.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பருப்பு சாதம் பார்க்கவே இவ்ளோ அழகா இருக்கே!!!சாப்பிட்டால்......கண்டிப்பா சாப்ட்டு பார்த்து சொல்லுறேன்...

SSaifudeen:)

கண்டிப்பா சமைச்சு சாப்பிட்டு பாருங்க ஷமீ(:-
பதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பருப்பு சாதம் செய்தேன் சம ருசி.நல்லா இருந்தது.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எங்க அம்மாவும் பருப்பு சாதம் செய்வார்கள், உங்க முறையில் இதுவரை இரண்டு முறை செய்தாயிற்று,சுலபம ,சுவையாக இருந்தது. நன்றி