இறால் பிரியாணி

தேதி: December 13, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (6 votes)

 

அரிசி - ஒரு கப்
இறால் - அரை கப்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 4 (அ) 5
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் - ஒன்று
பிரியாணி மசாலா - 2 தேக்கரண்டி
சீரக சோம்புத் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
ஆரஞ்ச் நிற கேசரி பவுடர் - ஒரு பின்ச்
தயிர் - அரை கப்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு


 

முதலில் அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து களைந்து தண்ணீரை வடித்து வைத்து கொள்ளவும். எலுமிச்சையை சாறு எடுத்துக் கொள்ளவும். இறாலுடன் பாதி தயிர், பாதி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து ஊற வைத்து விடவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காயை போட்டு தாளிக்கவும். பின் முக்கால் பங்கு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் கழித்து, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் ஊற வைத்த இறாலை சேர்த்து அதனுடன் பிரியாணி மசாலா, சீரக சோம்புத் தூள், மீதமிருக்கும் தயிர், புதினா, மல்லித்தழை,, தேவையான அளவு உப்பு சேர்த்து 7 நிமிடத்திற்கு சிம்மில் மூடி போட்டு வைக்கவும்.
ஒரு கப் அரிசிக்கு ஒன்றே முக்கால் கப் என்ற அளவிற்கு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் களைந்து வைத்துள்ள அரிசியை போட்டு, வெளியே ஆவி வராதவாறு நன்றாக மூடி வைக்கவும். தண்ணீர் போதவில்லையென்றால் சிறிது வெந்நீர் சேர்த்து கொள்ளவும்.
சாதம் வெந்து தண்ணீர் சல சலவென்று இருக்கும் பொழுது பாதி எலுமிச்சை சாற்றில் கேசரி பவுடர் சேர்த்து ஊற்றவும்.
எலுமிச்சை சாறு ஊற்றிய உடன் ஒரு அலுமினிய பாயில் பேப்பர் கொண்டு நன்றாக ஆவி போகாதவாறு சாதத்தை மூடி, பாத்திரத்தையும் மூடி அடுப்பை அணைத்து விடவும்.
20 நிமிடம் கழித்து பேப்பரை எடுத்தால் சாதம் உதிரியாக வெந்து இருக்கும். மீதி இருக்கும் வெங்காயத்தை நன்றாக பொரித்து பிரியாணி மீது தூவி, சிறிது மல்லித் தழையும் தூவவும். இப்பொழுது சுவையான இறால் பிரியாணி தயார். விரும்பினால் பரிமாறும் பொழுது சிறிது நெய் தெளித்து கொள்ளலாம்.

குக்கரில் இறால் பிரியாணியை செய்வதற்கு மேலே உள்ள 5 வது ஸ்டெப் வரை செய்து விட்டு, குக்கரில் அரிசியை போட்டு ஒரு விசில் வர விட்டு இன்னொரு விசில் வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும். குக்கரை நன்றாக ஆற விட்டு ஆவி அடங்கியதும் திறக்கவும். அப்பொழுது தான் சாதம் உதிரியாக இருக்கும். ஆவி அடங்கும் முன் திறந்தால் சாதம் தண்ணீர் விட்டிருக்கும். இந்த சாதத்தில் கேசரி பவுடர் கலந்த எலுமிச்சை சாற்றை பரவலாக ஊற்றி குக்கரின் ஓரத்திலிருந்து சாதம் உடையாதவாறு மேலிருந்து கீழாக பிரட்டவும். இரண்டு மூன்று முறை குலுக்கி விடவும். பின் 9 வது ஸ்டெப்பிலுள்ளது போல் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துகள் சமீஹா அருமையா செய்து இருக்கீங்க :)..........முதல் பதிவு அப்புறமா வரேன்................

ஷமீகா அக்கா அருமை அருமை அழகா சொல்லி படங்கலுடன் தெலிவாகவும் இருக்கு அக்கா சூப்பர்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள் ஷமீ(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அஸ்சலாமு அலைக்கும் ஷமீஹா,படத்தை பார்த்தாலே சூப்பர் டேஸ்ட்டுனு சொல்லுது,நல்லா செய்து இருக்கீங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சமிஹா சூப்பர்மா இரால் பிரியானி பார்க்கும்போதே அருமை. சாப்பிடனும்போல் இருக்கு வாழ்த்துக்கள்

சொல்லவேயில்ல? ம்ம்ம் யம்மி பிரியாணி. சூப்பரா தெளிவான விளக்கங்கள் அண்ட் படங்களோட அசத்திட்டீங்க. தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள் மை டியர் தோழி:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

எனது குறிப்பை வெளியிட்டு என்னை மீண்டும் சந்தோச கடலில் முழ்கடித்த அட்மின் அண்ணாவிற்கும் அட்மின் அண்ணா குழுவிற்கும் மிக்க மிக்க நன்றிகள்:)

SSaifudeen:)

முதல் ஆளா வந்து வாழ்த்து சொல்லி சென்றதற்கு மிக்க நன்றி ரூபி:)

SSaifudeen:)

உங்கள் 2அருமை,அழகு,தெளிவு,சூப்பர் மொத்தத்தில் உங்கள் வாழ்த்திற்கு எல்லாவற்றிர்க்கும் மிக்க நன்றி கனி....

SSaifudeen:)

உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அருட் செல்வி...:)

SSaifudeen:)

வ அழைக்கும் முஸ்ஸலாம்...உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி முசி....சாப்ட்டு பார்த்தாலும் நல்லா டேஸ்ட்டா இருக்கும் முசி...:)

SSaifudeen:)

அக்கா அதற்கென்ன அதான் நீங்க ஊருக்கு வந்தால் இன்ஷா அல்லாஹ் எங்க வீட்டுக்கு வர்றதா சொல்லி இருக்கீங்க இல்லையா அப்போ நான் உங்களுக்கு விதவிதமா செய்து தரேன் நீங்க ஜாலியா உட்காந்து நல்லா ருசிச்சி சாப்பிடுங்க...:)உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றிக்கா.

SSaifudeen:)

எல்லாம் ஒரு சஸ்ப்ரைஸ்க்காக தான் நித்தி...உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி மை சோ ஸ்வீட் தோழி...:)நீங்க சொல்லிட்டீங்கல்லே இனி அசத்திருவோம்...:)

SSaifudeen:)

அஸ்ஸலாமு அழைக்கும் ஷமீஹா இறால் பிரியாணி நல்லா செய்து இருக்கீங்க, வாழ்த்துக்கள்!

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஷமீஹா,
வாசமான பிரியாணி..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அஸ்ஸலாமு அலைக்கும் சமீஹா
இறால் பிரியாணி வாசம் இங்க வரைக்கும் வருதே....
நல்லா செஞ்சு இருக்கிங்க...வாழ்த்துக்கள்....

சமீ பிரியாணி சூப்பரா இருக்கு பார்க்கவே ஆசையா இருக்கு நானும் ட்ரை பண்ணிட்டு சொல்லுரேன்.....

வ அலைக்குமுஸ்ஸலாம் உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி ஹலீலா....

SSaifudeen:)

வாசம் அங்கு வரைக்கும் வருதா கவி!:)ரொம்ப சந்தோசம்.உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி கவி...

SSaifudeen:)

வ அலைக்குமுஸ்ஸலாம்
ஆஹா! வாசம் அங்கேயும் வந்திடுச்சா!!!!!:)ரொம்ப நன்றிமா உங்கள் வாழ்த்திற்கு:)எப்படி இருக்கீங்க?உள்ளே உள்ள குட்டி பையன் (அ)குட்டி பொண்ணு என்ன பண்ணுறாங்க?எப்படி இருக்காங்க?டைம் கிடைத்தால் அரட்டை பக்கம் வாங்க பேசலாம் குறிப்பா எனக்கு கரண்ட் இருக்கும் பொழுது வாங்க சரியாமா....

SSaifudeen:)

சாதிக்கா கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.துணைக்கு வேணும்ன்னா நானும் வரேன் சொல்லுங்க ஸ்கைப்ள.... ஸ்கைப்ள....:)
ரொம்ப நன்றிமா உங்கள் வாழ்த்திற்கு:)

SSaifudeen:)

Ippatan fb la unga prawn briyani photo va parthutu tan inga vandhu parthaen..amarkalama irukkuma..adutha time seyyumbodhu sollunga unga veetuku vandudren ma,.Thodarndhu pala nooru kurippuhal kuduthu asathuvadharku vazhthukal en arumai Thozhi...

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

கண்டிப்பா சொல்லுறேன் சாம் ஆனால் கண்டிப்பா நீங்க என்னை ஏமாற்றாமல் வரணும் சரியா....
இன்ஷா அல்லாஹ் என்னால் முடிந்த வரைக்கும் நான் நிறைய குறிப்புகள் தர ட்ரை பண்ணுறேன் சாம். உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி சாம்...:)

SSaifudeen:)

வாவ்..என் ஃபேவரட் பிரியாணி...
மட்டனை விட இறால்,மீன்,சிக்கன் பிரியாணி தான் ரொம்ப பிடிக்கும்.
சூப்ப்...பர் சமீஹா....வீட்டுக்கு வரும் கெஸ்ட் லிஸ்டில் என்னையும் எழுதிக்கோங்க...(பாவம் சமீஹா)வாழ்த்துக்கள்...

ஹசீன்

ஷமீஹா, பிரியாணி வகைகளில் இறால் பிரியாணி மேல் ஒரு இனம் புரியும் காதலே உண்டு ;) நீங்க செய்துள்ள விதம் சாப்பிடும் ஆவலை இன்னும் அதிகரிக்க செய்கிறது. நல்ல இறால் கிடைத்தால் உடனே செய்துட வேண்டியது தான். மணமான, ருசியான குறிப்பிற்கு வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனக்கும் தான் ஹசீன் பேவரைட்...ஹையா நீங்களும் எங்க வீட்டுக்கு வர்றீங்களா....இது நல்ல ஐடியாவா இருக்கே ஒவ்வொருத்தவங்களுக்கும் பிடித்த டிஸ்ஸாஆஆ செய்து வீட்டுக்கு வர வைக்கலாம் போலவே...!!!:)
உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ஹசீன்...

SSaifudeen:)

நான் காதலிக்கும் பிரியாணியை தான் நீங்களும் காதலிக்கிறீங்களா....:)உங்க அட்ரஸ் கொடுங்க ஒரு மூட்டை இறாலை பார்சல் பண்ணிடுறேன் ஏன்னா இங்கே அவ்ளோ சிரிப்பா சிரிக்குது இறால்...:)
உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி அக்கா....:)

SSaifudeen:)

sameeha very nice piriyani