தாளித வடகம் எப்படிசெய்வது?

தாளித வடகம் எப்படிசெய்வது?

திருமதி. காயத்ரி அவர்கள் <a href="http://www.arusuvai.com/tamil/node/2011">வெண்டைக்காய் புளிக்குழம்பு </a>செய்முறையில், வடகம் செய்வது எப்படி என குறிப்பிட்டு உள்ளார். யாரும் சமைக்கலாமில் அந்தக் குறிப்பு இடம் பெற்றுள்ளது. ஆனால், அதற்கான செய்முறைப் படங்கள் இல்லை. கூடிய விரைவில் வெளியிட முயற்சி செய்கின்றோம். உங்களின் வசதிக்காக வடகம் செய்முறைக் குறிப்பினை மட்டும் இங்கே வெளியிட்டுள்ளோம்.

வடகம் அல்லது கருவடாம் செய்முறை

ஒரு கிலோ வெங்காயம்
100 கிராம் பூண்டு
10 கொத்து கறிவேப்பிலை
200 கிராம் உளுத்தம் பருப்பு
50 கிராம் கடுகு
50 கிராம் வெந்தயம்
50 கிராம் சீரகம்
ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள்
இரண்டு மேசைக்கரண்டி உப்பு
இரண்டு மேசைக்கரண்டி விளக்கெண்ணெய்

வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், மஞ்சள், உப்பு மூன்றையும் ஒன்றாய் சேர்த்து பிசைந்து 2 நாட்கள் ஊற வைக்கவும்.
உளுந்தை சுமார் 5 நிமிடங்கள் ஊற வைத்து, அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும். மாவாக அரைத்துவிடக் கூடாது.
அரைத்த உளுந்து, வெங்காயக் கலவை மற்றும் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாய் சேர்த்து ஒரு மேசைக்கரண்டி விளக்கெண்ணெய் விட்டு பிசைந்து கொள்ளவும்.
மீதமுள்ள எண்ணெய்யை தொட்டுக் கொண்டு, கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, வெயிலில் காயவைக்கவும். சுமார் 10 நாட்கள் காய வைத்து எடுக்க வேண்டும்.

தங்களின் பதில் மூலம் தாளிதவடகத்தின் செய்முறையினைத் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி.

ஹாய், ஹாய்

சம்மர் ஸ்டார்ட் ஆகிடுச்சு, வடகம் எல்லாம் செய்ய ஆரம்பிச்சாச்சா, இந்த‌ த்ரெட்ல‌ ஒரு குறிப்பு இருக்கு, பாருங்க‌.

வடக‌ அனுபவங்கள் கூட‌ இங்க‌ சொல்லலாமே.

மணிமுத்துமாலை

மேலும் சில பதிவுகள்