கணவன் மனைவி புதுவருசதில என்ன பிளான் பன்னிருகின்கள் ?

ஹாய் புது வருட நல் வாழ்த்துக்கள்
நான் அறுசுவைக்கு புதிய தோழி. என் முதல் பதிவு .
நான் புதிதாக திருமணமனவள் . எனக்கும் என்னவருகும் இடையில் சிறிய கருத்து முரண்பாடுகள் வருவது சகஜம் தான் . ஆகவே இந்த புதிய வருடத்திலிருந்து சில technique, plan பயன்படுத்தி என்னவருடன் சந்தோசமாக சிக்கல் இன்றி வாழ்க்கையை கொண்டு நடத்தலாம் என தீர்மானித்து இருக்கிறேன். தோழிகளே நீங்கள் என்ன என்ன technique பயன்படுதிறேங்க கணவரோட சந்தோஷமான நிம்மதியான வாழ்கை வாழ . உங்கள் அனுபவங்களை என் கூட பகிர்ந்து கொண்டால் என்னைப்போல சிறியவளுக்கு உதவியாக இருக்கும் . சின்ன சின்ன தகவல் எண்டாலும் சொல்லுங்கள்.

வணக்கம் யாதுகா, அறுசுவை தங்களை இனிதே வரவேற்கிறது!! இனிய புத்தாண்டு(2013) நல்வாழ்த்துக்கள்.
1. விட்டுக்கொடுத்து போதல்:
அலுவலக விஷயமாக நேரத்தில் வருவதாக சொன்னவர் லேட்டாக வந்தால் கோபம் கொள்ளலாகாது.
நீங்க சமைக்கிறப்ப கூடமாட ஒத்தாசை செய்யணும்னு நினைக்காதீங்க. அப்படி நினச்சிட்டிருந்து அவர் உதவி செய்யலின்னா கோபம் பலமடங்கு அதிகமாகும்.
ஒருவேளை உதவி பண்ணுனா ஏன் காய வெட்டிட்டு கத்திய கழுவல, அடுப்பு மேல குழம்பு ஊத்தி வெச்சிருக்கீங்க இதுபோல சொல்லக்கூடாது.
எந்த செயலுக்கும் பாராட்ட எதிர்பார்க்ககூடாது. நம்மல நாமே பாராட்டிக்கணும். அடிக்கடி அம்மா வீட்டுக்கு போகணும்னு அடம் பிடிக்கக்கூடாது.
அம்மா வீடு சொர்க்கம், நான் கையில அழுக்கு படாம வளர்ந்தவ அப்பிடினு அடிக்கடி சொல்லக்கூடாது.
முகத்த எப்பவுமே சிரிச்சமாதிரி வெச்சுக்கணும். மாமியார் வந்தா ரொம்ப பவ்யமா இருக்கணும், அங்களுக்கு வேண்டிய பணிவிடைகளை மனம் கோணாம செய்யணும், அவரோட அக்கா,தங்கை வந்தா சிக்கனம் பாக்காம செலவுபண்ணனும். அயாராது வீட்டு வேலைகளை செய்யணும்.
முக்கியமான விஷ்யம் நாம ஏதாவது தவறா பேசினோம்னு நெனச்சா மன்னிப்பு கேட்க தயங்ககூடாது. நம்ம வீட்டுக்காரர்தானேனு ஒரேயடியா ஓட்டக்கூடாது.
சில விஷயங்கள் போகப்போகதான் புரியும். தேவையில்லாத தர்க்கங்களில் ஈடுபடுதலை முடிந்தவரை தவிர்த்தல் நலம்.
இப்போதைக்கு தங்கள் கணவர் வெள்ளை காக்கா வேகமா பறக்குதுனு சொன்னாலும், ஆமாம்,ஆமாம் எனக்கூறிவிடுங்கள். போகப்போக சரியாகிவிடும்.

இது காதல் திருமணம் என்றாலும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் பொதுவான விஷயமே!!

தங்கள் இல்லற வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள் தோழி!!

இன்னும் தோழிகள் வந்து பல விஷயங்களை கூறுவார்கள் காத்திருங்கள்!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கு எனது நன்றிகள். எனது முதல் பதிவுக்கு கருத்திட்டு என்னையும் உங்களில் ஒருத்தியாய் இணைத்து உள்ளீர்கள்.

யாதுகா

மேலும் சில பதிவுகள்