கொடித்தோடை சம்பல்

தேதி: January 4, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

கொடித்தோடை (Passion Fruit) இலைகள் - 30 (நடுத்தர அளவானவை)
சிவப்பு வெங்காயம் - கால் பகுதி (அ) சின்ன வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
எலுமிச்சை - பாதி
உப்பு - ஒரு சிட்டிகை


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
சுத்தமான நடுத்தர அளவான இளம் இலைகளாகத் தெரிந்து (இளம் இலைகளில் அதிகம் தூசு இராது.) ஈரத்துணியால் துடைத்து, நடு நரம்பை நீக்கி வைக்கவும். இலைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி, சுருட்டிப் பிடித்து மிக மெல்லிதாக அரிந்து கொள்ளவும். (இலைகளை அழுத்திப் பிடித்தால் சம்பலில் மெல்லிதாக கசப்புச் சுவை தலைகாட்டும்).
பச்சை மிளகாய், வெங்காயத்தை மெல்லிதாக அரிந்து எடுக்கவும்.
இவை அனைத்துடனும் தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துப் பிசிறி எலுமிச்சையை பிழிந்து கலந்து விடவும். சுடு சாதத்தோடு சாப்பிட சுவையாக இருக்கும்.

கொடித்தோடை இலைகளில் இரும்புச் சத்து அதிகம். தேங்காய்த் துருவல் சேர்க்காமலும் செய்யலாம். சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இமா
வித்தியாசமான பெயர்.நல்ல குறிப்பு . இங்கே வேறு பெயரில் அழைக்கிறோமா?இல்லை அங்கே மட்டும் கிடைக்கும் பழமா?
வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

-

ஹெல்தி ரெசிபி ஆனா இந்த இலை எங்க கிடைக்கும் நு தான் தெரில சூப்பர் பினிஷ்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்லாருக்கு குறிப்பு..இந்த இலை இங்கு கிடைத்தால் செய்யலாம்.வேறு பெயர் இருந்தால் சொல்லவும்.வாழ்த்துக்கள் :)

Kalai

கருத்துச் சொல்லியிருக்கும் அனைவருக்கும் நன்றி.
இது சாதாரண Passion Fruit கொடியின் இலைதான். பழம் சாப்பிடும் போது விதைகளை முளைக்கப் போட்டு விட்டால் வருடம் முழுவதும் கீரை கிடைக்கும். பழங்கள் அறுவடை செய்ய விரும்பினால் கீரை பிடுங்குவதைக் குறைக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

இமா,
Passion fruit ஆரஞ்சு/yellow பழமா? இல்லை நான் பார்த்தது வேறயா?
புதுமையா இருக்கு :)

என்றும் அன்புடன்,
கவிதா

இமாம்மா, பேஷன் இலைக்கு எங்கே போவேன்..எளிய முறையில் செய்ய கூடிய சத்தான குறிப்பு. இந்த கீரைக்கு மாற்று இருந்தால் சொல்லுங்க..இன்னும் இது போல நிறைய ஆரோக்கிய குறிப்புகளை தந்துட்டே இருங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பழம் எந்த நிறமாக இருந்தாலும் இலை சமையலுக்குப் பயன்படுத்தலாம் கவிதா.

‍- இமா க்றிஸ்

இதே முறையில் குறிஞ்சாவிலும் சம்பல் செய்யலாம். இதைவிட இரும்புச் சத்து குறிஞ்சாவில் அதிகம்.
வல்லாரை சம்பலுக்கு கொஞ்சம் பெரிதாக அரிந்து எடுக்க வேண்டும்.

பாஷன் கீரையின் சுவைக்கு மாற்று எதுவும் இல்லை. அது ஒரு தனிச் சுவை.

‍- இமா க்றிஸ்

உங்க ஊர் குறிஞ்சா மாலேவில் நிறைய வீடுகளில் இருக்கு ;) இந்த குறிப்பு வித்தியாசமா நல்லா இருக்கு. சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்தியாசமான குறிப்பு.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரெசிபி அருமையாக உள்ளது, ஆனால் கீரைகளின் பெயர்கள்தான் வாயில் நுழைய மறுக்கிறது ( ஓரு படத்தில் வடிவேலு சொல்லுவாரே கபாப், ஸ்ப்ரிங்க் ரோல், பர்கர் அது போல) வல்லாரை தெரியும், அதென்ன குறிஞ்சா, பாஷன் இதெல்லாம் சந்தையில் கிடைக்கிறதா, அல்லது இதற்கு நடைமுறையில் வேறு பெயர்கள் உள்ளனவா? இதே போல் இரும்புச்சத்து நிறைந்த அகத்தி கீரை, முருங்க்கீரையிலும் செய்ய இயலுமா?

இப்போதான் உங்கள் கேள்வி கண்ணில் பட்டது. :)
//குறிஞ்சா// மனசில கொசுவர்த்தி சுத்தி.. அழுகை அழு..கையா வருதே! ;))
ஒரு காலம் அறுசுவையையே கலக்கிட்டு இருந்துது 'குறிஞ்சா'. ;) உங்களுக்காக அதிராவின் குறிப்பு தேடித் தருகிறேன். அங்கே இலை படம் இருக்கும், பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/12021

passion fruit கொடியின் இலை இது. விற்பார்களா என்பது தெரியவில்லை. ஊரில், வீட்டில் வளர்ப்போம்.

//இதே போல் இரும்புச்சத்து நிறைந்த அகத்தி கீரை, முருங்க்கீரையிலும் செய்ய இயலுமா?// இல்லை.
முருங்கை - பச்சை வாசனை வரும். டெக்க்ஷரும் நன்றாக இராது.
அகத்தி - ம்ஹும்! இந்தக் குறிப்பைப் போல ட்ரை பண்ணாதீங்க.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி. இன்றுதான் பார்த்தேன். ;(

‍- இமா க்றிஸ்