திரு & திருமதி

வணக்கம் அறுசுவை தோழிகளே,

நான் புதிய உறுப்பின்ர். என் பெயர் சரு. எனக்கு marriage அகி 1 மாதம். என்க்கு மாமியர் வீடு பிடிக வில்லை. இங்கு என் மாமியர் நான் கடை சென்றள் நனும் வருவன் என்று கூறுகிறள். இல்லை நனு சென்று வருகிறோன் கூறி சென்ற வரும் போது வீடு அவள்வுதன். அன்று நிம்ம்தி இல்லை.நான் என்ன பான்டும்

கல்யாணம் ஆகி ஒரே மாசதுல முடிவு பண்ணிட்டீங்க மாமியார் பிடிக்கலன்னு!!! “கூட வரேன்னு சொல்றாள்” .... ம்ம்... முதல்ல மாற்றம் உங்க கிட்ட தான் வரணும். பெரியவங்களுக்கு மரியாதை. உங்களுக்கு பெரிய பதிவு போடனும்.... உங்களை மாத்திக்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

திருமணமாகி ஒரே மாதத்துக்குள் மாமியார் வீடு கசந்திடுச்சா? மாமியாரை எப்படி சமாளிப்பதுன்னு அப்புறம் பார்க்கலாம். பெரியவங்களை மரியாதையா பேசணும் அப்படீங்கறது ரொம்ப முக்கியமான விஷயம் இல்லையா. முதலில் அதை சரியாக்கிக்கோங்க. நீங்க மனசில் மரியாதையோடதான் இருக்கீங்க எழுதும் போதுதான் தப்பாகிடுச்சு அப்படீன்னீங்கன்னா இனிமே எழுதும் போதும் கவனமாவே எழுதுங்க. ஏன்னா நீங்க எழுதறது மட்டும்தான் எங்களுக்கு தெரியும்.

நம்ப அம்மாவை நம் சகோதரனின் மனைவி இப்படி மரியாதை குறைவா பேசினா நமக்கு என்ன தோணும்? அதேதான் நம்ப மாமியாரை நாம பேசும் போதும் கவனமா பேசணும்.

நம் சமூக அமைப்பில் திருமணம் அப்படீங்கறது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான தனிப்பட்ட உறவு மட்டும் இல்லை. அது இரு குடும்பங்களின் இணைப்பு. இருகுடும்பங்களையும் இணைக்கும் பாலமாக இருப்பவர்கள்தான் அந்த ஆணும் பெண்ணும். கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் மட்டும் போதும் அவர்களின் பெற்றோர் தேவை இல்லை என நினைத்தால் அது பிரச்சினைதான்.

உங்க மாமியார் யார் எப்படிப்பட்டவங்க எதுவும் எங்களுக்கு தெரியாது. கடைக்கு உங்க கூட வருவேன்னு சொன்னால் அவங்களை அழைத்துப் போவதில் என்ன தவறு? அல்லது என்ன கஷ்டம்? நீங்க தனியா உங்க கணவரோட போகும் போது கூட வரணும்னு ஆசைப் படறாங்களா?

திருமணம் ஆனதும் கணவரோடு தனியாக போய் வர வேண்டும் என்று நினைப்பது சகஜம்தான். அதில் தவறில்லை. ஆனால் உங்க மாமியாருக்கு உங்க கூட வர விருப்பம் இருக்குன்னா அவங்களையும் சில முறைகளாவது சேர்த்து அழைத்துப் போவதில் தவறில்லையே. ஒரு முறை நீங்க மட்டும் போறீங்களா மறுமுறை அவங்களையும் கூட்டிட்டு போங்க. ஆனா அப்படி கூட்டிட்டு போகும் போது மூஞ்சியை தூக்கி வச்சுட்டு உம்முன்னு இருக்காமல் அவங்களோட இயல்பா பழகுங்க. கொஞ்ச நாளில் அவங்களே நீங்களே போயிட்டு வாங்கம்மா நான் வீட்டில் இருக்கறேன்னு இருந்துக்குவாங்க.

இது மகனுக்கு திருமனமானதும் அம்மாக்களுக்கு வரும் பயத்தின் விளைவே. அதை நீங்க சரியா கையாண்டீங்கன்னா வாழ்க்கை இனிக்கும். இல்லைன்னா வீடு இப்படி கசந்துதான் போகும். வாழ்க்கை பூரா உங்க கணவரோடுதான் நீங்க வாழப் போறீங்க. சில நாட்கள் உங்கள் கணவரை அவரின் அம்மாவுக்கு விட்டுக் கொடுத்தால் என்ன குறைந்து விடப் போகிறது. நீங்க நல்லவிதமா அவருடைய அம்மாவை கவனிச்சுக்கிட்டீங்கன்னா உங்கள் மேல் அவருக்கு இருக்கும் அன்பு கூடுமே தவிர குறையாது. அப்படி இல்லாம மாமியாரோட மல்லுக்கு நின்னா உங்கள் கணவரின் அன்பையும் இழக்க வேண்டி வரலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவசிவா உங்கலின் கருத்து மிகவும் சரியானதே. சாரு நீங்கல் மாமியாராக பார்க்காமல் நம்மை பெற்றெடுக்காத அம்மாவாக, உங்கலுக்காகவே படைக்கப்பட்ட உங்கல் கனவரை இத்தனை ஆண்டு காலம் நல்லமுரையில் வளர்த்தி உங்கலுக்கு மிக பெரிய பொக்கிசாமாக குடுத்தவராக பாருங்கல். உங்க கணவரின் மீது அளவு கடந்த அன்பு இருந்தால் அவரின் அம்மா உங்கலுக்கு பாரமாக தெரிய மாட்டார்கள். நீங்கல் உறவினர் மட்ரும் கூட்டு குடும்ப வாழ்க்கையை ரசிக்கவும் அவற்றின் முக்கியங்கலை உனரவும், ஆரம்பித்தாலே உங்கலின் இந்த பலய எண்ணம் உங்கலை விட்டு பறந்தோடிவிடும்.நான் உங்களின் மனது கஷ்டபடும் படி எதாவது கூரியிருந்தால் மன்னிக்கவும்.

மேலும் சில பதிவுகள்