முட்டை உருளை கிரேவி

தேதி: December 22, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (7 votes)

 

முட்டை - 4
உருளைக்கிழங்கு - 150 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி (பெரியது) - ஒன்று
பச்சை மிளகாய் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
கிராம்பு - 3
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
மல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக்கி வைக்கவும். முட்டைகளை அவித்து தோலுரித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு போட்டு பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்க்கவும்.
நன்கு சுருள வதங்கியதும், உருளைக்கிழங்கைச் சேர்த்து, மசாலாக்களை சேர்க்கவும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும். இத்துடன் முட்டைகளைச் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
உருளைக்கிழங்கு வெந்தவுடன் இறக்கி மல்லித் தழை தூவி பரிமாறவும். இது சாதம், இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற சைட் டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல சுலபமான குறிப்பு :) சுப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமீனா முட்டை கிரேவி சூப்பர் செய்து பார்த்துட்டு சொல்லுறேன் வாழ்த்துக்கள்....

அஸ்ஸலாமு அலைக்கும் சமினா பார்க்கும்போதெ அற்புதமாயிருக்கு ஈசியாவும் இருக்கும்னு நினைக்கிறேன் நிச்சயம் செய்துபார்க்கிறேன் வாழ்த்துக்கள்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு மிக்க நன்றி.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ரொம்ப நன்றி வனிதா அக்கா.
வ அலைக்கும் சலாம் ஷாதிகா, கண்டிப்பாக செய்துபார்த்துட்டு சொல்லுங்க.
நிஷா அம்மா ரொம்ப நன்றி அம்மா.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமீனா உங்கள் முட்டை கிரேவி ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்!

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வ அலைக்கும் சலாம் ஹலீலா. வாழ்த்துக்கு மிக்க நன்றி.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

முட்டை உருளை கிரேவி டக்கரா இருக்கு:) இன்னும் நிறைய குறிப்புகள் வழங்க வாழ்த்துக்கள் ஷமீனா:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நித்யா.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ஷமீனா,

நல்லதொரு குறிப்பு

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஷமீனா சூப்பரான சுலபமான குறிப்பு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அஸ்ஸலாமு அழைக்கும்...ரொம்ப ஈசியாவும் அதே நேரம் ரொம்ப ருசியாவும் உள்ள மாதிரி அழகா செய்து காட்டி இருக்கீங்க வாழ்த்துக்கள் சமீ...

SSaifudeen:)

முட்டை உருளை கிரேவி சூப்பர், நானும் இப்பிடி தான் செய்வேன், ஆனா தக்காளி மட்டும் அரைச்சு சேர்ப்பேன், நல்ல குறிப்பு, வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறிப்புல மேலே பாருங்க.. யார் பண்னாங்கன்னு. அப்புறம் சொந்தக்காரங்க என்னை அடிக்க வர போறாங்க ;)ஷமீனா, ஷமிக்கனும் சுமியை;)

முட்டை,உருளை கூட்டணியோட கிரேவி நல்லார்க்கும்னு தோணுது. எளிமையான, விரைவில் செய்ய கூடிய குறிப்பும் கூட.. வாழ்த்துக்கள் ஷமீனா:)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமீனா,முட்டை கிரேவி பார்க்கும்போதே ரொம்ப அருமையாயிருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சூப்பரான... சுலபமான..முட்டை கிரேவி.
முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள் ஷமீனா.

ஹசீன்