சீமை இலந்தை அதிகம் சாப்பிட்டால் என்னவாகும்?

தலைப்புதாங்க கேள்வியே. இலந்தை கூடை சீக்கிரம் காலியாகும்னு எல்லாம் பதில் சொல்லக்கூடாது. நாம (அதாவது நானு) சீஸனுக்கு இஷ்டத்துக்கு வெட்டுற பழங்கள்ல இந்த சீமை இலந்தை ரெண்டு வருசமா லிஸ்ட்டுல சேர்ந்திருக்கு. அதுக்கு முன்ன இதை அதிகம் சாப்பிட்டது இல்லை. சின்ன வயசுல சின்ன இலந்தைப்பழம் சாப்பிடுவேன். அதுவும் செங்காயா இருக்கணும். பழுத்த பழம் பிடிக்காது. ஆனா, இலந்தை அடை, இலந்தை ஜூஸ் எல்லாம் எப்பவும் ரொம்ப பிடிக்கும். சரி, இப்ப பிரச்சனை என்னன்னா, இந்த சீசன்ல சீமை இலந்தையை பை பையா வாங்கி சாபிட்டுகிட்டே இருக்கேன். இப்ப கொஞ்ச நாளா உடம்புல ஒரு பிரச்சனை இருக்கு. அதுக்கு சீமை இலந்தைதான் காரணமான்னு தெரியலை. என் பிரச்சனை என்னன்னு இப்ப உடனே சொல்ல மாட்டேன் (அதுக்காக கன்னாபின்னானு எல்லாம் கற்பனை பண்ணிக்க வேண்டாம்). நான் அதை சொன்னா, ஆமா அதுதான் காரணம், அப்படித்தான்னு நிறைய பதில் வரும். சீமை இலந்தை அதிகம் சாப்பிட்டா என்ன பிரச்சனை வரும்னு தெரிஞ்சவங்க, அனுபவபட்டவங்க ஒரு லிஸ்ட் கொடுங்க. என் பிரச்சனை அதில இருக்கான்னு பார்த்து தெரிஞ்சுக்கிறேன். அப்புறமா என் பிரச்சனையை சொல்றேன்.. :-) (என் பிரச்சனைக்கு இன்னொரு விசயம் காரணமா இருக்குமோன்னு ஒரு சந்தேகம் இருக்கு. அதையும் அப்புறம் சொல்றேன்.) இப்ப தலைப்புக்கு மட்டும் தெரிஞ்சவங்க யாராவது பதில் சொல்லுங்க.

நீங்க சீமை இலந்தைன்னு சொல்றது Plum??? அதுவா இருந்தா நான் அதிகம் சாப்பிட்டது இல்லை, அனுபவம் இல்லை... ஆனா படிச்சதில் தெரிந்தது...

1. ரொம்ப அதிகம் சாப்பிட்டா வயிறு அப்சட் ஆகலாம்.

2. oxalate என்ற ஏதோ இருக்காம்... அதனால் உடலில் கேல்ஷியம் அப்சர்ப் ஆகும் தன்மையை குறைக்கலாம். அதிகமாக உண்ணும் போது மட்டுமே.

3. சிருநீரகம் மற்றும் பித்தப்பை பிரெச்சனை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே எடுக்க வேண்டும்.

சரியோ தவரோ என்னை ஓட்டாமல் மன்னிச்சு உட்டுபுடுங்கோ அண்ணா :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//சீமை இலந்தைன்னு சொல்றது Plum???//

ப்ளம்ங்கிறது ஊட்டியில எல்லாம் கிடைக்குமே.. சிகப்பு பழம்.. அதை சொல்றீங்களா? அது இல்லை. இது ஜுஜுபி.. (jujube) இலந்தை பழமே பெரிசா இருக்குமே, பேரீச்சை மாதிரி.. நைலான் வலைப்பையில கட்டி, பை பையா விப்பாங்களே.. அதுங்க..

//சிருநீரகம் மற்றும் பித்தப்பை பிரெச்சனை உள்ளவர்கள்//

ஹிஸ்டரி, ஜியாகரபி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு பித்தைப்பையை நுழைச்சிட்டீங்க பாருங்க.. அங்க நிக்குறீங்க நீங்க.. (இதுக்காகத்தான் என் பிரச்சனை என்னன்னு சொல்லாமலே கேள்வி கேட்டேன்.)

சத்தியமா ஹிஸ்டரி ஜியாக்ரஃபிக்கும் இதுக்கும் சம்பந்தமெ இல்லிங்கோ... நான் படிச்சதை தான் போட்டிருக்கேன். ;) அது மேச் ஆனா நான் என்ன செய்ய....

ஆனா அதான் ப்ளம் இல்லன்னு சொல்லிபுட்டீங்களே... அப்பறம் வொய் ஃபீலிங்... வுடுங்க, அந்த சீமையில் இல்லாத சீமை இலந்தை சாப்பிடுறவங்க யாராச்சும் வரட்டும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீமை இலந்தை அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் அதிகப்படியான அமிலம் தன்மை ஏற்படும். இதன் காரணமாக நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் உண்டாகலாம். மேலும் குடற்புழு உருவாகவும் இலந்தை ஒரு காரணம்.
எனக்கு தெரிஞ்சு இவ்வளவுதாங்ணா..

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பொதுவாக சிறிய இலந்தைபழம் சாப்பிட்டால் பித்தம் அதிகமாகும்னு சொல்வாங்க. அந்த பித்தம் நம் உடலில் பலபல உபாதைகளை உண்டு பண்ணும். அதில் எனக்கு நேர்ந்த அனுபவத்தில் வயிற்றுவலி, வாந்தி, தலைசுற்றல். சிலநேரம் வயிறு பிரட்டுவது போல கூட இருந்ததுண்டு. இது பெரிய இலந்தைக்கும் பொருந்துமான்னு தெரியலைங்கண்ணா:) ஏன்னா நான் சீமை இலந்தையை பார்ப்பதோடு சரி. சாப்பிட்டதில்லை:) நீங்களே ரொம்பநாள் கழித்து இழை துவங்கியிருக்கிறது சந்தோஷமா இருக்குங்கண்ணா:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அப்படின்னா இது ஹைப்ரிடா? அதில் என்ன வித்தியாசம் இருக்க போகுது? இலந்தை அதிகம் சாப்பிட்டா என்னாகுமோ அதானே இதுக்கும் ஆகும்??? :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீமை எலந்தைன்னாலே இன்னான்னு தெர்லே.. அப்பால அத்தால இன்னா பேஜாருன்னு கேட்டா எப்டி சொல்றது ன்னு கேக்குறாங்கோ.. சரி விடுங்கோ..

என்னுடைய பிரச்சனை இதுதான். கிட்டத்திட்ட 20 தினங்களுக்கு முன்பு ஆரம்பித்த (வறட்டு) இருமல் இன்று வரை குறையவில்லை. இருமி இருமி நெஞ்சுக்கூட்டில் ஒருவித வலி, கோயில் நிலத்தில் குடியிருக்கும் உள்ளூர் கவுன்சிலர் போல் நிரந்தரமாய் குடிகொண்டுவிட்டது. லேசாய் இருமினால்கூட நெற்றிப்பொட்டில் சுரீர் என்று வலிக்கிறது. அதைவிட பெரிய கொடுமை தொண்டை எரிச்சல். எஸ்.பி.பியையும் ஜேசுதாசையும் சரி விகிதத்தில் கலந்து, ஒரு கரண்டி உன்னிகிருஷ்ணன், ஒரு கரண்டி ஹரிஹரனை ஊற்றி கடைந்து எடுத்து பின்னர் உருக்கி எடுத்த தேன்மதுர குரலான எனது குரல், ஒரு வாரமாக VTV கணேஷ் குரலாய் மாறிவிட்டது.. என்னுடைய தற்போதைய பிஸி ஷெட்யூலில் எப்படி கூப்பிட்டாலும் நான் வரமாட்டேன் என்பது ஏ.ஆர் ரகுமானுக்கு தெரியும் என்பதால், இப்போதைக்கு அவரிடம் இருந்து எந்த தொந்திரவும் இல்லை என்பது நிம்மதியை அளிக்கிறது. இருப்பினும், நண்பர்கள், அன்பர்களிடம் இருந்து வரும் போன் கால்களுக்கு பதில் கொடுக்கையில், எதிர்முனையில் பேசுபவர்கள் நான் ஏன் தேவையில்லாமல் மிமிக்ரி செய்கின்றேன் என்று குழம்பி போகின்றார்கள்.

இந்தப் பிரச்சனைக்கு கீழ்காணும் இரண்டில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டுமே காரணமாய் இருக்க வேண்டும் என்று சந்தேகப்படுகின்றேன்.

முதலில் சீமை இலந்தை. நாள் ஒன்றுக்கு 7, 8 பழங்கள் சாப்பிட்டேன்(ஒரு பையில் 10, 12 பழங்கள்தான் இருக்கும்). இதில் oxalate அதிகம் இருப்பதால் sore throat மாதிரியான பிரச்சனைகளுக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூகுள் தேடுதலில் சில தளங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் இந்த சுகமான அனுபவம் யாருக்கேனும் கிட்டியுள்ளதா என்றறியும் நப்பாசையில் இந்த இழையைத் தொடங்கினேன்.

படிப்படியாக குறைக்கப்படும், இந்த வருடத்தில் குறைக்கப்படும், அடுத்த வருடத்தில் குறைக்கப்படும் என்று அரசாங்கம் சொல்லி வந்தது 'மின்வெட்டை' என்று நம்பி ஏமாந்திருந்த நான், இல்லை அது 'மின்சாரத்தை" தான் என்ற உண்மையை உணர ஆரம்பித்ததும், எனது கம்ப்யூட்டருக்கு மட்டும் தனியாக ஒரு இன்வெர்ட்டர் வைத்துவிட்டேன். மூடிய ஏசி அறையில் இன்வெர்ட்டர் & பேட்டரி வைக்கக்கூடாது என்பது பற்றி ஆரம்பத்தில் யாரும் அறிவுறுத்தவில்லை. ஏற்கனவே வீட்டில் இருக்கும் பெரிய அளவிலான tubular battery ஹாலில்தான் உள்ளது. அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அதே அளவிலான இந்த பேட்டரி என்னுடைய டேபிளுக்கு அருகில் இருந்தது. அவ்வபோது அதில் இருந்து வரும் sulphuric acid smell அறை முழுவதையும் வியாபித்துவிடும். அந்த நேரத்தில் மட்டும் நித்தியானந்தாவாய் மாறி, கதவைத் திற காற்று வரட்டும் என்று திறந்து வைத்துவிட்டு, நான் மொட்டை மாடிக்கு சென்றுவிடுவேன். ஒரு மணி நேரம் கழித்து வந்தாலும் அந்த மணம் முழுமையாக போயிருக்காது. அதை அதிகம் சுவாசித்ததால் இந்த பிரச்சனை வந்திருக்குமோ என்ற சந்தேகமும் இருக்கிறது. (இப்போது பேட்டரியை அறையைவிட்டு வெளியே மாற்றிவிட்டேன்.)

இந்த பிரச்சனைக்கு சீதாலெட்சுமி மேடம் நல்ல கை வைத்தியம் எல்லாம் போன் செய்து சொல்லி இருக்கின்றார்கள். இருமல் பிரச்சனையை எதாவது ஒரு வைத்தியத்தில் சரி செய்துவிடலாம். என்னுடைய கவலையெல்லாம், இதற்கு காரணம் சீமை இலந்தை என்பது தெரிய வந்தால், இனி அந்த இலந்தையை இந்த சீஸனுக்கு சுவைக்க இயலாமல் போய்விடுமே என்பதுதான். இன்றைக்கு கடைத்தெரு செல்லும்போதுகூட பார்த்துக்கொண்டே சென்றேன். வரிசையாய் இருக்கும் பழக்கடைகளில் புதிதாய் வந்து இறங்கியுள்ள ஃப்ரெஷ்ஷான, பெரிய சைஸ் பழங்கள், பைப் பையாய் கட்டி வைத்திருக்கின்றார்கள். ஆஹா..

//இது ஜுஜுபி.. (jujube)// - இது ரஜினி பாஷையில் தம்மா துண்டு மேட்டருன்னு நினைச்சேன்... அது பேரே இது தானா!!! எனக்கு தெரியாதுங்கண்ணா... ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நாவ பழமுன்னு ஒன்னு சொல்லுவாங்களே.... ஸ்பெல்லிங் சரியா தெரியல (உனக்கு எதுக்கு தான் தெரிஞ்சுது) அது சாப்பிட்டா எனக்கு அப்படி ஆகும். அம்மாவும் சொல்வாங்க, தொண்டை கட்டும் என்று. ஆனா இந்த அளவு இருமலெல்லாம் வந்ததில்லை. இது அந்த ரகம் தானோ..

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//அது பேரே இது தானா!!! எனக்கு தெரியாதுங்கண்ணா..//

இப்ப தெரிஞ்சுக்கிட்டீங்களா.. பாருங்க.. அறுசுவையில எவ்வளவு விசயங்கள் தெரிஞ்சுக்குறீங்க.. :-)

ரஜினி அதை இங்கிலீஸ்ல சொல்லித்தான் கேட்டு இருக்கோம். தமிழ்ல சொல்லி இருந்தா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிப் பாருங்க..

//நாவ பழமுன்னு ஒன்னு சொல்லுவாங்களே../ /அது சாப்பிட்டா எனக்கு அப்படி ஆகும்.//
நாவல் பழம், முந்திரி பழம் எல்லாம் சாப்பிட்டா உடனே இருமல் வரும். அது கொஞ்ச நேரத்துல சரியாயிடும். இது தனுஷ் மேலே காதல் மாதிரி, சாப்பிட்ட உடனே வரலை. சாப்பிட சாப்பிட வந்துச்சு. வந்தாலும் வந்துச்சு. இருபது நாளாகியும் போகலை. :-(

//ஏன்னா நான் சீமை இலந்தையை பார்ப்பதோடு சரி. சாப்பிட்டதில்லை:)//

நித்யா சிஸ்டர்,
இப்படித்தான் வெறுமனே பார்த்து பார்த்து வாழ்க்கையில் நிறைய சந்தோசங்களை நாம இழந்துகிட்டு இருக்கோம். :-) நானும் ரொம்ப வருசமா அதை பார்த்துக்கிட்டுதான் இருந்தேன். எப்பவோ ஒண்ணு ரெண்டு முறை அதை ட்ரை பண்ணப்போக, உள்ளே இருந்து அந்த பழம் சைஸ்க்கு வெளியே வந்த புழுவைப் பார்த்துட்டு, அந்த பழம் பக்கமே திரும்பாமத்தான் இருந்தேன். ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னே நண்பன் ஒருத்தன் வற்புறுத்தி கொடுத்தான். நல்ல மஞ்சள் நிறத்துல, பளபளன்னு செம்பழமா இருந்துச்சு. ஒண்ணை எடுத்து கிள்ளி கிள்ளி புழு இருக்கான்னு பார்த்து பார்த்து சாப்பிட்டேன். அதுக்கப்புறம் அவன் கையில வச்சிருந்தது எல்லாம் என் வாய்க்கு போயிடுச்சு. ஒரு பழத்துலகூட புழு இல்லை(என்ன மருந்து போடுறானுங்களோ). இப்ப வர்ற பழங்கள்ல அதிகம் புழு இருக்கிறது இல்லை. ரொம்ப பழுத்த பழம் வாங்கக்கூடாது. என் பொண்ணும் ரொம்ப விரும்பி சாப்பிடுது(ஆனா, என் அளவுக்கு இல்ல. ஒண்ணு ரெண்டு). சாப்பிட்டு முடிச்சதும் ஒரு டயம் ப்ரஷ் பண்ணிடறது உத்தமம்.

மேலும் சில பதிவுகள்