தோல் சுருக்கமா இருக்கு solution pls

என் அத்தை பொண்ணுக்கு 29 வயசு ஆகுது. அவளுடைய தோல் ரொம்ப சுருக்கமா இருக்கு. சின்ன வயசில் இருந்தே இப்படிதான் இருக்கு. ரொம்ப வயசானவங்க தோல் மாதிரி இருக்கு. ஹோமியொபதி ட்ரேட்மென்ட் 1 year எடுத்தாள். ஆனால் improvement ஒன்னுமில்லை. அவளுக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாக்கிறாங்க. இந்த problem அவளை brightness இல்லாம ஆக்குது. இது ஒரு பிரச்சனையாக இருக்கு. இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க தோழிகளே

பயத்த மாவு மற்றும் மஞ்சள் தூள் இரண்டையும் எடுத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து உடலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் சுருக்கங்கள் குறைந்து தோல் பளபளப்பாக மாறும். முகத்திற்கு போடும் மஞ்சள் தூளை பயன்படுத்தினால் மிகவும் நல்லது.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

thank you Anu,try பண்ணி பார்க்க சொல்றேன்.

thank you Anu,try பண்ணி பார்க்க சொல்றேன்.

தோழி இன்று காலையில் டிவி சேனல் ஒன்றில் பிரபல அழகுக்கலை கலைஞர் ஒருவர் முகச்சுருக்கம் சரியாக குறிப்பு சொன்னார். அது, முகத்திற்கு ஃபேஷியல் செய்ய பயன்படுத்தும் களிமண் கடைகளில் கிடைக்கிறதாம் அதனுடன் பாதாம் எண்ணெய் கலந்து கண்களைத்தவிர்த்து முகம் முழுக்க ஃபேஸ் பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து சூடான தண்ணீரில் கழுவி பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விட்டால் சுருக்கம் கரும்புள்ளி குறையும் என கூறினார். முயற்சித்து பாருங்கள். தேனை வெறுமனே புருவம் தவிர முகம் முழுக்க அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து மேலே சொன்னது போலவே சுத்தம் செய்து வந்தால் அழுக்குகள், கரும்புள்ளிகளை களைந்து முகம் பொலிவாகும் என்றும் கூறினார்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்