தோழிகளின் பதில் வேண்டும்

தோழிகளே வணக்கம் ,எனக்கு 29 வது வாரம் நடக்கிறது ,இன்று ஸ்கேன் செய்ததில் மருத்துவர் குழந்தை நன்றாக இருக்கிறது .குழந்தைக்கு எந்த ப்ரோப்ளமும் இல்லை என்று சொல்லி விட்டார் ,ஆனால் நஞ்சுக்கொடி கொஞ்சம் (placenta unhealthy) ஆக உள்ளது என்று கூறினார் ,இதனால் நார்மல் அமைவது கொஞ்சம் சந்தேகம் ,எனவே சிசேரியன் செய்ய வேண்டி இருக்கலாம் என்று கூறி விட்டார் ,உணவில் உப்பு,காரம் குறைத்தால் பலன் தருமா ?ஆனால் அது சரியாகும் பட்சத்தில் நார்மல் ஆகலாம் என்று சொன்னார் ,எனவே நஞ்சுகொடி ஆரோக்கியமாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்.,இதனால் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா ?எனவே இதை நினைத்து எனக்கு பயமாக உள்ளது தோழிகளே ,நீங்கள் தான் எனக்கு உதவ வேண்டும் .தயவு செய்து எனக்கு பதில் கூறுங்கள் தோழியரே .

பாரதி, எனக்கு நீங்க கேட்ட கேள்விக்கு பதில் தெரியாது பா.. இப்படி ஒரு விஷயத்தை இப்போது தான் கேள்விபடுகிறேன் ;( இருந்தாலும் உங்க பதிவை பார்த்துட்டு போக மனசில்லை. தெரிந்த தோழிகள் நிச்சயம் பதில் தருவாங்க.. நீங்க வீணாக கவலைபட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க. சிசேரியன் ஆகும்னு சொன்ன பல பிரசவங்கள் கடைசி நிமிடத்தில் நார்மலாகி உள்ளது. நல்லதே நடக்கும்னு நம்புங்க. பிடிச்ச கடவுளை மனதார வணங்குங்கள். சத்தான உணவு எதையும் தவிர்க்காமல், இந்த சமயத்தில் சாப்பிட கூடிய, சாப்பிட வேண்டிய அனைத்து உணவுகளையும் உண்ணுங்கள். நஞ்சுக்கொடி ஆரோக்கியமாக என்ன மாதிரி உணவு எடுத்துக் கொள்ளவேண்டும் என உங்கள் மருத்துவரே சொல்வார்.. அதன்படி உண்ணுங்கள். சுகப்பிரசவத்தில் ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள் பாரதி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனக்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி கல்பனா ,நான் அந்த கடவுளை தான் நம்பி இருக்கிறேன் ,சத்தான உணவுகள் எடுத்துக் கொண்டு இருக்கிறேன் ,அது மட்டும் போதாது என இப்போது தான் தெரிகிறது ,சுகப் பிரசவமோ ,சிசேரியனோ எனக்கு குழந்தை நல்ல படியாக வெளியே வந்தால் போதும் ,எனக்கு ரொம்பவும் பயம் என்னவென்றால் ,நஞ்சுக்கொடி வீக் என்று மருத்துவர் சொன்னதால் என் மூலமாக குழந்தைக்கு தேவைப்படும் சத்துக்கள் அதற்கு கிடைக்காமல் போய் விடுமோ என்று மட்டும் தான் .இங்கே என் தோழி ஒருவர் நஞ்சுக் கொடி வேறு ,குழந்தைக்கு உணவு செல்லும் தொப்புள் கொடி வேறு என்று சொல்கிறார் ,அது உண்மையா ?நான் இரண்டும் ஒன்று என்று தான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன் .மேலும் நேற்று மருத்துவர் எனக்கு bp 130/80 இது கொஞ்சம் அதிகம் என்கிறார் .அப்படியா ?சுகர் கூட கொஞ்சம் கண்ட்ரோல் ஆகணும், அதற்காக உணவில் உப்பு ,சர்க்கரையை மிகவும் குறையுங்கள் என்கிறார் .இந்த குழப்பங்களை நீங்களோ ,மற்ற தோழிகளோ எனக்கு கொஞ்சம் தெளிவாக்குங்களேன்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

தோழி பாரதி,
நீங்கள் கேட்ட விவரம் எனக்கு தெரியவில்லை...மனதை குழப்பி கொள்ளாமல் ரிலாக்சாக இருங்கள்....நல்ல முறையில் சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றெடுக்க இறைவன் துணை புரிவார்...நானும் உங்களுக்காக ப்ரார்த்தித்து கொள்கிறேன்....

முதலில் பயத்தை விடுங்க தைரியமா இருங்க. உங்க பயம், பதற்றம், குழப்பம்தான் குழந்தையை முக்கியமா பாதிக்கும். எனக்கு தெரிஞ்சு நஞ்சுக்கொடியும் தொப்புள்கொடியும் ஒன்னுதான்பா. டாக்டர் குழந்தை நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்கதானே? அப்படின்னா குழந்தைக்கு தேவையான சக்தி சரியா போய் சேருதுன்னுதானே அர்த்தம்? அப்பறமும் உங்களுக்கு ஏன் இந்த வீணான கவலை? சந்தோஷமா இருங்க நல்லபடியா குழந்தை பிறக்க ப்ரார்த்தனைகள் பாரதி.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இன்னொரு விஷயம். சிலபேர் பிரசவத்த பத்தி பலதும் சொல்லி குழப்பி பயமுறுத்துவாங்க. அதையெல்லாம் காதுலயே வாங்காதீங்க. அதே போல சிசேரியன்னு சொல்லி லாஸ்ட் மினிட்ல நார்மல் டெலிவரியும் ஆகியிருக்கு, நார்மல்னு சொன்ன என்னைமாதிரி ஆளுங்களுக்கு சிசேரியனும் நடந்திருக்கு. சோ எதுவானாலும் பயம் வேண்டாம். உங்கள் செல்லம் நல்லபடியா உங்களை கஷ்டப்படுத்தாம பிறப்பாங்க. டேக்கேர் பாரதி.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Enanku 23 vayathu. Thirumanamagi 2 year's agirathu. 3 murai karutharithu kalaithullen. En kanavaruku ippothu than en vethanai purinthathu. Medicalil tablet pottu than kalaithen. Enaku virupam illamal than intha kodumai seithen. Ippothu petru kolla aasaipadugiren aanal Kari thangavillai. Kadaisiyaga june madham kalaithen. Meendum ini enaku antha bakyam kidaikuma? Illai aandavan thandithano? Enaku yarum illai. 4 suvare en nanban. Plz reply me.

பாரதி கவலைப்படாதீங்க.....எல்லாம் நல்ல படியா நடக்கும். நல்ல சத்தான உணவுகளை சாப்பிட்டு மனச ரிலக்ஸா வச்சுக்கோங்க......

Hello Bharathi,

நஞ்சுக்கொடியும்(Placenta),தொப்புள்கொடியும்(umbilical cord)ஒன்னு கிடையாது.அது இரண்டும் வேற.

நஞ்சுக்கொடி(Placenta): அது நம்ம ரத்தத்துல இருந்து Oxygen மற்றும் அத்தியாவசமான ஊட்டச்சத்துக்கள உறிஞ்சும்(that stores food and stuff for the baby).

தொப்புள்கொடி:இந்த நஞ்சுகொடில இருந்து பேபி கு food supply பண்ற ஒரு tube(connects the placenta to the baby).

So Unhealthy Placenta slightly(கொஞ்சமா) Babys growth affect pannum.
But நீங்க கவலைபடாதீங்க,இத Proper Diet follow பண்ணி நாம சரி பண்லாம்.neenga Doctor கிட்ட discuss பண்ணுங்க,இது எல்லாம் ஒரு ப்ரோப்லேம் கிடையாது.Medical Dept எவ்வளவோ improve ஆகிடுச்சி.

In your Diet pls Include following things,
1.நிறைய தண்ணி குடிங்க(Drink Plenty of water)Unlimited.
2.Vitamin C rich foods(Increases the Blood flow to the baby
3.Rich in Protein Food
4.Calcium and Magnesium supplements.
5,Iron rich Food.. And So many things Consult with ur doctor.

So dont worry...Haapy and Healthy Pregnency..I also Pregnent with 21 weeks.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

எனக்காக பதில் சொன்ன தோழி நித்யாவுக்கு மிக்க நன்றி ,ஷமீலா ,சதிகா தோழிகளின் பதிலுக்கும் எனது நன்றி ,எனக்காக நீங்கள் அனைவரும் கடவுளை வேண்டுவது மிகவும் ஆறுதலாக உள்ளது ,.
தோழி வெண்ணிலா முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் .உங்களுடைய பதில் தெளிவாக எனக்கு புரிகிறது ,நஞ்சுக் கொடி வீக் ஆக உள்ளதற்கு காரணம் என்னுடய டயட் என்று இப்போது தான் தெரிகிறது ,ஏனெனில் நான் நான்-வெஜ் சுத்தமாக எடுப்பது கிடையாது ,அது தான் என்று இல்லை ,உணவில் தினமும் காய்கறி சேர்ப்பது இல்லை ,ஏதோ கடமைக்கு உண்கிறேன் என்பது போல் தோன்றுகிறது ,ஆனால் இனி நான் அப்படி இருக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன் ,எனக்கென்று தனியாக ஒரு உணவு பட்டியல் அதாவது சத்துணவு பட்டியல் போட்டு உண்ணப் போகிறேன் .
எனவே தோழிகள் எப்படி எந்தெந்த உணவுகள் +எந்தெந்த மாதிரி பழச்சாறு வகைகள் +இதர தானிய வகைகள் உண்ணலாம் .
அதாவது வாரத்தில் ஏழு நாட்களுக்கு எப்படி சத்தான வகையில் உணவு வகைகளை உண்ணலாம் என்று எனக்கு சொல்லுங்களேன் ,ஏனெனில் உங்களைப் போன்ற தோழிகள் அனுப்பும் பதில் என்னைப் போன்றோருக்கு மிக்க உதவியாக இருக்கும் என நினைக்கிறேன் .நீங்கள் அனுப்பும் பதில் என் வயிற்றிலிருக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்க உதவும் .விரைவில் தோழிகளின் பதிலை எதிர்பார்க்கிறேன் .நன்றி

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்