உல்லன் மேட்

தேதி: January 12, 2013

5
Average: 4.5 (17 votes)

 

மஞ்சள் நிற உல்லன் நூல் - ஒன்று
பச்சை நிற உல்லன் நூல் - ஒன்று
குரோசே ஊசி
நோட்டு தைக்கும் பெரிய ஊசி

 

உல்லன் மேட் செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். அடிப்படை குரோசே பின்னல்களுக்கான செய்முறை லிங்க்: http://www.arusuvai.com/tamil/node/9919
மஞ்சள் நிற நூலில் ஒரு முடிச்சுப் போட்டு அதில் குரோசே ஊசியை விடவும்.
ஊசியில் நூல் சுற்றி 10 சங்கிலிகள் (Chain - ch) பின்னி, முதல் சங்கிலியோடு கடைசி சங்கிலியை ஊசியால் இணைக்கவும்.
இணைத்ததும் ஒரு வளையம் போல கிடைக்கும். பின்பு 4 சங்கிலிகள் பின்னிக் கொள்ளவும்.
ஊசியில் இரண்டு முறை நூல் சுற்றி கீழுள்ள வளையத்தில் விட்டு முக்குரோசே பின்னல் (Triple Chrochet - trc) ஒன்று பின்னவும்.
பிறகு 2 சங்கிலிகள் பின்னி, மீண்டும் முக்குரோசே பின்னல் ஒன்று பின்னவும். அடுத்து 2 சங்கிலிகள் அடுத்து முக்குரோசே பின்னல் என்று மாற்றி மாற்றி பின்னவும். இதேபோல் 11 முக்குரோசே பின்னல்கள் வரும் வரை பின்னவும். பிறகு கடைசியாக 2 சங்கிலிகள் போடவும்.
அதை முதலில் போட்ட 4 சங்கிலியோடு இணைக்கவும்.
அடுத்து 3 சங்கிலிகள் பின்னிக் கொள்ளவும்.
ஊசியில் நூல் சுற்றி கீழ்பக்கமுள்ள பின்னில்களின் இடைவெளியில் ஊசியை விட்டு படத்தில் காட்டியுள்ளபடி 3 இரட்டை குரோசே (Double Chrochet - dc) பின்னல்கள் பின்னவும்.
அடுத்து கீழ்பக்கமுள்ள பின்னில்களின் இடைவெளியில் இதேபோல் 3 பின்னல்கள் பின்னவும். அடுத்துள்ள இடைவெளியில் 4 பின்னல்களும், அதற்கடுத்து 3 பின்னல்கள் என்று மாற்றி மாற்றி சுற்றிலும் பின்னவும்.
சுற்றிலும் பின்னிய பிறகு முதலில் போட்ட 3 சங்கிலியுடன் இணைத்து அந்தச் சுற்றை முடித்து முடிச்சுப் போட்டு நூலை வெட்டி விடவும்.
பச்சை நிற நூலை மஞ்சள் நிற நூல் முடித்த இடத்தில் கோர்த்து ஒரு முடிச்சுப் போடவும். ஊசியை மேல் பக்க சங்கிலியில் நுழைத்து ஒரு சங்கிலி போட்டுக் கொள்ளவும்.
ஊசியை மேல் பக்க சங்கிலியில் விட்டு படத்தில் உள்ளவாறு ஒற்றை குரோசே (Single Chrochet - sc) பின்னல் ஒன்று பின்னவும்.
அடுத்த சங்கிலியில் இதேபோல் 2 பின்னல்கள் பின்னவும். அதற்கடுத்து வரும் சங்கிலிகளில் 6 சங்கிலிகளுக்கு ஒவ்வொரு சங்கிலியிலும் ஒரு ஒற்றை பின்னல் பின்னவும். அதற்கடுத்து வரும் சங்கிலியில் 2 ஒற்றை பின்னல்கள் பின்னவும். இதேபோல் இந்த சுற்று முழுவதும் 6 சங்கிலிகளில் ஒவ்வொரு சங்கிலியிலும் ஒரு ஒற்றை பின்னலும் அதற்கடுத்த சங்கிலியில் 2 ஒற்றை பின்னல்களும் பின்னவும்.
பின்பு முதலில் போட்ட இரண்டு சங்கிலிகளோடு இணைத்து முடிச்சுப் போட்டு நூலை வெட்டி விடவும். இப்பொழுது அறுங்கோண வடிவத்தில் சிறிய மேட் கிடைக்கும்.
தேவையான எண்ணிக்கையில் இதேபோல சிறிய மேட் துண்டுகளை பின்னி வைத்துக் கொள்ளவும். நோட்டு தைக்கும் ஊசியில் பச்சை நிற நூலை ஒற்றையாகக் கோர்த்து கொள்ளவும். அறுக்கோணத்திலிருக்கும் சிறிய மேட் துண்டின் ஏதாவது ஒரு பக்கத்தில் மற்றொரு மேட் துண்டை சேர்த்து தைத்து இரண்டு மேட்களையும் இணைக்கவும். (இதேபோல மீதமுள்ள 5 பக்கங்களிலும் ஒவ்வொரு சிறிய மேட்டையும் இணைத்து தைக்கவும். இப்பொழுது சுற்றியுள்ள 6 மேட்களையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்துத் தைக்கவும்).
நடுவில் ஒரு மேட் சுற்றிலும் 6 மேட்கள் சேர்ந்து ஒரு அழகான பூ போன்ற மேட் கிடைக்கும்.
அழகான உல்லன் மேட் தயார். உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் சிறிய மேட்டை இணைத்து இதுபோல் தைத்துக் கொள்ளலாம். டெலிபோன்,. டி.வி, டிவிடி ப்ளேயர், ஃப்ரிட்ஜ் ஆகியவற்றின் மீது போட்டு வைப்பதற்கு அதன் அளவுக்கேற்ப மேட்களை இணைத்து பயன்படுத்தலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பரா இருக்குங்க..சின்னவயசுல ஹேர்பேண்ட் போட்டிருக்கேன் உங்க ஐடியா சூப்பரா இருக்குங்க . இதையே கொஞ்சம் பெரிசா அங்கங்க பெரிய மணி (பீட்ஸ்) வைச்சு கோத்தா இன்னும் டெக்கரேடிவ்வாயிடும்னு நினைக்கேறேன்ங்க . வாவ் சூப்பருங்க, உங்க செய்முறையால பல வகைகள் பண்ணலாம் போல இருக்கே தேங்க்ஸுங்க சுபத்ரா :-)

Don't Worry Be Happy.

ரொம்ப அழகா செய்து காட்டியிருக்கீங்க.வாழ்த்துக்கள் சுபத்ரா:)

Kalai

அன்னைக்கே பதிவு போட நினைச்சேன், மிஸ் பண்ணிட்டேன். ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. நானும் ஜெய் சொன்ன மாதிரி பேண்ட் செய்திருக்கேன், அது கூட இப்ப நினைவில்லை. உங்களோடது சுலபமா இருக்கு. அவசியம் ஊருக்கு போனதும் செய்து பார்க்கறேன். கலக்கல். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா இருக்கு. பூ மாட் சூப்பர்.

‍- இமா க்றிஸ்

சுபத்ரா அக்கா உல்லன் மேட் கலக்கலா இருக்கு தெளிவான படங்களுடன் சூபரா இருக்கு மேட்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சுபத்ரா ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.

மிக அழகாக உள்ளது .உள்ளன் நூலில் தோரணம் செய்யும் pattern ப்ளீஸ்

சுபத்ரா நீங்க செய்த உல்லன் மேட் சுப்பர்.நான் கன்டிப்பாக செய்து பார்ப்பேன். easy-ஆக உள்ளது. நிரைய உல்லன் டிசைன் செய்யனும்.

romba easya irukku mat pinrathu

dear subathra ,ullan mat superb,enaku ullanla scarf,mufler podanumnu romba asai,ungaluku thericha athayum kathukudunga thozhi

romba use aaha irunthathu

enakku ullan noolil puthusa eathavathu seithu katta mudiuma

நன்றி நன்றி.. முயற்சி செய்தேன் அழகாக வந்தது...படம் முகபுத்தகத்தில்....