தாய் பாலை எப்போது எப்படி நிறுத்தவது நல்லது?

அன்பு தோழிகளே,

என் குழைந்தைக்கு இப்போது 11 மாதகள் ஆகிறது. தாய் பால் குடிப்பாதல எதுவும் சாப்பிட மறுக்கிறாள். அவளை சாப்பிட வைக்க என்ன வழி? தாய் பாலை எப்போது நிறுத்தவது நல்லது? என் கணவர் நான் மிகவும் வீக்காக இருப்பதால் இப்போதே பாலை நிறுத்த சொல்கிறார். நான் என்ன செய்ய? நானும் மிகவும் மெலிந்து விட்டேன். 40 கிலோ தான் இருக்கிறேன். எனக்கு சரியான வழி காட்டுங்கள் தோழிகளே

குழந்தைக்கு 11 மாதம் தானே.... இன்னும் 1 மாதம் கொடுத்து நிறுத்தலாமே... ஏன்னா 1 வயது வரை தாய் பால் நல்ல எதிர்ப்பு சக்தி கொடுக்கும் குழந்தைக்கு. 6 மாதமே கூட போதுமானது தான். நீங்க அயன் + கேல்ஷியம் சப்லிமண்ட்ஸ் எதுவும் எடுக்கலயா? அப்படி எடுத்தா தான் பால் கொடுக்கும் தாயும் ஆரோக்கியமா, குழந்தைக்கும் போதுமான சத்தும் கிடைக்கும். ஏன்னா இப்ப நாம சாப்பிடும் உணவில் இயற்கையா இதெல்லாம் இல்லையே ;(

சரி... நிறுத்தனும்னு முடிவு பண்ணா நேரம் காலமெல்லாம் பார்க்க கூடாது. 2 நாள் பல்லை கடிச்சுகிட்டு குழந்தை அழுதாலும் பரவாயில்லைன்னு நிறுத்திடுங்க. அவரிடமோ இல்லை வீட்டில் உள்ள பெரியவர்களிடமோ இருக்கட்டும். கண்ணில் படாதீங்க பசிக்கு அழும் போது. தானா வழிக்கு வந்துடுவாங்க. கொடுப்பதை சாப்பிட துவங்கிடுவாங்க. நீங்க கண்ணில் படலன்னாலே பசிக்கு மற்றவர்கள் கொடுப்பதை குழந்தை சாப்பிடும். 2 நாள்.... அதிகபட்சம் 1 வாரம்.... பின் மறந்தே போகும் குழந்தைக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நித்தி எனக்கு தெரிஞ்சு 1 1/2 yearவரைக்குமாவது குடுக்கணும்னுதான் பாத்துருக்கேன். அவங்க சொன்னமாதிரி உங்க health நல்லா improve பண்ணிக்கோங்க. தாய்பால் குடுக்கும் வரை ஒல்லியா தான் இருப்பிய . தாய்ப்பால் நிப்பாட்டுன பிறகு ஓரளவு நார்மலா வந்திருவீங்க.

என் அக்க மகள் 1 3/4 வருடம் குடித்தால் . தாய்பாலை தவிர வேறு எதையுமே தொட்டதில்ல. எதை குடுத்தாலும் 1 வாய்தான் . அடுத்து துப்பிருவாள். ரொம்ப கஷ்ட்டப்பட்டு நிப்பாட்டி அப்பறம்தான் ஏதோ சாப்புட ஆரம்பிச்சால்.

நீங்க நிப்பாட்ட முடிவெடுத்தா எல்லாத்துக்கும் தெரிஞ்ச வேப்பை எண்ணெய் மருத்துவம்தான் சரியான வழி. நீங்க கொஞ்சம் கொஞ்சமா குறைங்க. கடைசியா வேப்பை தடவ ஆரம்பிச்சுருங்க. ஆட்டமடிகா வெறுத்துருவா. நீங்க ஒழுங்கா சாப்புட்டு கொண்டு இருங்கமா.

http://www.arusuvai.com/tamil/node/9305. இதுல நல்லா இருக்கு . read it.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

ரொம்ப நன்றி Vanitha. ஆனா நான் எந்த ஒரு அயன் + கேல்ஷியம் சப்லிமண்ட்ஸ் எடுத்துகல. அப்போ இன்னும் ஒரு மாசம் கொடுத்துட்டு நீருதிடறேன்

வாழ்க வளமுடன்

நான் அந்த லிங்க் -ஐ படித்தேன். மிகவும் Useful ல இருந்தது. ரொம்ப நன்றி Fero

வாழ்க வளமுடன்

அப்படியானால் நீங்கள் நிறுத்திவிடுவதே உங்களூக்கும் நல்லது. 1 வயதில் நிறுத்துவதால் பிள்லைகள் விரைவில் மறந்து விடும் என்றும், 6 மாதத்துக்கு பின் பிள்ளைக்கு தாய் பால் மட்டும் போதாது என்றும் மருத்துவர்கள் என்னை 1 வயதில் நிறுத்தி விடும்படி கூறினார்கள். அப்போது தான் மற்ற உணவை சுவை பார்க்கவே பிள்ளைகள் ஆரம்பிப்பார்கள். அதனால் தயக்கமின்றி நிறுத்தி ஆவின் பால் கொடுக்க துவங்குங்கள். 1 வயதானால் பாலில் நீர் கலக்க தேவை இல்லை. அப்படியே குறைவாக கொடுக்க துவங்கி அதிகப்படுத்தலாம். வயிற்றுக்கு அந்த உணவை ஏற்க சில நாள் ஆகும். கஞ்சி போன்றவை, மசித்த பழங்கள் கொடுக்க துவங்குங்கள். இந்த ஒரு மாதம் குழந்தை பசி நினைவெடுத்து அழும் முன் எதாவது கொடுத்து கொண்டே இருங்கள். தானாக தாய் பாலுக்கு அழுவது குறைந்து விடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்