க்றிஸ்துமஸ் க்ராப்ட்ஸ் (Christmas Crafts)

தேதி: December 22, 2012

5
Average: 4.6 (5 votes)

 

சாண்டா ஹேட் (Santa Hat) செய்ய:
வெள்ளை நிற சார்ட்
சிவப்பு நிற பெயிண்ட்
ப்ரஷ்
பஞ்சு
சாட்டின் ரிப்பன்
பெவிக்கால்
டூத் பிக் ஸ்டார்(Tooth Pick Star) செய்ய:
டூத் பிக் - 12
அட்டை
பெவிக்கால்
கிலிட்டர்ஸ் - பச்சை, நீலம் மற்றும் கோல்டன் நிறம்
க்லிட்டரிங் ஸ்டார் (Glittering Star) செய்ய:
கனமான அட்டை
கிலிட்டர்ஸ் - நீலம் மற்றும் பச்சை நிறம்
ப்ரஷ்
பேப்பரிக் பெயிண்ட் - மஞ்சள் நிறம்
பென்சில்
கத்தரிக்கோல்
சாட்டின் ரிப்பன் - விரும்பிய நிறம்
பெவிக்கால்

 

சாண்டா ஹேட் (Santa Hat) செய்வதற்கு சார்ட்டின் ஒரு பகுதியில் தேவையான அளவில் வட்டம் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். பெரிய தொப்பியாக தேவைப்பட்டால் இன்னும் பெரிய வட்டமாக வரைந்துக் கொள்ளவும்.
வட்டத்தை நான்கு பாகங்களாக பிரிக்கவும் நான்கில் ஒரு பகுதியில் பாதியை படத்தில் உள்ளவாறு வெட்டி எடுத்து விடவும்.
நறுக்கிய பகுதியை எடுத்து விட்டு சார்ட்டை கோன் போல சுருட்டவும் கோன் வடிவம் வந்ததும் முனையை பெவிக்கால் கொண்டு ஒட்டி விடவும்.
கோன் முழுவதும் சிவப்பு நிற பெயிண்ட் செய்து காய வைக்கவும்.
காய்ந்ததும் அதன் மேல் பகுதியில் சிறிது பஞ்சை சுருட்டி பெவிக்கால் வைத்து ஒட்டவும். அதேப் போல் கீழ்பகுதியின் ஓரங்களிலும் பரவலாக பஞ்சை ஒட்டவும்.
அதன் பின்னர் சாட்டின் ரிப்பனை தேவையான அளவு எடுத்துக் கொண்டு சம அளவில் இரண்டு துண்டுகள் நறுக்கி கோனின் ஏதேனும் இரு எதிரெதிர் பக்கங்களில் பெவிக்கால் கொண்டு ஒட்டி விடவும்.
அழகிய சாண்டா தொப்பி ரெடி. இதன் மேல் நம் விருப்பத்திற்கேற்ப அலங்கரித்துக் கொள்ளலாம். நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு கிறிஸ்துமஸ் நன்னாளில் இதுபோல் செய்து பரிசளிக்கலாம்.
டூத் பிக் ஸ்டார் (Tooth Pick Star) செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். அட்டையை ஒரு ரூபாய் நாணயத்தின் அளவிற்கு 2 துண்டுகள் வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டி வைத்துள்ள அட்டையில் ஒன்றை எடுத்து பெவிக்கால் தடவி படத்தில் காட்டியுள்ளபடி டூத் பிக்கை அதில் ஒட்டி விடவும்.
மீதியுள்ள டூத் பிக்குகளையும் இதேபோல் ஒட்டி நன்கு காய விடவும்.
காய்ந்ததும் அதை திருப்பி டூத் பிக்கின் மேல் கோல்டன் நிற க்லிட்டர்ஸ் கொடுக்கவும்.
நடுவில் உள்ள அட்டையில் நீல நிற க்லிட்டர்ஸ் கொடுத்து காய விடவும்.
காய்ந்ததும் அதை திருப்பி மற்றொரு அட்டையை நடுவில் ஒட்டி, அட்டையின் மீது பச்சை நிற க்லிட்டர்ஸும், டூத் பிக்கின் மேல் கோல்டன் நிற க்லிட்டர்ஸும் கொடுக்கவும். சுலபமாக செய்ய கூடிய டூத் பிக் ஸ்டார் தயார். க்றிஸ்துமஸ் ட்ரீயை அலங்கரிக்க உபயோகிக்கலாம்.
க்லிட்டரிங் ஸ்டார் (Glittering Star) செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
கனமான அட்டையில் படத்தில் உள்ளது போல் பெரியதும், சிறியதுமாக மாறி மாறி வருவது போல் ஸ்டார் வரைந்து அதை தனியே வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
அட்டையின் முன் பக்கத்தில் மஞ்சள் நிற பெயிண்ட் செய்து காய விடவும்.
சிறிய பாகத்தின் ஓரத்தில் நீல நிற கிலிட்டர்ஸால் அவுட் லைன் கொடுக்கவும். இதேபோல் பெரிய பாகத்திலும் பச்சை நிற கிலிட்டர்ஸால் அவுட் லைன் கொடுக்கவும்.
சிறிய பாகத்தின் உள்ளே "V" வடிவில் வரைந்து சிறிய புள்ளிகள் வைக்கவும்.
ஸ்டாரின் உள் பக்கத்தில் பச்சை மற்றும் நீல நிற கிலிட்டர்ஸ் கொண்டு சிறு சிறு புள்ளிகள் வைக்கவும்.
கிலிட்டர்ஸ் காய்ந்ததும், தேவையான அளவு சாட்டின் ரிப்பனை நறுக்கி எடுத்துக் கொண்டு அட்டையின் பின் பக்கத்தில் பெரிய ஸ்டாரின் ஏதாவது முனையில் க்ளூ தடவி ஒட்டவும்.
அட்டையில் செய்த எளிமையான கிறிஸ்துமஸ் ஸ்டார் ரெடி. இதை குழந்தைகள் கூட செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பார்த்ததும் தெரிஞ்சுது, நம்ம மக்கள் வேலைன்னு ;) அழகு அழகு... ரொம்ப அழகு. எல்லாம் குட்டி மேடம் விளையாடவா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா இருக்கு.வாழ்த்துக்கள் டீம்.

Kalai

அனைத்துமே அழகாக இருக்கின்றன. டூத் பிக் ஸ்டார் வித்தியாசமாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்