தேதி: December 29, 2012
கார்ட்ஸ்டாக் பேப்பர் - விரும்பிய நிறங்கள்
க்வில்லிங் டூல்,க்வில்லிங் கோம்ப்
க்ளூ
வாழ்த்து அட்டை செய்ய விரும்பும் நிற பேப்பரை இரண்டாக மடித்து, தேவையான அளவு வெட்டி வைக்கவும். பச்சை நிற பேப்பரை கால் அங்குல அளவில் வெட்டி வைக்கவும்.

எடுத்துள்ள அட்டையில் முன் பக்கம் ஒரு ஓரத்தில் ஸ்டார், சதுரம், வட்டம் என விரும்பும் டிசைனில் வெட்டி எடுக்கவும்.

க்வில்லிங் கோம்பில் ஒரு பச்சை நிற ஸ்ட்ரிப்பை வைத்து கோம்பில் உள்ள அனைத்து கம்பிகளையும் சேர்த்து சுற்றி ஓட்டவும். மீதி ஸ்ட்ரிப்பை மேல் பக்கமாக மேலிருந்து இரண்டாவது கம்பியில் முதலில் ஒட்டிய ஸ்ட்ரிப்புக்கு வலது புறமாக நுழைத்து கீழ் பக்கமாக எடுக்கவும். அதை அப்படியே மேல் பக்கமாக அதே இரண்டாவது கம்பியில் முதலில் ஒட்டிய ஸ்ட்ரிப்புக்கு இடது புறமாக நுழைத்து கீழ் பக்கத்தின் வழியே எடுக்கவும். இப்படியே ஒவ்வொரு கம்பிகளாக குறைத்து தேவையான அளவிற்கு இலைகளாக வரும் வரை செய்யவும். இதனை கோம்பில்லாமல் கையிலும் செய்யலாம்.

படத்தில் உள்ளதுபோல் வரும். இதுபோல் 4 செய்து கொள்ளவும்.

அதில் ஒன்று சற்று நீளமாக இருக்குமாறு செய்து இதனை படத்தில் உள்ள வடிவில் கார்டில் ஓட்டவும். கார்டின் உள்ளே முன் புறம் ஸ்டார் செய்துள்ள இடத்தில் ரோஸ் அல்லது வேறு பூக்கள் செய்து படத்தில் உள்ளதுபோல் ஓட்டலாம். கார்டின் மேல் அவரவர் விருப்பத்திற்கு அலங்கரிக்கலாம். எளிமையாக செய்யக்கூடிய வாழ்த்து அட்டை தயார்.

இதேபோல் வேறு டிசைனில் செய்த அட்டை இது.

Comments
கலா
கலா
ரொம்ப அழகு.அதிலும் கடைசி போக்கே படம் இன்னும் அழகு.வாழ்த்துக்கள் .
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
கலா பொக்கே ரொம்ப அழகு
கலா பொக்கே ரொம்ப அழகு
க்வில்லிங்
வித்தியாசம் வித்தியாசமாகக் கொடுக்கிறீங்க கலா. வாழ்த்துக்கள், தொடருங்கள்.
- இமா க்றிஸ்
கலா
க்வில்லிங்ல உங்களை அடிச்சுக்க ஆளில்லை :) அத்தனை நேர்த்தியான அழகான வேலைப்பாடு. சூப்பர் சூப்பர்... தொடர்ந்து கலக்குங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றிகள்.
Kalai
ரம்யா
மிக்க நன்றி :)
Kalai
நிகிலா
மிக்க நன்றி :)
Kalai
இமா
இமா ஆன்டி மிக்க நன்றி :)
Kalai
வனிதா
வனிதா அக்கா,இதை விட அழகா,க்ரியேடிவா க்வில் பண்றவங்க இருக்காங்க..நானெல்லாம் கத்துக்குட்டி.
வாழ்த்துக்கு மிக்க நன்றி :)
Kalai
புத்தாண்டு
அருசுவை தோழிகள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்