தேங்காய் பர்ஃபி

தேதி: December 18, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (12 votes)

 

மெல்லியதாக துருவிய தேங்காய் துருவல் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய் / பச்சை கற்பூரம்
நெய் - சிறிது
முந்திரி - தேவைக்கு (விரும்பினால்)


 

தேங்காய் துருவலின் வெண்மையான பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையும், தேங்காய் துருவலையும் சேர்த்து கொட்டி சிறுந்தீயில் வைக்கவும்.
மெதுவாக கிளறி விடவும். சிறிது நேரத்தில் சர்க்கரை கரைந்து கெட்டியான கலவையாகும்.
பின் நீர்த்து, சில நிமிடங்களில் ஓரங்களில் நுரைக்க துவங்கும். கைவிடாமல் மிதமான தீயில் கிளறி விடவும். சிறிது நேரத்தில் கலவை முழுவதும் நுரைப்பது போல் வந்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்.
இப்போது ஏலக்காய் சேர்க்கவும். தேங்காயின் வெண்மை மாறாமல் இருக்க வேண்டும். இப்போது முந்திரி சேர்க்க விரும்பினால் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும். லேசாக சூடு இருக்கும் போதே துண்டுகளாக்க கத்தியால் கோடிடவும். ஆறிய பின் துண்டுகளாக்கவும். சுவையான சுலபமான தேங்காய் பர்ஃபி தயார்.

பதம் வந்த பின் அதிக நேரம் அடுப்பில் வைத்தால் பர்ஃபி சாஃப்ட்டாக இருக்காது. பதம் வரும் முன் எடுத்தால் தேங்காய் பர்ஃபிக்கு பதில் தேங்காய் அல்வா ஆகிவிடும். :) செய்ததை தட்டில் கொட்டும் முன் ஓரத்தில் உள்ள சர்க்கரை பாகை தொட்டு பார்த்தால் கம்பி பதம் வந்திருக்கும். அதை வைத்தே சரியான பதம் என்பதை கண்டு கொள்ளலாம். புதிதாக செய்பவர்கள் பதம் வரும் முன் எடுத்து விட்டோம் அல்வாவாக உள்ளது என தோன்றினால், மீண்டும் 1 மேசைக்கரண்டி நீர் விட்டு கலந்து அடுப்பில் வைத்து கிளறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனிதா,

சூப்பரோ சூப்பர் எனக்கு பிடிச்ச இனிப்பு, இன்றே செய்து பார்க்கிறேன்,

மணிமேகலை ராம்குமார்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

இதை உலர்ந்த தேங்காயில் செய்யலாமா

muyarchi seithal mudiyathathu illai,ruby

பார்தாலே சாப்பிட தோனுது.உங்கள் எல்லா குறிப்புகலும் அருமை.கன்டிப்பாக செஇது பார்கிறேன்.நானும் அருசுவை இன் சைலென்ட் ரீடெர்.தமிழ் ட்ய்பிங் தெரியாததால நிரய பேச முடில.இனி நிதம் ட்ர்ய் பன்ரென்

வாவ்...சூப்பர்..
நானும் இதுப் போல் அடிக்கடி செய்வேன்...பாகு காய்ச்சிட்டு தேங்காய் துருவலை
சேர்ப்பேன்...(சீனிக் கேக்)னு சொல்லுவோம்...
ஸ்கூல் டேஸ் நியாபகம் வந்துடுச்சு...தேங்யூ...
இதுவும் கண்டிப்பா செய்துப் பார்க்கிறேன்...வாழ்த்துக்கள்...

ஹசீன்

எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் வனி.. நிறைய முறை செய்யணும்ன்னு நினைப்பேன்.. ஆனா சரியா வராதோன்னு விட்டுருவேன்... நீங்க சுலபமா செய்ய குடுத்திருக்கீங்க.. கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கறேன்..

வித்யா பிரவீன்குமார்... :)

வெள்ளைவெளேர்னு அழகா பண்ணியிருக்கீங்க வாழ்த்துக்கள் வனி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வெள்ளை பர்பி கொள்ளை அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பர்ஃபி சூப்பரா ஈஸியா செஞ்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பர்ஃபி சூப்பரா இருக்கு நானும் ஹசீன் செயற முறையில் தான் செய்வேன்........சீனிகேக் ஸ்கூல் டேஸ் நாபகம் வந்திருச்சு :) சமிபத்தில் என் நெய்பர் இந்த பர்பி செஞ்சு தந்தாங்க அவங்க பாகிஸ்தானி ரொம்பவே சுவையா இருந்தது அவங்க தண்ணிருக்கு பதில பாலில செய்தாங்க...............

வனிதா தேங்காய் பர்ஃபி ரொம்ப அருமையா செய்து இருக்கிங்கமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

மணிமேகலை... மிக்க நன்றி :)

ரூபி... ட்ரை கோக்கனட் என்றால் பால் சேர்த்து செய்யணும், இப்படி செய்தால் நல்லா இருக்காது. மிக்க நன்றி :)

பிரியா கண்ணன்... மிக்க நன்றி :) அவசியம் செய்து பாருங்க. அறுசுவை சார்பில் வருக வருகன்னு வரவேற்கிறோம்.

ஹசீன்... மிக்க நன்றி :) இந்த முறையிலும் செய்து பாருங்க.

வித்யா... மிக்க நன்றி :) செய்து பாருங்க, கண்டிப்பா சூப்பரா வரும்.

அருள்... மிக்க நன்றி :)

முசினா... மிக்க நன்றி :)

நித்யா... மிக்க நன்றி :)

ரூபி.... மிக்க நன்றி :) அவசியம் செய்து பாருங்க. ஒவ்வொன்னும் ஒரு சுவையா இருக்கும். என் ஃப்ரெண்ட் இதையே தேங்காயில் பால் விட்டு அரைச்சு செய்வாங்க.

ஹலீலா... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ஈசியா பார்க்கவே அழகா இருக்குக்கா வாழ்த்துக்கள் அக்கா:)

SSaifudeen:)

வனி,
Same Pinch !!
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அக்கா தேங்காய் பர்பி சூப்பரா செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்.........

வனிதா அக்கா: இதுவும் சீக்ரமாவே சமைக்ர மாரி இருகே ( ஆஸ்யூஸ்ஷுவல் வனி அக்கா ஸ்டைல் :- ) ஹ்ம்ம் கலகுரீங்க அக்கா அம்மாகு ரொம்ப புடிக்கும் அக்கா இந்த டிஷ்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ennaium unga friend a serthukanga

Be possive

hi tamil a epdi msg panradhu. pls sollunga

வணக்கம். இன்று முதல் நானும் உங்கள் தோழி

Be possive

வனி, ஃபேரன் லவ்லி போட்ட மாதிரி பர்பி வெள்ளை வெளேர்னு கண்ணை பறிக்குது போங்க.. எல்லாத்தையும் விட ஸ்பெஷல் நல்ல பீஸ் போட வந்திருக்கு. நான் எப்ப பண்ணாலும் ஸ்பூன்ல வழிச்சு சாப்பிடுற மாதிரி தான் இருக்கும். நீங்க சொன்ன இந்த முறைல இன்னைக்கே அரங்கேற்றம் பண்ணிடறேன். இனிப்பான குறிப்புக்கு வாழ்த்துக்கள் வனி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

super ah senjurukinga vanitha madam

maha

vani rompa nalla seithu irukinga,seimurayum sulapam irukku.enga appavoda favourate sweet ithu. padangalum super, purfi vella vellarenu kanna parikkuthu...( foto edukarathukku munthi ujalala purfiye potingalo)
( summa ullulayikku )valthukkal vani.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

unga barfi pakave romba alagarku.kandipa senju pakren...thank u.

வனிதா அக்கா பர்ஃபி சூப்பரா இருக்கு.சீக்கிரமா செய்துட்டு வரேன்.வாழ்த்துக்கள்.

Kalai

மிக்க நன்றி நிச்சியம் செய்து பார்க்கிரேன்

muyarchi seithal mudiyathathu illai,ruby

வனிதா தேங்காவை வதக்கலாம் வேண்டாமாப்பா. எப்போதும் நான் வதக்கியே செய்றேன் அப்பறம் பாகு வைத்து அதில் வறுத்த தேங்காவை சேர்ப்பேன். இந்த முறை உங்க மெத்தட் பாலோ பண்ண போறேன். செய்துட்டு சொல்றேன். பதம் தான் சில நேரம் கால்வாரும்பா எனக்கு. ரொம்ப சூப்பரா அப்படியே வெள்ளை வெளேன்னு சாப்பிடனும் போல இருக்கு

சமீஹா... மிக்க நன்றி :)

கவிதா... மிக்க நன்றி :)

சாதிக்கா... மிக்க நன்றி :)

கனி... மிக்க நன்றி ;) நீங்க தான் என் சமையலை பற்றி தெரிந்தவர். அம்மாக்கு செய்து கொடுங்க. பிடிச்சுதான்னு சொல்லுங்க.

லோகா... அறுசுவைக்கு வருக வருக... :)

கல்ப்ஸ்... இங்க கூட காமெடியா ;) சிரிச்சு சிரிச்சு முடியலப்பா. ஸ்பூன் வெச்சு வழிக்கிற மாதிரி இருந்தா நான் சொன்ன மாதிரி கொஞ்சம் தண்ணி விட்டு கலந்து மீண்டும் அடுப்பில் வைங்க. சரியான பதம் வந்ததும் எடுத்துக்கலாம். அவசியம் செய்துட்டு சொல்லுங்க. நன்றி கல்ப்ஸ்.

மகாலக்‌ஷ்மி.. மிக்க நன்றி :)

சுமி... வாங்க அடுத்த காமெடிக்கு... உஜாலாவே தான் ;) மிக்க நன்றி.

ஷர்லிஷா... மிக்க நன்றி :) அவசியம் செய்து சொல்லுங்க.

கலா... மிக்க நன்றி :) அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

ரூபி... மிக்க நன்றி :)

உமா... தேங்காயை வறுத்தா ஈரப்பதம் போயிடும். சுவையும் மாறுபடும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா செய்யறோம் ;) இப்படியும் ட்ரை பண்ணி பாருங்களேன்... உங்களுக்கு வித்தியாசம் தெரியுதான்னு. இதில் பதம் காலைவாராது... பதம் தப்பினா குறிப்பில் கீழ கொடுத்திருப்பது போல் செய்யுங்க... சரி ஆகிடும். மிக்க நன்றி உமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, இன்னைக்கு தேங்காய் பர்பி செய்தாச்சு. டேஸ்ட் நல்லா வந்தது. கலர் தான் நீங்க பண்ணின பர்பி கலர்ல இல்ல. பொன்னிறமா வந்துடுச்சி. சாதாரணமா எனக்கு வெள்ளை கலர் பிடிக்காது. எப்பவும் பொன்னிறம் தான் அழகு.. என்ன சொல்றீங்க வனி..(கையாலாகாதனத்துக்கு இப்படி தான் பவுடர் போட்டு பொட்டு வைப்போம் ;)) நெக்ஸ்ட் டைம் இதே ஃபேரன்லவ்லி கலர்ல கொண்டு வந்துடுவோம்.. பொண்ணுக்கு நல்லா பிடிச்சிருந்தது.தேங்க்ஸ் வனி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனி, இன்னைக்கு தேங்காய் பர்பி செய்தாச்சு. டேஸ்ட் நல்லா வந்தது. கலர் தான் நீங்க பண்ணின பர்பி கலர்ல இல்ல. பொன்னிறமா வந்துடுச்சி. சாதாரணமா எனக்கு வெள்ளை கலர் பிடிக்காது. எப்பவும் பொன்னிறம் தான் அழகு.. என்ன சொல்றீங்க வனி..(கையாலாகாதனத்துக்கு இப்படி தான் பவுடர் போட்டு பொட்டு வைப்போம் ;)) நெக்ஸ்ட் டைம் இதே ஃபேரன்லவ்லி கலர்ல கொண்டு வந்துடுவோம்.. பொண்ணுக்கு நல்லா பிடிச்சிருந்தது.தேங்க்ஸ் வனி :) பேஸ்புக்ல போட்டோ போடுறேன் பாருங்க.. கண்ணு இருளடைஞ்சுடாம பார்த்துக்கோங்க ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆகா... செய்தாச்சா செய்தாச்சா??? குட்டீஸ்க்கு பிடிச்சா அதை விட பெரிய வெற்றி ஏதும் இல்லை :) அதனால் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. நன்றி கல்ப்ஸ். போட்டோவை போடுங்க... பார்க்க காத்திருக்கேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா,
தேங்காய் பர்பி சூப்பர்...
படங்களும் கொள்ளை அழகு :)

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தங்கச்சி, இன்னைக்கு உங்க தேங்காய் பர்ஃபி செய்தேன்... ரொம்ப சுவையாக இருந்தது :)
செய்வதற்கு எதிர்பார்த்ததை விட சுலபமாக இருந்தது...;-) மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வனிதா,

வாவ் தேங்காய் பர்பி சூப்பரா வந்ததுபா, எனக்கு ஒரே பாராட்டு மழைதான், முதல்முறைய செதப்பாம பண்ணின இனிப்பு இதுதான், முக்கியமா என் மகளுக்கு ரொம்ப பிடிச்சது, வனிதா மிகவும் நன்றி பாராட்டுகள் உங்களுக்குதான்

அன்புடன்
மணிமேகலை ராம்குமார்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

பிந்து அக்கா... அடடா... நீங்க முக புத்தகத்தில் போட்ட போட்டோ பார்த்தே அசந்துட்டேன்... அத்தனை வெள்ளையா அழகா வந்திருக்கு. யார் செய்தது?? ;) ஹிஹிஹீ. யாராக இருந்தாலும் அருமை. தேன்க்யூ அக்கா. குட்டி மேடம்கு பிடிச்சுதா?!

மணிமேகலை... ஆகா நீங்களூம் செய்துட்டீங்களா? பிடிச்சுதுன்னு கேட்டாலே அது ஒரு தனி மகிழ்ச்சி தான் :) தான்க்யூ மணிமேகலை. //முதல்முறைய செதப்பாம பண்ணின இனிப்பு இதுதான்// - அப்போ அவசியம் மிச்ச சொதப்பல் சுவாரஸ்யத்தை “சமையல் சொதப்பல்ஸ்” இழையில் சொல்ல வாங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா,
ரொம்ப நல்லாயிருக்கு. ' கேசரி கலர் பவுடர் சேர்த்து செய்யலாமா? இதனால் பதம் பிழைக்குமா?..அறியத் தரவும்.

விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன்.

Maturity is not when we start speaking “BIG” things!
It is when we start understanding “small” things!

மிக்க நன்றி :) கேசரி கலர் சேர்க்கலாம்... பதம் போகாது. ட்ரை பண்ணி பார்த்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா