ஐஸ்க்ரீம் குச்சி வால் ஆர்ட்

தேதி: January 9, 2013

5
Average: 4.1 (14 votes)

 

ஐஸ்க்ரீம் குச்சிகள் - 6
கார்டுஸ்டாக் பேப்பர் - விரும்பிய நிறங்கள்
க்வில்லிங் டூல், க்வில்லிங் கோம்ப்
க்ளூ

 

ஐஸ்க்ரீம் குச்சிகளை படத்தில் உள்ளது போல் அடுக்கி ஒட்டவும். விரும்பினால் குச்சிகளுக்கு விரும்பிய நிறத்தில் வண்ணம் அடித்து வைக்கவும்.
பச்சை, மஞ்சள் நிற பேப்பர்களை கால் அங்குல அளவுகளாக வெட்டி எடுக்கவும். ஒரு பச்சை நிற ஸ்ட்ரிப்பின் முடிவில் ஒரு மஞ்சள் ஸ்ட்ரிப்பை ஒட்டவும். க்வில்லிங் கோம்பில் உள்ள கம்பியை எண்ணி சரி பாதி நடுவில் உள்ள கம்பியில் மஞ்சள் நிற ஸ்ட்ரிப்பை கீழ் வழியே நுழைத்து மேலே எடுத்து ஒட்டவும் .(கம்பியில் ஒட்டிவிடாமல் ஸ்ட்ரிப்பிலேயே ஓட்டவும்).
பிறகு அந்த ஸ்ட்ரிப்பை அதற்கு மேலே உள்ள கம்பியின் இடையில் அடி வழியாக நுழைத்து அந்த கம்பியின் மேலே எடுத்து மறுபடியும் அடியில் கொண்டுவந்து, முதல் முதலில் ஒட்டிய கம்பிக்கு கீழே உள்ள கம்பியில் கீழ் வழியாக நுழைத்து மேலே எடுக்கவும்.
இப்படியே அந்த ஸ்ட்ரிப் முடியும்வரை மேலும் கீழுமாக மாற்றி மாற்றி கொண்டுவரவும். கம்பியின் பின்புறம் படத்தில் உள்ளதுபோல் இருக்கும்.
கம்பியின் முன்புறம் படத்தில் உள்ளதுபோல் இருக்கும்.
இதை கவனமாக கம்பியைவிட்டு எடுக்கவும். படத்தில் இருப்பதுபோல் பூவின் இதழ் கிடைக்கும். இதுபோல் சில இதழ்கள் செய்துகொள்ளவும். http://www.arusuvai.com/tamil/node/24137 இந்த லிங்கில் இருப்பதுபோல் பூக்கள் செய்து கொள்ளவும்.
ஒட்டி வைத்த ஐஸ்க்ரீம் குச்சியில் விரும்பிய இடங்களில் பூக்களையும், இதழ்களையும் ஒட்டி விடவும். அழகான வால் ஆர்ட் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் சூப்பர்... கலர் காம்பினேஷன், அழகான பூக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலா ரொம்ப அழகா இருக்கு.வாழ்த்துக்கள்.very cute

அழகா இருக்கு கலா.

‍- இமா க்றிஸ்

கலா
உள்ளே இருக்கும் ரோஜாக்கள் ரொம்ப அழகு..
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Beautiful

குறிப்பை வெளியிட்ட அட்மின் டீம்க்கு நன்றி.

Kalai

மிக்க நன்றி வனிதா அக்கா :)

Kalai

ரொம்ப நன்றிங்க :)

Kalai

மிக்க நன்றி ஆன்ட்டி :)

Kalai

நன்றி ரம்யா :)

Kalai

நன்றி மாதங்கி :)

Kalai

கலா அக்கா வால் ஹான்கிங் செம கியூட்டா கலபுலா அழ்கா இருக்கு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

it's good for women's page....

romba easy ah irukku

hi. enakku kaila chinna vayasula vantha thalumbu pakkave asingama irukku. athukku ethavathu treatment irukka.. pls help me.

எந்ந மாதிரி தழும்பு. பாக்க எப்படி இருக்கும்???

chinna vayasula kaila pun vanthuchu. athu apdie thalumba irukku.

Apply lime juice (or) Apply MEDERMA oinment

thanks. na kandippa try pannuven.