தையல் வலி after 3month of caesarian - clear my doobt

எனக்கு நான்கு மாதத்திற்கு முன்பு சிசேரியன் செய்து அழகான பெண் குழந்தை பிறந்தது. நான் முதல் மாதம் நன்கு ஒய்வு எடுத்தேன் . பிறகு இரண்டாவது மாதத்திலிருந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். இப்போது தையில் போட்ட இடத்தில் வலி அதிகமாக உள்ளது . எனக்கு தையல் போட்ட இடத்தின் மீது தடிப்பு சிறிது சிறிதாக உள்ளது . வலியும் சிறிது உள்ளது .
இது ஏதும் பிரச்சனையா ?
i dont lift heavy weights. Please clear my doubt..........

இது அதிக வேலை செய்வதால் தையல் போட்ட இடத்தில் ஏற்படும். எதுக்கும் ஒரு முறை டாக்டரை பாருங்க. உள்ள புண்ணாகாம இருக்கான்னு சொல்வாங்க. தையல் போட்ட இடம் வெளிய தான் ஆறியிருக்கும். உள்ளே ஆற 6 மாதம் வரை ஆகும். சிரமமெடுத்து வேலை செய்தால் இது போல் ஆகும். எதுக்கும் டாக்டரை பாருங்க. எனக்கும் இருந்தது... ஓய்வெடுக்க சொன்னாங்க, சரியாகிடுச்சு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா அக்கா ,நான் இன்று டாக்டரை பார்க்கபோகிறேன், நாளை பதில் தருகிறேன் .

உன் வாழ்க்கை உன் கையில்

வனிதா அக்கா , டாக்டர் ஒய்வு தான் எடுக்க சொன்னார் . பதிலுக்கு மிக்க நன்றி .........

உன் வாழ்க்கை உன் கையில்

ம்ம்ம்... குட். :) இப்படி ஆனா ஓய்வு குறைந்தது 3 - 5 மாதம் வேண்டும். வெயிட் தூக்காதீங்க, உட்கார்ந்த வாட்டில் நகராதீங்க, கை எட்டி மேல எதுவும் எடுக்காதீங்க, அதாவது வயிறு பகுதி ஸ்ட்ரெட்ச் ஆகும் எதுவும் பண்ணாதீங்க. ஏன்னா நாம அப்படி எதாச்சும் பண்ண பண்ண உள்ள புண்ணாகிட்டே இருக்கும். கொஞ்ச நாள் கவனமா இருந்தா சுத்தமா அதன் பின் என்ன பண்ணாலும் வலி வராத அளவுக்கு அழகா ஆறிடும். பயப்படாதீங்க... சீக்கிரம் சரியாகிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்