Hi all, Return Gift Ideas for a Housewarming ceremony - Please....

Hi friends,

புதுமனை புகுவிழாவிற்கான return gift ideas pls...

நாங்கள் புதிய வீடு வாங்கியுள்ளோம்..Feb -1 ல் புதுமனைபுகுவிழ function வைத்துள்ளோம்... எங்களது வீட்டிற்க்கு வருபவர்களுக்கு(friends &relatives)return gift கொடுக்க ideas please..(Budget Rs.100)

Thanks,

sorry....இருமுறை பதிவாகியுள்ளது...எப்படி delete செய்வதுன்னு தெரியவில்லை...

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

டியர் பத்மா,

மிக நெருங்கிய சொந்தமா இல்லை தூரத்து உறவு முறையா? அல்லது நண்பர்களா ? அதற்க்கு ஏற்ப்ப பரிசுகள் வாங்கவும்.எனக்கு தெரிந்த சில பொருட்கள் இதோ.

தொங்கும் விளக்குகள்(hanging lights) வெள்ளி பாத்திரங்கள் , அவசர விளக்குகள்(Emergency lamp) மணம் வீசும் மெழுகு வர்த்திகள் (Flavoured candels) சுவர் சித்திரங்கள் , சுவர் வரைகலைகள்(Wall arts) சுவர் கடிகாரங்கள் , கண்ணாடி பாத்திரங்கள்(dinner set,serving dish) எலக்ட்ரிக் அடுப்பு , பீங்கான் ஜார்கள் (உப்பு ,புளி ,ஊறுகாய் போட்டு வைப்பது என்று 4 வாங்கலாம்) வாட்டர் ஃபில்ட்டர், பிரட் டோஸ்ட்ர் ,(Toaster) சாண்ட்விச் டோஸ்டர், ஹேன்ட் மிக்ஸர்(Hand Mixer for Pastry making) மேலும் சிறிய ஃபர்னிச்சர்கள் (for kids room)

ஹேண்ட் பிளன்டர் (Hand Blender) இது ஒரு வரப்பிரசாதம். நம்மூர்லயும் கிடைக்கும். தமிழ்நாட்டு அன்பர்களுக்கு என்றால் அடிக்க வருவார்கள். மின்சாரமே இல்லாதப்போ இதுவான்னு. :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

hi freind avangaluku piditha swamy photo walla matra mathiri,illana swamy hotos light eriyara mathiri ,vilaku ,wallclock,showcasela vekkiramathiri ,dining set ippadi kodukalam

எங்களது வீட்டிற்கு வரும் friends &relatives gift கொடுக்க ideas pls..

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

ஒவ்வொருக்கும் என்று தனிப்பட்ட முறையில் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு வீட்டிற்க்கு ஒன்றா?

தனிப் பட்ட முறையில் என்றால் பெண்களுக்கு,ஆண்களுக்கு என்று பார்த்துக் கொள்ளவும்.

பர்ஸ் ,
சிறிய ஹேன்ட் பேக் ,
சிறிய பழக் கூடை,
காஃபி மக்(coffee mug),
சிறிய பாத்திரங்கள் (bowl with lid)
அஞ்சரை பெட்டி
போட்டோ பிரேம் (photo frame)
சிறிய நகைப் பெட்டி
ஸ்வீட் பாக்ஸ் மேலும்
Alarm clock ,
Air tight containers

இந்த மாதிரி கேள்வி கேட்குறப்ப உங்களோட பட்ஜெட் எவ்வளவுன்னு சொல்லலேன்னா, இந்த மாதிரித்தான் கண்ணாடி ப்ரேம்ல இருந்து கட்டில் மெத்தை வரைக்கும் ஆலோசனைகள் வரும். :-)முக்கியமா நீங்க சொல்ல வேண்டிய விசயம், ஒருத்தருக்கு அல்லது ஒரு ஃபேமிலிக்கு உங்களால எவ்வளவு செலவு செய்ய முடியும்ங்கிறதுதான். அது எவ்வளவுன்னு தெரிஞ்சாத்தான் உங்களுக்கு யூஸ் ஆகுற மாதிரி ஆலோசனைகள் கிடைக்கும்னு தோணுது. வீடு குடிபுகுற பங்சன் இல்லேன்னாலும், பொதுவா மத்த பங்சன்களுக்கு நான் எப்பவும் வெங்கல பொருட்களுக்கு போயிடுவேன். சின்ன பொருளா இருந்தாலும் பார்க்கிறதுக்கு ஒர்த்தா தெரியும். 40 ரூபாயில இருந்து வெங்கல தட்டுகள் கிடைக்குது. மொத்தமா வாங்குறப்ப இன்னும் குறைச்சுக்கூட வாங்கலாம். நடுவில பிள்ளையார் மாதிரி சாமி எல்லாம் இருக்கும். 80, 90 ரூபாய்க்கு பெரிய தட்டு, நடுவில சூடம் கொளுத்துற தட்டு, மூடி போட்ட குங்குமம், சந்தன சிமிழ் எல்லாம் வச்சு அழகான தட்டு கிடைக்குது. பார்க்கிறதுக்கு கோல்டு ப்ளேட் மாதிரி இருக்கும்.(இப்ப கடைசியா நவீனா பர்த்டேக்கு அதுதான் வாங்கினேன். பார்த்துட்டு எல்லாருமே ரொம்ப காஸ்ட்லியா இருக்குமேன்னு சொன்னாங்க. மொத்தமா வாங்கினப்ப ஒரு தட்டு 90 ரூபாய்க்குள்ளதான் வந்துச்சு.) கூடவே, ஒரு ப்ளாஸ்டிக் இலையில குங்குமம், மஞ்சள் டப்பா வச்சு, தாம்பூல பாக்கெட்ல போடுற மாதிரி ஒரு பொருள் 5, 6 ரூபாயில கிடைக்குது. அதையும், ஒரு சாக்லெட்டையும் நல்ல தரமான, அழகான பையில போட்டு கொடுக்கலாம். ஒரு பை நூறு ரூபாய் அடக்கம் வரும். இதையே தட்டை சின்னதா போட்டு ஐம்பது ரூபாய் அடக்கத்துக்கும் செய்யலாம். இன்னும் பெரிசா 200 ரூபாய்க்கும் செய்யலாம். உங்க பட்ஜெட் முக்கியம். அதை சொன்னீங்கன்னா, இன்னும் உருப்படியா எதாவது சொல்ல முடியும். :-)

மேலே உள்ள பதிவை கொடுத்த பிறகுதான் உங்களுடைய signature ல் இருக்கும் Psalm verse ஐ பார்த்தேன். உங்கள் பெயரை மட்டும் பார்த்து கொடுத்த ஆலோசனை அது. உங்களுக்கு அது பயனுள்ளதாக இருக்காது என்று இப்போது தோணுகின்றது. பட்ஜெட் சொல்லுங்கள். வேறு ஏதேனும் உருப்படியாக ஆலோசனை கொடுக்க முடியுமா என்று பார்க்கின்றேன்.

ஆமாங்க மற்றவர்கள் சொன்னது போல் உங்க பட்ஜெட் தெரிந்தால் ஆலோசனை சொல்ல ஏதுவாக இருந்திருக்கும்..

1) சின்ன ப்ளாஸ்டிக் டப்பாஸ்
2) ஸ்டீல் கின்னம்
3) ப்ளாஸ்டிக் கின்னம்
4) அலாரம் டேபிள் கிளாக்
5) குட்டி சாமி சிலைகள்
6) மினி சாக்லெட் பாக்ஸ்
7) பித்தளை அல்லது வெள்ளியில் சின்ன குங்கும சிமிழ்
8) அழகாய் குழந்தை படங்கள்

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

padma sry chinna baskets,plates,kutti sami vigragam,azhaga plasticla kungumachimizh kannadi vechadu,snacks cups idhu kodukalam

மேலும் சில பதிவுகள்