வழி காட்டுங்கள்

எல்லா தோழிகளுக்கும் என் இனிய வணக்கங்கள்! என் பிரச்சனை என் மனதை அரித்து கொண்டு இருக்கிறது, அதை உங்கள் முன் வைக்க வேண்டும் போல் உள்ளது,தயவு செய்து என் பிரச்சனைக்கு வழி காட்டுங்கள். எனக்கு திருமணம் ஆகி 1.5 வருடங்கள் ஆகிறது, இருவரும் வேலைக்கு செல்வதால் அவரும் வீட்டு வேலைகளுக்கு உதவி செய்வார், தற்போது அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததும் நானும் என் வேலையை ராஜினாமா செய்து விட்டு அவருடன் பயணித்தேன். சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டை போட்டு என்னை 15 நாட்களிலேயே இந்தியாவுக்கு திரும்பி அனுப்பி விட்டார், நாங்கள் முன்பு வசித்த எங்கள் சொந்த வீட்டிலும் இருக்க கூடாது என அவர் பெற்றோர் மிரட்டுகின்றனர். எனக்கு குழந்தையும் இல்லை. என்னை பற்றி அவதூறாக மற்றவர்களிடம் கூறி எங்களை பிரிக்க பார்க்கின்றனர், என் கணவரும் இதற்கு உடந்தையாக உள்ளது தான் வேதனையாக உள்ளது. தயவு செய்து வழி காட்டுங்கள்!

uma neenga avar kitta pesineengala phonela pesunga avar kitta pesanathan sariyagum pesiparunga

uma neenga avar kitta pesineengala phonela pesunga avar kitta pesanathan sariyagum pesiparunga

உமா எப்படி இருக்கீங்க ? உங்க பதிவை பாத்தேன் . சண்டை எதனால் வருதுநு யோசிச்சு பாருங்க ? அவனகளுக்கு பிடிக்காததை நாம இழுக்கும் போதோ அல்லது நமக்கு பிடிக்காததை அவங்க இழுக்கும் போதோ வாய் வார்த்தைகள் அதிகமாரனால...
நாம ஏன் இறங்கி போகனும்னு நினைக்காம , இதை செய்யுங்க . அவங்க அப்புடி எதையாவது இழுக்கும் போது உங்க பக்கம் நியாயம் இருக்கும் போதும் நீங்க எதுவும் பேசாம மௌனம் சாதிச்சு பாருங்க.நல்ல ரிசல்ட் கிடைக்கும் .

அப்புறம் உங்க கணவர் வீட்டு சைடு எந்த அவதூறை சொன்னாலும் பொறுமையா இருங்க . கண்டிப்பா உங்க கணவர் உங்க கணவர் தான் .உங்க பக்கம் நியாயம் இருக்குற பட்சத்தில் உங்கள கூடிய சீக்கிரமா உங்க கணவர் கண்டிப்பா புரிஞ்சிக்கிருவாங்க. கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆயுள் முழுக்க நல்லா வாழ்வீங்க . dont worry ma.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

மேலும் சில பதிவுகள்