ஸ்பினாச் ஆம்லெட்

தேதி: January 9, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (14 votes)

 

ஸ்பினாச் கீரை - ஒரு கைப்பிடி
வெங்காயம் - ஒன்று
முட்டை - 2
பச்சை மிளகாய் - ஒன்று
தக்காளி - பாதி
சீஸ் துருவல், பால் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - சிறிது
உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள் - தேவைக்கு ஏற்ப


 

வெங்காயம், பச்சை மிளகாய், கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியில் உள்ள சதை பகுதியை நீக்கி பொடியாக நறுக்கவும்.
வெண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து உடையாமல் வதக்கவும். கீரை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
பாலில் உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். அதனுடன் முட்டை, சீஸ், வதக்கிய பொருட்கள் சேர்த்து கலந்து வைக்கவும்.
பானில் வெண்ணெயை உருக்கி ஆம்லெட் ஊற்றவும்.
வெந்ததும் சூடாக பரிமாறவும்.

காலை வேளையில் குழந்தைகளுக்கு கொடுக்க சிறந்த உணவு. இதனுடன் ஒரு பிரட், பால், பச்சை கீரை/காய்களுடன் தர கம்ப்ளீட் காலை உணவாக அமையும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவிதா உங்கள் ஸ்பினாச் ஆம்லெட் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்!

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நல்ல ஐடியா.கண்டிப்பா ட்ரை பன்னுரேன்

parkkave nalla irukku..try panalam.

சுவையான ஆரோக்கியமான குறிப்பு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கவிதா,

அருமையான குறிப்பு....கீரை, காய்களை எப்படி சுவையாக சமைப்பது என்று உங்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்...வாழ்த்துக்கள்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

கவிதா அக்கா எளிமையான சத்தான ஆம்லெட் அருமயா இருக்கு குறிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்ல சரியான் காலை உணவு... ஆரோக்கியம் நிரைந்தது. வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹெல்தி ஆம்லட்.வாழ்த்துக்கள் :)

Kalai

கவி ஹெல்த்தி ஆம்லெட் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆம்லெட் சுவை பார்த்தாலே தெரியுதுப்பா வாழ்த்துக்கள் கவி ;)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

அனைவரது வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஹெல்தி டிஷ் குழந்தைகளுக்கு. ரொம்ப‌ நல்லா இருக்கு. டிஃப்ரண்டா இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

ஹெல்தி டிஷ் குழந்தைகளுக்கு. ரொம்ப‌ நல்லா இருக்கு. டிஃப்ரண்டா இருக்கு. சூப்பர் கவி

எல்லாம் சில‌ காலம்.....