ட்ரைனிங் நர்ஸ் கவனம் தேவை..........

என் அக்கா மகளை சில தினங்களுக்கு முன் உடம்பு சரியில்லாமல் மருத்தவமனையில் வைத்து இருந்த விஷயம் உங்களில் பல பேருக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்...
நாங்கள் சென்ற மருத்துவமனையில் நிறைய ட்ரைனிங் சிஸ்ட்டர்ஸ் வொர்க் பண்ணுனாங்க.அப்போ எங்களுக்கு இவங்களெல்லாம் ட்ரைனிங்கிர்க்காக வந்து இருப்பவங்க என்று தெரியாது.
டாக்டர் குழந்தைக்காக சில மருந்துகளை எழுதி தந்தார்.நாங்களும் அதை மெடிக்கலில் வாங்கி எங்கள் ரூம் பக்கமாக சென்ற நர்சை அழைத்து எப்போ எப்போ குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டோம்.அவர் சில டானிக்கை எடுத்து குறிப்பிட்ட வேலைகள் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.அப்பொழுது ஒரு பாட்டிலை காண்பித்து இது டைஜன் சிரப் இதை சாப்பாட்டிற்கு பின் மூன்று வேலை கொடுங்க என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.நிறைய டானிக் பாட்டில் இருந்ததால் நாங்களும் இதை படிக்காமல் விட்டு விட்டோம்...டாக்ட்டர் தந்த டானிக்க கொடுப்பதற்காக அதை ஓப்பன் பண்ணி கொண்டு இருந்தோம்.ஆண்டவன் உதவியால் அந்த டைஜன் என்று சொன்ன சிரப் மட்டும் ஓப்பன் பண்ண முடியாமல் வலுவாக இருந்தது எனவே நான் என் கணவரிடம் ஓப்பன் பண்ணி தருமாறு கொடுத்தேன்.கொடுத்திட்டு சீக்கிரம் தாங்க குழந்தை குடிக்கிரதோடு இதையும் சேர்த்து குடிக்க வைக்கணும் அப்பறம் மாட்டேன்னு சொல்லுவாள் என்று சொல்லி கொண்டு இருந்தேன்.உடனே என் கணவர்...
என்னது!குடிக்கவா???இது லோசன்.உடம்புக்கு தேய்ப்பது.ஃபார் எக்ஸட்டர்னல் யூஸ் ஒன்லி என்று உள்ளது நல்லா பாருன்னு சொன்னாங்க. அப்படியே எங்க எல்லோருக்கும் ஒரு செகேன்ட் அதிர்ச்சியாகிவிட்டது.ஏற்கனவே குழந்தை கையில் ட்ரிப்போடும்,ஒரு நாளைக்கு ஒரு தடவை இரத்தம் எடுத்து கொண்டு வேதனையில் உள்ளால் நாங்கள் செய்ய விருக்கும் தவறால் அவளுக்கு ஏதாவது நடந்து இருந்தால் யோசிக்கவே எங்களுக்கு பயமாக இருந்தது.நான் இவங்களிடம் அந்த சிஸ்டரை சொல்லாமல் (சொன்னால் ஹாஸ்பிடலில் போய் கப்ளின் பண்ணுவாங்களேன்னு)நான் ஏதோ மழுப்பி விட்டு அந்த சிஸ்டரை போய் பார்த்து கேட்டேன் அதுக்கு அந்த சிஸ்டர் சிரிச்சி கிட்டே அசால்ட்டா சொன்னிச்சி பாருங்க ஓஓ... நான் டைஜன்னு சொல்லிட்டேன்லே இது லோசன்ப்பா அப்படீன்னு, அப்படியே எனக்கு நாலு கேள்வி கேட்கணும் போல் இருந்தது.என்ன பண்ணுறது இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கே தானே இருந்து ஆகணும் இவங்களை தானே எதற்கெடுத்தாலும் அழைக்கணும் என்று சும்மா அமைதியா இருந்திட்டு நானும் சிரிச்சிகிட்டே நாங்க மட்டும் எங்க குழந்தைக்கு கொடுத்து இருந்தால் எங்கள் குழந்தை நிலைமையும் உங்க நிலைமையும் என்ன ஆகுறதுன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
இதை எங்களுக்கு முன்னரே வந்த எங்கள் பக்கத்து ரூம் காரவங்களிடம் சொல்லிகாட்டிய போது தான் அவங்க சொன்னாங்க இவங்களெல்லாம் ட்ரைனிங்கிற்காக வந்தவங்க இவங்களிடம் ஒன்னும் கேட்க்காதீங்க எதுவா இருந்தாலும் கீழே சீனியர் நர்ஸ் இருப்பாங்க அவங்களிடம் போய் கேளுங்கன்னு சொன்னாங்க.அப்புறம் அந்த டானிக்கை எல்லாத்தையும் எடுத்து கொண்டு சீனியர் நர்சிடம் காட்டி கேட்ட பொழுது அந்த ட்ரைனிங் நர்ஸ் சொன்ன சில வேலைகள் தவறுதலாக இருந்தது.இருந்தாலும் ஒரு தடவை மட்டும் கொடுத்து இருந்ததால் அட்ஜஸ்ட் பண்ணி கொண்டோம்.அப்பறம் எந்த ஒரு அவசரம் என்றாலும் அந்த சிஸ்டரை கூப்பிடுவதையே நிறுத்தி விட்டோம்.அவங்களை மாதிரி நிறைய ட்ரைனிங் நர்ஸ் அங்கே வேலை பார்த்தார்கள்...
டாக்டருக்கு அடுத்த படியாக நாம் நம்புவது நர்ஸ்களை தான்.டாக்டரிடம் கேட்க தயங்கி கொண்டு நம்மில் பலர் நர்ஸ்களின் உதவியை தான் நாடுவோம். ஆனால் இவங்களும் இப்படி ஆஜாக்கிரதையா நடந்து கொண்டால் ஒட்டுமொத்த செவிளியர்களையும் சந்தேகம் படும் படி கொள்கிறது.ட்ரைனிங் டீச்சர் தான் நான் நிறைய பார்த்திருக்கிறேன்.அவங்க தவறா சொல்லி தந்து நாம் பரீட்சையில் பெயில் ஆனால் அடுத்த முறை பார்த்து கொள்ளலாம்.ஆனால் தவறுதலலான மருதத்துவத்தால் உயிருக்கு ஏதேனும் ஆனால்....
எனவே மனித உயிரை காக்கும் மகத்தான பணி செய்யும் செவிலியர்களே தெரியாமலும் சந்தேகத்தோடும் நோயாழிகளுக்கு ஆலோசனை சொல்லாதீர்கள்.அங்கு தெரிந்தவங்களிடம் கேட்டு சொல்லுங்கள்.ஒவ்வொரு நோயாழிகளும் நாம் முழுமையாக குணமடைந்து தான் வீடு திரும்புவோம் என்ற நம்பிக்கையில் மருத்துவனைக்கு வருகிறார்கள் எனவே அவர்கள் நம்பிக்கை நூறு சதவிகிதம் சரி என்று நீங்கள் அவர்களுக்கு நம்பிக்கை கொடுங்கள்:)

ஷமீஹா நல்ல தகவலை சொல்லிஎல்லோரையும் உஷார் படுத்தி இருக்கீங்க.
எப்பவும் மருந்து வாங்கினதும் அதிலுள்ள தேதியை பார்க்கணும்.
அப்புறம் என்ன எழுதி இருக்குன்னு முடிஞ்ச வரை புரிஞ்சுக்கணும்.
நர்ஸ் கிட்டகேட்பதை தவிர்த்து டாக்டர்கிட்ட கேட்கணும்
நாம் தான் கவனமா இருக்கணும்

ஆமா நிகி நீங்க சொல்லுறது ரொம்ப சரிதான்...ஆனால் இப்போ டாக்டருடைய பாதி வேலைய நர்ஸ் தானே பாக்குறாங்க.எனக்கு தெரிந்த வரைக்கும் எங்கள் ஊரில் டாக்டரின் வேலை மருந்து எழுதி தருவதோடு சரி.அதை எப்போ எப்போ கொடுக்கணும்ன்னு என்று சொல்வதெல்லாம் நர்ஸ் தான்....

SSaifudeen:)

ஷமீஹா
டோசேஜ் அப்புறம் வெளிப்பிரயோகமா அல்லது உள்பிரயோகமான்னு இதெல்லாம் நாம கட்டாயம் பார்க்கனும். அவங்களை விட நாம ஜாக்ரதையா இருக்கணும்

உஷார்படுத்தும் ஒரு இழை..ட்ரெய்னிங் நர்ஸ் மட்டுமில்லை ட்ரெயினிங் மருத்துவர்களை கொண்டு உயிரில் விளையாடும் சம்பவமும் உண்டு..என் உறவினர் ஒருவர் சாதாரண ஹெர்னியா ஆப்ரேஷனுக்கு போய் கோமா நிலைக்கு சென்று மாதக்கணக்கா படுக்கையில் அசைவில்லாமல் படுத்து உயிரிழந்தார்.சிலது நம் கைய்யில் இல்லை ஆனால் மருந்துகளை பொருத்தவரை எப்பவுமே உள்ள பிரிச்சு அதன் விளக்கத்தை படிச்ச பின் தான் கொடுக்கணும்..
சில சமயம் மறந்து போய் கூட மாற்றி சொல்லலாம்..இல்ல ஃபார்மசியில் அவர்கள் தவறுதலாக சொல்லலாம்..என் மகளுக்கு குழந்தையாக இருந்தபோது தந்த மருந்து ஒன்று பெரியவர்களுடைய டோஸில் இருந்தது பெயர் ஒன்று தான்...நான் எப்பவுமே படிக்காமல் கொடுக்கவே மாட்டேன் அதனால் படித்து பார்க்கவும் குழந்தைகளுக்கு ஏற்றதல்லன்னு பார்த்ததும் பார்மசிக்கு போய் கேட்ட்யேன்..தவறுதலாக தந்துவிட்டதாக வாங்கி குழந்தைகளுடையதை தந்தாங்க...
இப்படியும் நடக்கலாம் அல்லது சிலருக்கு மருந்தை கொஞ்சம் ஊற்றிவிட்டால் தான் சமாதானம்னு இருக்கவங்களுக்கு அதன் சைட் எஃபெக்ட்ஸ் எல்லாம் படிச்சு பார்த்தால் கொஞ்சம் பயமும் வரும்.

ஷமீஹா நீங்க இந்த தகவலை என்கிட்ட சொல்லும்போது ரொம்ப அதிர்ச்சியா இருந்ததுப்பா. எனக்கும் பிரசவமாகி 3வது மாதத்தில் இதே போல ஒரு அனுபவம் உண்டு. அதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். பிரசவமான இரண்டரை மாதத்தில் எனக்கு மஞ்சள்காமாலையுடன் மலேரியா இருப்பது தெரிய வந்து எனக்கு பிரசவம் நடந்த மருத்துவமனையிலேயே அட்மிட் செய்தாங்க. பச்சைக்குழந்தையுடன் தங்க வேண்டிய சூழ்நிலை. அதனால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார் என் கணவர்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

செலவைப்பற்றி கவலைபடாமல் அங்கு இருந்த 'ஒரே' ஏ.சி. ரூம் ஒப்புக்கொண்டு அட்மிட் ஆனேன். எல்லாருமே ட்ரெயினிங் நர்ஸ்தான். ஒருவர்கூட சீனியர் நர்ஸ் கிடையாது. நாங்க அட்மிட் ஆன அன்னைக்கு இரவு பெட் கவர் மாற்றினாங்க ஒரு புது ட்ரெயினர். அவங்க மாற்றிவிட்டு போனதும் நான் குழந்தைக்கு பால் கொடுத்துகிட்டே பக்கத்தில் படுக்க போட்டுகிட்டேன். எனக்கு தொடர்ந்து ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. கொஞ்சநேரத்தில் எனக்கு உடம்பெல்லாம் எறும்பு கடிப்பதுபோல உணர்ந்தேன். எழுந்து பார்த்தால் மாற்றி போட்ட பெட் கவர் முழுக்க எறும்புகள்:( நான் பதறிப்போய் குழந்தையை தூக்கிக்கொண்டேன்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

என் கூட என் பாட்டி தங்கியிருந்தாங்க, அவங்ககிட்ட அவசர அவசரமா குழந்தையை கொடுத்து எறும்பு குழந்தையை கடிச்சிடப்போகுது இருக்கா பாருங்கன்னு கொடுத்துட்டு, ட்ரிப்ஸ் ஸ்டாப் பண்ணிட்டு நர்ஸ கூப்பிட காலிங்பெல் இருந்தது அந்த ரூம்ல எத்தனை முறை பெல் அடிச்சும் யாரும் வரல. வெறுத்துபோய் நானே கீழ இறங்கி போய் நர்ஸ கூப்பிட போனா நல்லா இழுத்து போர்த்திகிட்டு தூங்குறாங்க. பெட்கவர் பற்றி சொல்லி மாத்த சொன்னா அந்த பொண்ணு அது நல்லா துவைச்ச பெட்கவர்தான் மேடம் எறும்பு இருக்க வாய்ப்பே இல்லன்னு பேசினாங்களே தவிர மேல வந்து பார்க்கவே இல்ல.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கடைசியா நான் அவங்கள பிடிச்சு நல்லா சத்தம் போட்டு டாக்டர்கிட்ட கம்ப்ளைண்ட் பண்றேன்னு சொன்னதும் மேல வந்திச்சு அந்த பொண்ணு. சரி வந்து வேற பெட்கவர்தான் மாத்தப்போகுதுன்னு பார்த்தா, ஆமா மேடம் எறும்பு இருக்கு இருங்க நான் தட்டி விட்டுடுறேன். அப்பறம் தூங்குங்கன்னு சொல்லுது. எனக்கு வந்ததே கோவம். வேற பெட்கவர் போட சொன்னா போடவே இல்ல கடைசிவரை. அப்பறம் குழந்தையும் நானும் பாட்டியோட தரையில பாய் போட்டுகிட்டு ட்ரிப்ஸ் ஏறினபடி கிடக்க படுத்தோம்:(

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மறுநாள் டாக்டரிடம் கம்ப்ளைண்ட் செய்தும் பெட்கவர் மாற்ற சொன்னாங்களே தவிர அந்த பொண்ண என்னன்னு கூட கேக்கல. எல்லாரும் சம்பளம் இல்லாம வேலை செய்றவங்களாச்சே! எங்க சத்தம்போட்டா சம்பளம் கொடுத்து நர்ஸ் வேலைக்கு ஆள் வைக்கனுமோன்னு நினைச்சாங்க போல. டாக்டரிடம் சொல்லியும் பலனில்லை. வேற வழியில்லாம 4 நாள்தானேன்னு பல்ல கடிச்சுகிட்டு இருந்துட்டு வந்தோம். என் கணவர் ரொம்ப கொதிச்சு போய்ட்டார். ஹ்ம்ம் என்னத்த பண்றதோ!

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தளிகா அக்கா படிச்சவங்களே கவனக்குறைவா செயல் படும் பொழுது(எங்களை சொல்லுறேன்)படிக்காத எத்தனையோ பேர் அவங்க வார்த்தைய மட்டுமே நம்பி செயல்படுராங்களே அவங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் என்ன பண்ணுவாங்க என்று நினைக்கும் பொழுது மனம் ஒரு கணம் பதறுகிறது...
எங்க அக்கா சொல்லுறாங்க ...நல்ல வேலை இவங்க(என் கணவர்) சொல்ல போய் இல்லாட்டி நான் மட்டும் இருந்தால் எப்படியாவது கஷ்டப்பட்டு திறந்து அதை குடிக்க கொடுத்து இருப்பேன் என்று...நோய் எதிர்ப்பு சக்தி கம்மியா உள்ள இந்த நேரத்தில் இப்படிலாம் அந்த குழந்தைக்கு நடந்தால் அவள் நிலைமை என்ன ஆகுறது???அல்லாஹ் காப்பாத்தினான் நினைக்கும் போதே ஜிவ்வுன்னு ஏறுதுக்கா....

SSaifudeen:)

மேலும் சில பதிவுகள்