கர்பகால இடுப்புவலி பதில் தரவும்.

பதில் கூறுங்கள் தோழிகளே!!
எனக்கு இரண்டு குழைந்தைகள் உள்ளன மூன்றவதாக ஏழு மாத கர்பிணியாக உள்ளேன் .
எனக்கு இடுப்புவலி மிகவும் அதிகமாக இருக்கிறது .இதற்க்கு முன்பு
இரண்டு குழந்தைகளுக்கும் இவ்வளவு வலி இல்லை.
இப்போது வீட்டுவேலை செய்வதே கடினமாக உள்ளது .
இதற்க்கு நல்ல தீர்வு சொல்லுங்கள்.

தோழியே கற்பகாலத்தில் எல்லோருக்கும் வரும் இடுப்புவலிதான் உங்களுக்கும் வந்துள்ளது.
ஆனால் இரண்டு குழந்தைக்கும் இது போல வலீ இல்லை இத்த குழந்தக்கு அதிகமாக உள்ளது என்று சொல்கிறீர்கள்
நீங்கள் சவுதியில் இருப்பதால் வீட்டுவேலைகள் எலாம் நீங்களேதான் செய்வீர்களென்று நினைக்கிறேன் .
அதனால் கொஞ்சம் அதிகமாகலாம் என்று தோன்றுகிறது அதுவும் இல்லாமல் இது மூன்றாவது குழந்தை .
நீங்கள் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகொள்வது அவசியமாகும் .முயற்ச்சி செய்துபாருங்கள் .மருத்துவரை அனுகி ஆலோசனை பெறலாம்

கவிதா, மாதங்கள் ஏற ஏற இப்படி இடுப்பு வலி வருவது சகஜம் தான். இதற்கு முன்பு இரண்டு பிரசவங்களின் போது இருந்த வேலைகளை விட இப்போது நீண்ட நேரம் அமர்ந்த நிலையில் வேலை செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் இடுப்பு வலி அதிகமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. நீங்கள் இரவு படுக்கும் முன் வெதுவெதுப்பான நீரை இடுப்பின் மேல் ஊற்றி விடுங்கள். கொஞ்சம் போல வலி குறையும். தூக்கமும் நன்றாக வரும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பதில் கொடுத்த இரண்டு தோழிகளுக்கும் நன்றி .சுடுநீர் தான் தினமும் வுற்றி வருகிறேன் .அரைமணி நேரம்தான் சரியாகுது ஏதாவது சத்து குறைவால் வழிகிறதா சந்தேகமாக இருக்கு .

கர்ப்ப காலத்தில் தேவையான ஓய்வு எடுப்பது அவசியம். இது மூன்றாவது பிரசவம் என்பதால் உடலின் பலம் குறைந்திருக்கும்.எந்த மருத்துவரும் பெரிதா மருந்து எதுவும் இப்ப தர மாட்டாங்க.
நீங்க அதிக நேரம் நிக்கற மாதிரி எந்த வேலையும் செய்யாதீங்க.கொஞ்ச நேரம் வேலை செய்தால் கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க.கர்ப்ப கால யோகா கத்துக்க முடிஞ்சா செய்ங்க. அது பலனளிக்கும். 27 வாரம் முடிஞ்சிருந்தா யோகா கத்து தர மாட்டாங்க. கடைசி டிரிம்ஸ்டரில் புதுசா எதையும் கத்துக்கறது நல்லதில்லை. மருத்துவரின் அனுமதி வாங்கிய பின் தான் யோகா கத்துக்கனும்.
குனிந்து வேலை செய்வது வலிய அதிகமாக்கும். முடிந்தவரை கீழிந்து ஏதாவது எடுக்க ஸ்குவாட் பொசிஸன்ல செய்ங்க.அதிக எடை தூக்காதீங்க.

சூடா ஒத்தடம் குடுக்கலாம்.தூங்கும் போது காலுக்கிடையில், இடுப்புக்கு, வயித்துக்கு தலையனை வைத்து தூங்குங்க.
ரொம்ப முடியாத பட்சத்தில் மருத்துவரை நாடுவது தான் ஒரே வழி.

நானும் கர்பம் தான்.இரண்டாவது கர்ப்பம்.இப்ப 8 வது மாதம். எனக்கும் பெல்விக் பெயின், ஹிப் பெயின் கஷ்டமா இருக்கு. என் மருத்துவர் ஒரே வார்த்தையில் "Its Part of Pregnancy.take rest.Ignore it னு" சொல்லிட்டாங்க. :-( யோகா தான் எனக்கு உதவியா இருக்கு.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்