தந்தை பற்றிய உதவி

ஹாய் தோழிகளே
எனக்கு திருமணம் ஆகி 6 மதம் ஆகிறது என்று உங்களுக்கு தெரியும் என்று நினைகிறேன். நானும் என் கணவரும் தனியாக உள்ளோம். அவர்கள் வீட்டுக்கு வாரம் இரு முறை சென்று தங்குவோம். என் தந்தைக்கு 15 வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் ஒரு கால் முறிந்து சிகிச்சை பெற்றார். 6 வருடங்கள் மருத்துவமனையில் இருந்தார். கொஞ்சம் நடக்க முடிந்ததும் வேலைக்கு சென்றார். சிறு வயது முதல் எங்களுக்கும் என் தாய்க்கும் அவர் ஏதும் செய்ததில்லை. என் தாய் 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். என் தந்தை வேலை செயும் இடத்திலேயே தங்கி கொள்வர். எப்பொழுதாவது தான் வீட்டுக்கு வருவார். என் திருமணத்தன்று மருத்துவமனையில் admit ஆகி இருந்தார். அவரின் குடி பழக்கத்தாலும் புகை பழக்கத்தாலும் இன்றுவரை காலில் கட்டு போட்டு கொண்டு இருக்கிறார் அவருக்கு சக்கரை நோய் ஏதும் இல்லை. அவருக்கு யாரை பற்றியும் கவலை இல்லை. யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார். இப்பொழுது அவருக்கு காச நோய் வந்து உள்ளது. அது மற்றவர்களுக்கும் பரவும் என்று dr சொல்கிறார். இப்பொழுதும் அவர் யாருக்கும் தெரியாமல் புகை பிடிக்கிறார் நாங்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுங்கள் என்று சொல்கிறோம் ஆனால் அவர் வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்கிறார். நாங்கள் இருவருமே வேலைக்கு செல்பவர்கள். அவர் வீட்டில் இருந்தால் நாங்கள் இல்லாத நேரத்தில் கடைக்கு சென்று குடிப்பார் புகை பிடிப்பார். சிறு வயதில் இருந்தே மருத்துவமனைக்கு அலைந்து கொண்டு இருக்கிறேன். ஏனென்றால் என் தாயும் இருதய நோயின் மூலம் இறந்தார். தினமும் காலை என் கணவர் தான் அவருக்கு சாப்பாடு எடுத்து போகிறார். ஆனால் அவர் என் கணவரை திட்டுவதும் அவரை முகத்தில் அடித்தார் போல் பேசுவதுமாக இருக்கிறார். நான் போனால் என்னை ஏதும் சொல்வதில்லை. தினம் காலை என்னால் மருத்துவமனைக்கு செல்ல முடியாது நான் மாலை தான் செல்வேன். என் கணவர் வேலைக்கு செல்லும் இடத்திற்கு வழியில் தான் மருத்துவமனை உள்ளது. அதனால் தான் அவர் செல்கிறார். இப்பொழுது வீட்டிற்கு வருகிறேன் என்று கூறுகிறார் நான் என்ன செய்வது? அவரை வீட்டிற்கு அழைத்து வருவதா அல்லது அவருக்கு நோய் பற்றி புரிய வைத்து மருத்துவமனையில் வைப்பதா? மருத்துவமனையில் இருந்தால் தான் ஒழுங்காக மருந்து சாப்பிடுவார். நான் என்ன செய்வது

//மற்றவர்களுக்கும் பரவும்// உண்மைதான்.
நோயால் பாதிக்கப்பட்டவர் ஒழுங்காக மருந்து எடுத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு உடனிருப்பவர்கள் (குழந்தைகள் உட்பட) தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொள்வதும் அவசியம்.

//நோய் பற்றி புரிய வைத்து மருத்துவமனையில் வைப்பதா? மருத்துவமனையில் இருந்தால் தான் ஒழுங்காக மருந்து சாப்பிடுவார்.// நீண்டகால சிகிச்சைதான். ஆனால் மருத்துவ ஆலோசனைப்படி அவர்கள் சொல்லும் காலம் வரை மருத்துவமனையில் தங்கிக் குணமாக்கிக் கொண்டு வருவதுதான் அனைவருக்கும் நல்லது. தொடர்ந்து மருந்துகளை ஒழுங்காக எடுக்க வேண்டும்.

//காலை என் கணவர் தான் அவருக்கு சாப்பாடு எடுத்து போகிறார். ஆனால் அவர் என் கணவரை திட்டுவதும் அவரை முகத்தில் அடித்தார் போல் பேசுவதுமாக இருக்கிறார்.// ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய இயலாதா! உங்கள் கணவர்தான், மாமனார் என்பதனால் செய்கிறார் என்பதுவும் சரி. ஆனால்... ஒருவரது ஒவ்வொரு நாளையும் இப்படி மகிழ்ச்சியில்லாமல் ஆரம்பிக்க வைப்பது நியாயமில்லை. உங்கள் மணவாழ்க்கைக்கும் இது நல்லதல்ல சகோதரி.

//நாங்கள் இல்லாத நேரத்தில் கடைக்கு சென்று குடிப்பார் புகை பிடிப்பார்.// வீட்டிலேயே கூட அது நடக்கலாம். சில விடயங்களை இடையில் திருத்த இயலாது. ஆரம்பத்திலே என்ன செய்யப் போகிறீர்கள் என்று முடிவு செய்வது நல்லது. அப்பாவின் நன்மை, உங்கள் குடும்ப நன்மை என்கிற இரண்டு விடயங்களையும் சிந்தித்துப் பாருங்கள். அவர் மது, புகைத்தலிலிருந்து வெளியே வரும்வரை, நீங்களிருவரும் தனியாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் நாளை அப்பாவுக்கும் கணவருக்கும் இடையில் எந்தப் பக்கம் சார்பாகப் பேசுவது என்று தெரியாமல் திணற வேண்டி வரலாம். வேறு வழி ஏதாவது இருக்கிறதா! யோசித்துப் பாருங்கள்.

வீட்டினுள் ஒருவர் புகைபிடித்தால், அந்த வீட்டில் வசிக்கும் மீதிப் பேருக்கு - குறிப்பாகக் குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் வரும் சாத்தியம் இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்