என் மனக்கவலையை தீர்த்து வைங்க என் தோழிகளே

எனக்கு அன்பான கணவரும், 3 வயதில் ஒரு பையனும் இருக்காங்க. இங்கு singaporeஇல் room sharingஇல் இருக்கிறோம். எங்களுடன் sharingஇல் familyaஇருப்பவர் adjust செய்து கொள்ள மாட்டென்றார்கள். அந்த பெண் வருவதும், சமைப்பதும் மட்டும் தான். 2 வருடமாக நான் தான் வீட்டை பெருக்குவது, kitchen கழுவுவது, stove, halls, staircase, sink, windows கழுவுவது எல்லாமெ நான் தான் செய்கிறென். முதலில் வீட்டை சுத்தமாக வைத்து கொள்வது நம் வேலை என்று செய்தேன். ஆனால் இப்பொ கோவம் வருது. என் கணவரின் friend அவர் கணவர் என்பதால் இவரும் ஒன்னும் சொல்ல மாட்டென்றார்.வருத்தபடுகிறார். அவரிடம் (lady)சொல்லிவிட்டென் தூய்மையாக வைக்க சொல்லி, ஆனால் அவர் காதில் போட்டு கொள்ள மாடென்றார்.முதலில் நன்றாக பேசிய அவர் இப்பொது பேசுவது கிடையாது. எனக்கும் இங்கு friends யாருமெ இல்லாதால் ஒவ்வொரு முறையும் அவர் பேசாமல் இருந்தால் நான் இதில் என்ன இருக்கு என பேசினென். ஆனால் இந்த முறை பேச கஷ்டமா இருக்கு. என்னானு தெரியல. எங்கள் இருவருக்கும் 3 friends இருந்தாங்க(playground kids விளையாடும் போது friends). இவர் அவர்களிடம் என்ன சொன்னார் தெரியவில்லை.அவர்களும் பேசுவது இல்லை. நான் phone பன்னால் கூட எடுக்கமாட்டென்றாங்க.சரியா பேசமாட்டென்ராங்க. ஆனா அவங்களுக்கு help வேனும்னா phoneஇல் கேக்கிறாங்க. என் கணவர் அவர்களை பற்றி யோசிக்காதே என்கிறார். என் பையனுக்காக தான் பார்க்கிரென் அவன் விளையாட அவங்க குழந்தைகளை கேக்கிறான்.

நான் என்ன செய்ய மறுபடி போய் பேசவா, நான் அங்கு பொம்மை போல் தான் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் பேசி கொண்டு இருந்தால் எனக்கு என்னமொ போல் இருக்கு. நான் அவர்களை பற்றி யோசிக்க கூடாது என நினைக்கிர்றென். ஆனால் முடியவில்லை. உங்க advice தாங்க பா oru sisteraa . நான் கேட்பதில் எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும். 2013 ஆவது நல்ல படியா இருக்க உங்க advice கேக்கிறென்.pls help பண்ணுங்க.

நீங்கள் அவர்களிடம் மனம் விட்டு வெளிப்படயா பேசுங்க.அவங்களயும் பேச சொல்லுங்க.

hai srithika nanum singaporela than iruken.unga feeling ennanu enaku puriyuthu.becoz nanum ippo rentuku than irukkom.neenga onnum feel pannathinka.unga friends kitta pesunga.en ennada pesamatinguringane kelunga.neenga enga irukeenga?

எல்லாம் நன்மைக்கே

உங்க கவலை எனக்கு நன்ற்றாக புரிகிரது. எனக்கும் இதே ப்ரச்சனை தான். இதே couple,no cleaning, i had to do everything இதே வேலை தான். நான் தான் அனைத்தையும் செய்தேன். என் நண்பர்களை எல்லாம் அந்த பெண் ஏதோ சொல்லி என்னிடம் பேசாமல் இருக்க செய்துவிடாள். என்னிடம் பேசாமல் எல்லாரிடமும் எனக்கு தெலுகு தெரியாது என்று நினைத்துக்கொண்டு என்னை பற்றி தப்பு தப்பாக கூறுவாள். இதை எல்லாம் பொறுமையாக பார்த்தேன், ஆனால் ஒரு நாள் என்னால் தாங்க முடியாமல், என் கணவரிடம் சொல்லி ஒரு பொய் சொல்லி அவர்களை அனுப்பி விட்டோம். என் பெற்றோர் வருகிரார்கள் என்று சொல்லி இரண்டு மாதத்தில் போக சொல்லி விட்டோம். இப்பொழுது தான் நான் ரொம்ப நிம்மதியாக உள்ளோம்.

Success never come without hard work

என்னோட அட்வைஸ் என்னவென்றால்...

1) ஒரு டைம்டேபிள் போட்டு கிட்சன் அண்ட் பாத்ரூமில் ஒட்டி வையுங்க.. முதல் வாரம் நீங்க அடுத்த வாரம் அவங்க அந்த மாதிரி, தேதி போட்டு எந்த எந்த தேதிகளில் நீங்கள் செய்ய வேண்டுமோ அந்த தேதிகளில் உங்கள் பெயரையும் அவங்க செய்ய வேண்டிய தேதிகளில் அவங்க பெயரையும் போட்டு வையுங்க... இதை உங்க்ள் கனவர் மூலம் அந்த பெண்ணின் கனவருக்கு தெரியபடுத்துங்கள்...

2) உங்கள் தேதியில் நீங்கள் செய்து முடித்ததும், அடுத்த வாரம் உன்ணோட முறைனு அந்த பெண்ணிற்க்கு நினைவூட்டுங்கள்...

3) ஒரு வேலை அந்த பெண் அவர் முறையை செய்ய மறந்தாலும்... இன்னைக்கு நீ பாத்ரூம் கழுவனும் செய்யலயான்னு கேட்டுடுங்க...

4) சமயலறையும் அதே போல் தான்... பாத்திரம் கழுவும் போது நீங்கள் சமைத்த பாத்திரத்தை மட்டும் நீங்கள் கழுவி வைய்யுங்கள்... அப்படி உங்கலுக்கு முன் அவர் சமைத்தால் நான் சமைக்கனும் நீ சமைத்த பாத்திரத்தை கழுவி குடுத்திடுனு சொல்லிடுங்க...

5)வீட்டை சுத்தம் செய்வதும் நீங்க ஒரு முறை அந்த பெண் ஒரு முறை என்று சொல்லிடுங்க...

எதுவும் இல்லைனால் மேலே தோழி சொன்னது போல் எதாவது காரணங்கள் சொல்லி அவங்களை காலி பன்ன சொல்லுங்க... ஆனா அடுத்து வரும் வேரொருவர் எப்படி நு சொல்ல முடியாது...

என் கனவரின் ஃப்ரண்டு வீட்டில் ஒரு பேமிலி மற்றும் ஆறு பேச்சுலர்ஸ்... அவங்க பாத்ரூம் க்ளீன் பன்றது கூட இந்த வாரம் இவங்க, அடுத்த வாரம் இன்னொருத்தனு பாத்ரூம் உள்ளயே டைம்டேபிள் போட்டு ஒட்டி வச்சிருபாங்க... இதனால் இதுவரை அவர்களுக்குள் எந்த ப்ரச்சினையும் வந்ததில்லை...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ஹாய் தோழி,
உங்கள் நிலைமை எனக்கு நன்றாக புரிகிறது...நானும் சிங்கப்பூரில் ஷேரிங் அப்பார்ட்மென்ட்டில் தான் வசிக்கிறேன்.....
2 நண்பர்கள் சேர்ந்து வீடு எடுக்கும் போது நன்றாக தான் இருக்கிறது..ஆனால் நாள் ஆக ஆக அது தான் பெரிய பிரச்சனை...வெளி ஆட்கள் என்றால் நாம் சொல்லலாம்.நண்பர்கள் என்றால் தயக்கம் தான்.
தவறு உங்கள் மேல் தான்..நீங்கள் தான் ஆரம்பத்தில் இருந்து அவருக்கு இடம் கொடுத்து விட்டீர்கள்...
நீங்கள் தோழிகள் சொல்வது போல் ஒரு வாரம் நீங்கள் செய்து அடுத்த வாரம் அவரை க்ளீனிங் ஒர்க் செய்ய சொல்லுங்கள்...
சின்க் ,கிச்சன் துடைப்பது எல்லாம் அவரவர் சமையல் வேலை முடிந்ததும் சுத்தம் செய்ய சொல்லுங்கள்...
நான் இருக்கும் இடத்தில் சமைத்தவுடன் நான் க்ளீன் செய்து விடுவேன்...அது போல் அடுத்தவர் செய்ததும் அவர் சுத்தம் செய்ய வேண்டும்...நான் வேலைக்கு செல்வதால் மற்ற சுத்தபடுத்தும் வேலைகள் எல்லாம் என் விடுமுறையன்று மாற்றி கொள்வேன்...நீங்களும் அப்படி சொல்லுங்கள்....
எதற்கும் ஒத்து வரவில்லை என்றால் வீடு மாறி விடுங்கள்...சிங்கையில் வீடு மாறுவது புதியதா என்ன?
நான் இங்கு வந்த புதிதில் புதிதாக மாறும் போது அழுகையாக வந்தது...இப்பொழுது பழகி விட்டது.....இதற்காக நீங்கள் உங்கள் மகிழ்ச்சியை கெடுத்துக் கொள்ளாதீர்கள்...கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காகத்தான் நாம் சொந்தங்களை எல்லாம் விட்டு இங்கு வசிக்கிறோம்...
அப்படி இருக்கும் போது இதற்கு எல்லாம் மனதை வருந்தும் படி விடாதீர்கள்..பிறகு தோழிகள் அதுவும் புதிதாக நிறைய கிடைப்பார்கள்...நீங்களும் தமிழ் மக்கள் என்றில்லாமல் மற்ற மொழி தோழிகளுடனும் பேசினால் நல்ல தோழமை கிடைக்கும் உங்கள் குழந்தைக்கும் சேர்த்து தான்....
வேறு ஏதாவது கேள்வி என்றாலும் கேளுங்கள்...எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்...

உங்கள் பதில்களுக்கு நன்றி. prema நீங்க சொன்னது போல் எப்பொவொ timetable போட்டு அவர் கணவரிடம் சொல்லிட்டார். அதன் பிறகு தான் பேசவேயில்லை. clean செய்யவும் இல்லை.அழுக்காக kitchen,stove 3 மாதம் இருந்தது என் கணவர் தான் பிறகு சுத்தம் செய்தார்.அவரிடம் இது உங்கள் முறை என்று சொன்னால் அவர் காதில் போட்டு கொள்ள மாடென்றார்.என் பையன் அவர் பையனை விளையாட பின்னாலயே கூப்பிட்டு car park இல் கீழெ விழுந்து அழுது கொண்டு இருக்கிறான் அவர் பார்த்தும் பார்க்கததுமாக போகிறார் roadஇல்.அழுது அழுது என் பையனுக்கு ஜுரம் இருமல் வந்துவிட்டது.shameela
இந்த வீடு என் கணவரின் வேலைக்கு பக்கம் என்பதாலும் என் பையன் பள்ளிக்கும் பக்கம் என்பதாலும் வேற வீடு செல்ல என் கணவர் ஒத்துக்க மாட்டென்றார். friend என்பதாலும் சொல்ல தயங்குகிறார்.நான் இருக்கும் இடத்தில் சமைத்தவுடன் நான் daily க்ளீன் செய்து விடுவேன்.அவர் வருவதும், சமைப்பதும் மட்டும் தான்.

Hi Nita Singapore la Engadget irukiga Nahum singam tha pa

என்றும் அன்புடன்
சாந்திரவி

marsiling(woodlands) Neenga

marsiling(woodlands) Neenga

மேலும் சில பதிவுகள்