ஈஸி வெனிலா கேக்

தேதி: December 24, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

 

மைதா - ஒரு கப்
சீனி - முக்கால் கப்
எண்ணெய் - அரை கப்
பால் - அரை கப்
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
வெனிலா பவுடர் (அ) வெண்ணிலா எசன்ஸ் - அரை மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி


 

மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, வெனிலா பவுடர் ஆகியவற்றை இரண்டு அல்லது மூன்று முறை சலித்துக் கொள்ளவும்.
பாலில் வினிகர் ஊற்றி பாலைத் திரிய விடவும்.
முட்டையுடன் சீனி, திரிந்த பால், எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். சீனி முழுவதும் கரையும் வரை நன்றாக கலந்து கொள்ளவும்.
பின் இந்த கலவையில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கவும்.
கேக் உப்பி வர வசதியாக இருக்குமளவு சற்று குழியான ஒரு பாத்திரத்தில் நெய் தடவி கலவையை அதில் ஊற்றவும்.
குக்கரை அடுப்பில் வைத்து ஐந்து நிமிடத்திற்கு சூடு செய்து அதில் சமையல் சோடாவை பரவலாக தூவவும்.
குக்கர் தட்டை குக்கரில் வைத்து அதன் மேல் கேக் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து கேஸ் கட் மற்றும் வெயிட் போடாமல் குக்கரை மூடி தீயை குறைத்து அரை மணி நேரத்திற்கு அப்படியே வைத்து விடவும்.
ஒரு டூத் பிக் (அ) கத்தியால் குத்தி கேக் வெந்து விட்டதா என்று பார்க்கவும். கேக் ஒட்டாமல் வந்தால் அடுப்பை அணைத்து விடவும். இல்லையேல் மேலும் ஒரு ஐந்து நிமிடத்திற்கு அடுப்பில் வைக்கவும். இப்போது மிகவும் சுவையான ஈஸி வெனிலா கேக் தயார். விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

இதே செய்முறையை பயன்படுத்தி பாதாம், முந்திரி, டூட்டி ப்ரூட்டி சேர்த்தும் செய்யலாம் அல்லது மற்ற ப்ரூட்ஸ் ப்ளேவரிலும் செய்யலாம். ஏதாவதொரு ப்ளைன் சாக்லேட்டை உருக்கி மேலே அலங்கரிக்கலாம். மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்... சூப்பர். ஈசி மெத்தட். கனிமொழி கேட்டுட்டே இருந்தாங்க ;) இப்போ அவங்களுக்கு ரெசிபி கிடைச்சிருச்சு. வாழ்த்துக்கள் சமீஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கும் குழுவிற்கும் மிக்க நன்றி:)

SSaifudeen:)

எங்கே கனி....எங்கே கனி...இங்கே வாங்கோ.....
வனிதா அக்கா உங்கள் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும் ` மிக்க நன்றிக்கா....

SSaifudeen:)

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமீஹா ம்ம்ம்..... பார்த்த உடனே சாப்பிடணும் போல இருக்கு....சூப்பர்.... இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு சொல்றேன் மா.... வாழ்த்துக்கள் ஷமீஹா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அலைக்கும் சமிஹா என்னது இது இப்படி கலக்கிட்டு இருக்க..முட்டை ஒன்னு போதுமா உடனே செயிரேன் வாழ்த்துக்கள்

சூப்பர் பா... ரொம்ப ஈஸியா இருக்கு.... குக்கர் முறைல கேக் செய்றது எப்படின்னு ரொம்ப அழகா செய்து
காட்டிடீங்க.... ரொம்ப நன்றி.... வாழ்த்துக்கள்... :)

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமிஹா,டேஸ்டி கேக் சூப்பர்.கண்டிப்பா செஞ்சு பார்த்துட வேண்டியது தான்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஷமீஹா, வினிகர் சேர்த்து செய்யப்படும் கேக்கை இப்ப தான் கேள்விபடுறேன். குறிப்பு நன்றாக உள்ளது. முக்கியமாக ovan இல்லாதவங்களும் கேக்கை மிஸ் பண்ணாதபடி எல்லார் வீட்டிலும் இருக்கும் குக்கரை வச்சு கேக் செய்த விதம் சூப்பர். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஈஸி வெண்ணிலா கேக் பார்க்கவே அசத்தலா இருக்குதே! நானும் நீங்க ஃபோன்ல சொன்னப்போ இந்தளவு சூப்பரா இருக்கும்னு நினைக்கவே இல்ல:) ரொம்ப அருமையா இருக்கு. வாழ்த்துக்கள் ஷமீஹா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சமீஹா,
சிம்ப்லி சூப்பர்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஷமீகா ஓவன் இல்லாம கேக்தயாரிக்க முடியாதுனு நெனச்சு இருந்தேன், எளிதான முறைய சொல்லிட்டீங்க உடனே தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறேன் வாழ்த்துக்கள்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

azhaha cake senju irukeenga..easyavum irukkuma..kandippa try panraen..vazhthukkal ma..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

சமிஹா ஈஸி கேக் ரொம்ப அருமையா இருக்கு கண்டிப்பா எல்லோரும் செய்து பார்க்கலாம் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வ அலைக்குமுஸ்ஸலாம்....இந்தாங்க எடுத்துக்குங்க...பிடிங்க...நீங்க எங்க வீட்டுக்கு வந்தால் இப்படி உபசரிப்பு ஏகதடபுடலா நடக்கும்...வர்றீங்களா...????இன்ஷா அல்லாஹ் செஞ்சி பாருங்கம்மா...உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி...:)

SSaifudeen:)

வ அலைக்குமுஸ்ஸலாம்...
////சமிஹா என்னது இது இப்படி கலக்கிட்டு இருக்க...///
இல்லைக்கா நான் கலக்கிலாம் முடிச்சித்தான் இந்த கேக் செஞ்சேன்க்கா...ஹீ...ஹீ...ஹீ...
முட்டை ஒனனுபோதும்க்கா...உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றிக்கா...

SSaifudeen:)

ஆமாம் தீபா ரொம்ப ஈசி தான் செஞ்சி பாருங்க...உங்கள் அன்பு வாழ்த்திற்கு மிக்க நன்றி தீபா:)

SSaifudeen:)

வ அலைக்குமுஸ்ஸலாம்...உங்களுக்கெல்லாம் தெரியாத கேக்கா!!!:)இருந்தாலும் என் கேக்கையும் செய்து பார்க்கிறேன் என்று சொன்னதற்கு மிக்க நன்றிமா....:)இன்ஷா அல்லாஹ் செஞ்சி பாருங்கம்மா...

SSaifudeen:)

எங்க வீட்டு அவன் கம்பி உடஞ்சிபோச்சிக்கா அதன்விளைவால் வந்தது தான் இந்த ஈசி வெண்ணிலா கேக்...செய்து பாருங்க உங்கள் அன்பு வாழ்த்திற்கு மிக்க நன்றிக்கா...:)

SSaifudeen:)

நான் சொன்ன எதைத்தான் நீங்க முழுசா நம்புநீங்க இன்னும் என்னை சின்ன பிள்ளையாவே பாருங்க:)நான் வளர்கிறேன் நித்தி....:)
சூப்பர்ன்னு மட்டும் சொன்னா எப்படி அண்ணாக்கு முட்டை இல்லாமல் இதே மாதிரி செஞ்சி கொடுங்க...செர்ரி,நட்ஸ் ஏதாவது சேர்த்து பண்ணுங்க நல்லா இருக்கும் நித்தி...உங்கள் அன்பு வாழ்த்திற்கு மிக்க நன்றிமா...:)

SSaifudeen:)

உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றிமா...:)

SSaifudeen:)

நானும் உங்களை மாதிரி தான் நினைத்தேன் அருட்செல்வி...ரொம்ப நல்லா வந்தது மேலே ஏதாவது க்ரீம் அல்லது சாக்லேட் பாரை உருக்கி மேலே ஊற்றி சாப்பிடுங்கள் நல்லா இருக்கும்.எங்கள் வீட்டில் பீனட் பட்டர் இருந்தது நான் அதை உருக்கி ஊற்றினேன் நல்லா இருந்தது:)உங்கள் அன்பு வாழ்த்திற்கு மிக்க நன்றிமா...

SSaifudeen:)

இன்ஷா அல்லாஹ் செஞ்சி நீங்கள் ,அப்துர் ரஹ்மான்,அண்ணா எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடுங்க...உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றிமா...

SSaifudeen:)

உங்கள் அன்பு வாழ்த்திற்கு மிக்க நன்றிமா...கண்டிப்பா செஞ்சி பாருங்க...நல்லா வரும்...

SSaifudeen:)

கேக் ரொம்ப அழகா இருக்கு மா. இறால் டிஷ் எல்லாம் முடிந்ததா?
நல்லதா போச்சு. இல்லேனா நான் ஃபோன் போட்டு திட்டியே இருப்பேன். எனக்கு ஆகாத இறாலையே பிடிச்சிட்டு இருக்கீங்கனு......

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

nega senji kaatina cake inaiki ippo dan pa senjen romba nalla vandhuchi

ana nega sonnapola 20 min la cook agave illaiga ponghi irundhuchi creme ya appram 30 minla dan color vandhuchi 45 min ladanppa cook achi eppidiyo cake super thanks for teaching shameeha[[ kochikathiga very sry nega sonnapola 20 min cook agalanona romba kovam vandhuchi unga mela later cake nalla vandona romba paaratinen ungala ]]

ஈஸி வெண்ணிலா கேக் அருமை ஷமீஹா.வாழ்த்துக்கள் :)

Kalai

அஸ்ஸலாமு அலைக்கும் கேக் அழாக செய்து இற்கிங்க.............நாங்களும் குக்கர் ல செய்வோம் இதை நாங்க பூவடை னு சொல்வோம் :)

கேக் சூப்பர்...உங்க குறிப்புகள் எல்லாம் கலக்கலா இருக்கு...வாழ்த்துக்கள் மா...
ரூபி நாங்களும் இதை பூவடைன்னு தான் சொல்வோம்...

உங்களுக்காகவே அடுத்து ஒரு இறால் ரெசிபி வந்துகொண்டே இருக்கிறது:)எப்படி என்னை திட்டுரீங்கன்னு பார்ப்போம் :)
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி...

SSaifudeen:)

ஓஓஓஓ!!! அதான் எனக்கு அன்னைக்கு செம்மையா பொரை ஏறுநிச்சா...நம்மளுக்கு யாரும் இந்த அளவுக்கு எதிரிகள் இல்லையே...பின்னே யாருடா நம்மள இப்படி திட்டுரதுன்னு யோசிச்சிகிட்டே இருந்தேன்...அது நீங்க தானா...:):):)

நான் எப்போங்க இருபது நிமிடம்ன்னு சொல்லி இருக்கேன்...அரைமணி நேரத்தில் ஆகாட்டி டூத் பிக் வச்சி பார்த்து மேலும் ஐந்து நிமிடம் வைக்க சொன்னேனே கவனிக்கலையா?????:)பொங்கி வரும்ன்னு தான் குழியான பாத்திரத்தில் வைக்க சொன்னேன்... எனிவே பிநிசிங்க்கில் என்னை பாராட்டுனத்தை படித்ததும் தான் ரொம்ப ஹேப்பியா இருந்தது...இன்னொரு முறை ட்ரை பண்ணி பாருங்க நீங்க கேக் எக்ஸ்பர்ட் ஆயிருப்பீங்க இல்லையா...:)

உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றிமா...

SSaifudeen:)

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றிமா...

SSaifudeen:)

வ அலைக்குமுஸ்ஸலாம்...நாங்களும் பூவடை செய்வோம் ரூபி ஆனால் நாங்க அதுக்குன்னு தனி சட்டி வச்சிருப்போம் அது ரொம்ப கனமா பூ பூவா இருக்கும்... அரிசி மாவு,ரவாவில் தான் சுடுவோம் பூவடை...

உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி ரூபி....

SSaifudeen:)

நீங்களும் பூவடைதானா .....ஹலோ நாங்க கேக்கு செஞ்சிருக்கோம் மேடம் :)அப்போ கேக்கை உங்க ஊரில் பூவடைன்னு தான் சொல்லுவீங்கலா....:)
உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றிம...

SSaifudeen:)

சூப்பர் ஆண்ட் ஈஸி கேக்...

வாழ்த்துக்கள்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ஷமீஹா கேக்ல எண்ணெய் சேர்த்து இருக்கீங்கள அதுக்கு பதில் ஆலிவ் ஆயில் சேர்க்கலாமா.அப்புறம் நீங்க வெண்ணிலா பவுடர் மாவோட சேர்த்து இருக்கீங்க வெண்ணிலா எஸ்சென்ஸ்னா எப்ப சேர்க்கனும்.குக்கர்ல கண்டிப்பா சமையல் சோடா தான் சேர்க்கனுமா அதுக்கு பதில் உப்பு தூவலாமா?

sry shameeha ennoda kavanakuraivukku ungalata kochikitten amam nega arai mani neram nudan pottu irukkiga marubadiyum sry appram oru dought cookerla
samayal soda podama cake cook seiya mudiyadha enda mathiriyana cooker cakenalum samayal soda dan pottu cake vaikanuma illa cooker tattu pottu appidiye vaikalaama

ஷமீஹா புத்தாண்டுக்கு உங்க கேக் செய்தாச்சு....சூப்பரா நல்ல சாப்டா இருந்தது....

hai akka nan unga cake senju parthen nala vanthuchu akka..thanks akka bakeing sodaum namma vetla use panra appa soda um onna...pls tell me