38 வாரம் கர்ப்பம். வயிறு காலியாக உள்ளது போன்று உணர்வு

அன்பு தோழிகளே,

நான் 38 வாரம் கர்ப்பமாக உள்ளேன். இன்று தீடீரென வயிறு காலியாக உள்ளது போன்று உணர்கிறேன்.
எனக்கு இது என்னவென்று புரியவில்லை.

மேல் வயிறை கையால் அழுத்தி பார்க்கும், மெதுவென்று உள்ளது. ஆனால் பேபி உதைக்கிறான். அதோடு குழந்தையின் விக்கலை
உணர முடிகிறது.

கூடவே, பனி குடம் உடைந்தால் என்ன மாதிரி உணர்வு இருக்கும். எப்படி கண்டு பிடிப்பது.

உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் தோழி

ரேகா சுரேஷ்

புதுசாக உள்ளது...எனக்கு தெரியவில்லை....கண்டிப்பாக யாராவது உதவி செய்வார்கள்...பயம் வேண்டாம்...சத்தான உணவுகள் சாப்பிடுங்கள்..இறைவனை தினமும் வணங்குங்கள்...வாழ்த்துக்கள்

நிறை மாத கர்ப்பின்னியாக இருக்கும் நீங்கள்.. இவ்வாரு கூரலாம்மா.. தோழி இது..(PLEASE CHANGE THE TITLE பக் !!! பக் !! என்று உள்ளது ) இது உங்கள் DELIVERY TIME நெருங்குவத்ர்கான அறிகுறி.. பயம் வேண்டாம்.. இது குழந்தையின் தலை பகுதி.. கீழே இறங்கி.. வருவதர்க்கானஅறிகுறி .. தோப்பிளின் அளவு பெரிதாகும்.. "தோப்பிள் மலர்ந்தா ?" ஏன்று என் பாட்டி அடிக்கடி கேட்பார்கள்.. இதை வைத்தே அக்காலத்தில் அவர்கள் DELIVERY TIME கன்டுபுடிபார்கள் என்றும் கூருவார்கள் .. ALL THE BEST

Suganthy

மேலும் சில பதிவுகள்