தேதி: December 21, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இறால் மசாலா செய்ய :
பெரிய இறால் - 15
மிளகாய்த் தூள் - கால் மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலா - அரை மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பஜ்ஜி மாவிற்கு:
கடலை மாவு - 5 மேசைக்கரண்டி
அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
ஆரஞ்ச் கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
சாம்பார் தூள் - அரை மேசைக்கரண்டி
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய்த் தூள் - கால் மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
ஒரு வாணலியில் இறால் மசாலா செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறிது நீர் விட்டு, மசாலா அனைத்தும் இறாலுடன் ஒன்றாக சேர்ந்து திரண்டு வரும் வரை அடுப்பில் வைத்து பின் அடுப்பை அணைத்து விடவும். மாவிலும் உப்பு சேர்ப்பதால் மசாலாவிற்கு உப்பு சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும்.

பஜ்ஜி மாவு தயாரிக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்திருக்கும் இறாலை ஒவ்வொன்றாக எடுத்து பஜ்ஜி மாவில் தொட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான இறால் பஜ்ஜி தயார்.

Comments
அஸ்ஸலாமு அலைக்கும் சமீஹா நான்
அஸ்ஸலாமு அலைக்கும் சமீஹா
நான் தான் முதல் பதிவு..சோ , இறால் பஜ்ஜி முழுக்க எனக்கு தான்...
கலக்கலான குறிப்பா இருக்கு :)
வாழ்த்துக்கள்...
shameeha akka
என்ன ஷமீ அக்க இறாலா போட்டு தாக்கிரீங்க ஹ்ம்ம் இறால் பஜ்ஜி சூப்பர் குறிப்பு
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
அஸ்ஸலாமு அலைக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் சமீஹா,அருமைய்யாக செய்து இருக்கீங்க,படங்கள் அழகு.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் ஷமீஹா
அஸ்ஸலாமு அலைக்கும் ஷமீஹா இறால் பஜ்ஜி ரொம்ப அருமையா செய்து இருக்கிங்க... தொடர்ந்து கலக்குங்க:) வாழ்த்துக்கள்.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
assalamu alaikum
assalamu alaikum shameeha..supera irukuma,.annaiku anna raal bajji senju kuduthaendu sollum bodae andha kurippa arusuvaila podungandu sollanum nu ninachtu irundhaen..neengalae potuteenga..vazhthukkal shameeha..
"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"
ஷமீஹா
அருமையான குறிப்பு வாழ்த்துக்கள் ஷமீஹா(:-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
hai friends
யார் இருக்கீங்க பா
ஒரு இல்லத்தை இல்லமாக்க பெண்ணால் மட்டுமே முடியும்
இறால் பஜ்ஜி
ஷமீஹா, இறால் பஜ்ஜி மசாலா அயிட்டங்கள் நிறைய சேர்த்து டேஸ்ட்டும் நல்லா இருக்கும் போலிருக்கு. பெரிய இறால் கிடைச்சா ட்ரை பண்ணிடுறேன். டீயோட சுவையான இறால் பஜ்ஜி தந்த உங்களுக்கு தேங்க்ஸ், வாழ்த்துக்கள் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
அஸ்ஸலாமுஅலைக்கும் தங்கச்சி
அஸ்ஸலாமுஅலைக்கும் தங்கச்சி இது உனக்கு இரால் வாரமா இரால் டிஷ்ஷா கலக்கிட்டு இருக்கே இதுபோல் நான் செஞ்சதில்லை புதுசாயிருக்கு நிச்சயம் செய்துபார்க்கிறேன் வாழ்த்துக்கள்
ஷமீஹா
நல்ல குறிப்பு.இதுவரை செய்ததில்லை.நிச்சயம் செய்துபார்கிறேன்.வாழ்த்துக்கள்.
Kalai
அட்மின் அண்ணா....
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கும் குழுவிற்கும் மிக்க நன்றி....:)
SSaifudeen:)
வ அலைக்குமுஸ்ஸலாம் ஷமீலா....
இந்தாங்க பிடிங்க எடுத்துக்கோங்க....உள்ளே இருக்குறவங்க கேட்டதே ரொம்ப ஆச்சரியம் சோ லேட் பண்ணாமல் சாப்பிட்டு முடிச்சிடுங்க...உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி...:)
SSaifudeen:)
கனி...
எனக்கு இந்த வாரம் இறால் வாரம்....:)உங்கள் அன்பான பதிவிற்கு மிக்க நன்றி கனி...:)
SSaifudeen:)
முஹ்சீனா...
வ அலைக்குமுஸ்ஸலாம்....உங்கள் அன்பான பதிவிற்கு மிக்க நன்றிமா...:)
SSaifudeen:)
ஹலீலா...
வ அலைக்குமுஸ்ஸலாம்...நீங்கல்லாம் கலக்கி கொண்டு இருப்பதை பார்க்கும் போது தான் எனக்கும் கொஞ்சம் ஆசை வருதுமா...வாங்க சேர்ந்து கலக்குவோம்:)உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி...:)
SSaifudeen:)
ஷமீஹா இறால் பஜ்ஜி சூப்பரா
ஷமீஹா இறால் பஜ்ஜி சூப்பரா இருக்கு. வாடா, இறால் பிரியாணி, உருண்டைக்கலியா, இப்ப இறால் பஜ்ஜின்னு ஒரே இறால் ஐட்டமா போட்டுத்தாக்குறீங்க;) இறால் குடும்பத்தை ஏதும் குத்தகைக்கு எடுத்திருக்கீயளா?:D வாழ்த்துக்கள் ஷமீஹா:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
சாம்....
வ அலைக்குமுஸ்ஸலாம்...அன்னைக்கு நீங்கலாம் இறால் பஜ்ஜிக்காக அடிச்சிகிட்டு விழுந்ததுனால சோ எல்லோரும் எடுத்துக்கோங்கன்னு இங்கே போட்டுட்டேன்...:)உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி சாம்...
SSaifudeen:)
அருட்செல்வி...
உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றிமா...:)
SSaifudeen:)
நஷ்ரீன்..
அரட்டைன்னு நெனச்சி இடம் மாறி குதிச்சிட்டீங்களோ...:)
SSaifudeen:)
கல்ப்ஸ் அக்கா....
கப்ல்ஸ் அக்கா நான் உண்மையில் இறால் பஜ்ஜி ரொம்ப டேஸ்ட்டா தான் இருக்கும் நம்பி செஞ்சி தெம்பா சாப்பிடுங்கள்:)உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றிக்கா...
SSaifudeen:)
நிஷா அக்கா...
வ அலைக்குமுஸ்ஸலாம்...அக்கா இங்கே கொஞ்சம் இறால் ச்சீப்பா கெடச்சது...அதன் கேடச்சதோடு கொஞ்சம் வாங்கிப்போட்டு இறால் டிஸ்ஸாஆ செஞ்சி பார்த்துகிட்டு இருக்கேன்...நல்லா இருக்கும் செய்து பாருங்க...உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றிக்கா...
SSaifudeen:)
கலா...
ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் கண்டிப்பா செய்து பாருங்க கலா....உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றிமா...
SSaifudeen:)
நித்தி....
ஆஹா!!!:)நீங்களுமா...போதும் நான் அழுதுருவேன்...அவும்ம்ம்...
நீங்க கேட்ட குப்பத்தா அனுப்பலாம்ன்னு பார்த்தேன் மாட்டேன் போங்க:)
///வாடா/// நானில்லை...நானில்லை...
என்னை வடிவேல் மாதிரி அழ வைத்ததற்கும் உங்கள் அன்பான வாழ்த்திற்கும் மிக்க நன்றி நித்தி...:)
SSaifudeen:)
ஷமீஹா
அஸ்ஸலாமு அலைக்கும் ஷமீஹா இந்த வாரம் உங்களுக்கு என்ன இறால் வாரமா ஒரே இறால் ரெசிபி வந்த வண்ணமா இருக்கு.....இறால் பஜ்ஜி சிம்ப்ளா இருக்கு.....ப்ஜ்ஜி பக்கத்துல டீ வேற சூப்பர்.... வாழ்த்துக்கள்....
ஷமீஹா
ஷமீஹா பஜ்ஜி பார்க்கவே அழகா இருக்கு நான் சாப்பிட்டது இல்லை இறால் அதான் அழகோடு நிறுத்திக்கிறேன் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சாதிக்கா
வ அலைக்குமுஸ்ஸலாம்...இந்த சண்டேயோட இறால் வாரம் முடிந்து விட்டது...இனி--------சொல்லமாட்டேனே....
உங்க அண்ணாக்கு சூடா டீயும் சுட சுட பஜ்ஜியும் வச்சேன் அப்போ ஒரு க்ளிக் பண்ணிட்டேன்...
உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றிமா....:)
SSaifudeen:)
ஸ்வர்ணா...
ஏன் உங்களுக்கு இறால் பிடிக்காதா...???இது நல்லா இருக்கும் செய்து சாப்பிட்டு பாருங்க...சாப்பிடாட்டியும் அன்போடு வந்து பதிவு போட்டதற்கு மிக்க நன்றிமா...:)
SSaifudeen:)
ஷமீஹா
இன்னைக்கு தான் கவனிக்கிறேன், இதில் நான் பதிவே போடலைன்னு ;( வர வர வயசாகிடுச்சுல்ல, இப்படி தான் கவனக்குறைவாகிப்போச்சுது. மசாலா வாசத்தோட அருமையான பஜ்ஜி... அன்னைகே பார்த்து ஆகா டீயோட கிடைச்சா அருமையா இருக்குமேன்னு நினைச்சேன்... சொல்ல தான் மறந்துட்டேன். இங்க இறால் ரொம்ப விலை அதிகம், ஃப்ரெஷ் கிடைக்காது, ஃப்ரோசன் தான். எப்பவாது பார்ட்டிக்கு வாங்கி ட்ரை பண்ணிடுறேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சமீஹா
சமீஹா,
சூப்பர் பஜ்ஜி
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா