வேலை கிடைத்து விட்டது, சந்தோசமா? வருத்தமா? சொல்லுங்கள் தோழிகளே?

எனக்கு வயது 35. எம்ளாய்மென்டில் இருந்து லெட்டர் வந்து, நான் பரிட்சை எழுதி பாஸ் செய்து வேலை கிடைத்து விட்டது. ஆனால் 15 வருடங்களாக வீட்டில் இருந்து விட்டு இப்பொ ஆபிஸ் போனால் ஒன்றுமே புரியவில்லை. ஒரே வருத்தமாக இருக்கு. நான் என்ன செய்யட்டும்? வேலை கிடைத்தது சந்தோசமா? வருத்தமா? சொல்லுங்கள் தோழிகளே?
பிள்ளைகளை விட்டு விட்டு செல்லவும் மனமில்லை. பார்த்து கொள்ளவும் யாருமில்லை. பையனுக்கு 13 வயது, பொன்னுக்கு 8 வயது. சம்பளம் பெரிய உதவிதான், ஆனால் சந்தோசம் அதை விட பெரிதல்லவா? என்ன செய்யட்டும் ?

Dear friends , எனக்கு நெட் ரீசார்ஜ் இன்னியோட முடியுது, அதனால நீங்க பதில் போடுங்க, நான் ரீசார்ஜ் பண்ணிவிட்டு வந்து பார்த்து கொள்கிறேன். தாமததிர்கு மன்னிக்கவும்.

எவ்வளவு நாளா வேலைக்கு போறீங்க??? இப்ப தான் என்றால் கொஞ்சம் நாள் போய் பாருங்க. பலர் வீட்டில் இருக்கோமே படிச்சுட்டுன்னு ஏங்கும் போது, போக வாய்ப்பு கிடைச்சிருக்கேன்னு சந்தோஷப்படுங்க. ஆரம்பத்தில் இப்படி தான் வேலையும் புரியல, ஒன்னும் புரியலன்னு இருக்கும். போக போக அதுல எக்ஸ்பர்ட் ஆயிடுவீங்க. வேலை செய்வதும் ஒரு போதை தான்.... போக ஆரம்பிச்சுட்டா லீவ் நாள் கூட போரடிக்கும்.

வீட்டு வேலையும் பார்த்துட்டு வேலைக்கு போக ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் 6 மாதத்துக்குள்ள பழகிடும். பிள்ளைகளை பார்த்துக்கொள்வது.... இதை நீங்க மட்டும் செய்யல, உங்களை போல வேலைக்கு போகும் பலரும் செய்யறாங்க... அதனால் அது எப்படின்னு நீங்க தான் முடிவு செய்யணும். குழந்தைகளா, வேலையா என்று யோசிக்காம வேலை அவசியமா இல்லையா உங்களுக்குன்னு யோசிங்க. அவசியம் என்று தோண்றினால் பிள்ளைகளை பார்த்துக்க என்ன வழின்னு யோசிங்க. மனசு இருந்தா எல்லாத்துக்கும் வழி பிறக்கும்.

இல்ல.... இப்போ எனக்கு வேலையே அவசியமில்லைன்னு தோணுச்சுன்னா, குழப்பமே வேணாம்... தூக்கி போட்டுட்டு பிள்ளைகள், குடும்பம்’னு நிம்மதியா இருங்க. இரண்டுக்கும் நடுவில் குழப்பம் மட்டும் கூடவே கூடாது. அது இதுலையும் நிம்மதி தராது, அதுலையும் நிம்மதி தராது. மனசை அமைதியா வெச்சுகிட்டு உங்க கணவரோடும் பிள்ளைகளோடும் பேசி சேர்ந்தே முடிவெடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா, மிகச்சரியா சொல்லி இருக்கீங்க. என் முதல் குழந்தை 21 மாசம் தான் ஆகிறது. அவ 10 மாசமா இருக்கிறப்பவே....'பணப்பிரச்சனையை சமாளிக்க வேலைக்கு வந்திட்டேன். (1 வருஷ பிரசவ விடுப்பு இருந்தும்). ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன் மகளை விட்டு வர, ஆனால் என் அம்மா கவனித்துக்கொண்டார்கள். இனி...அவளை கவனிக்க ஏற்பாடு செய்யணும். அம்மா கொஞ்சம் பிசியாகிவிட்டார்கள். 'வேலையா? பிள்ளையா? என்று எனக்கும் கஷ்டமா இருக்கு. ஆனால் பணப்பிரச்சனையை சமாளிக்கணுமே என்றுபல்லைக் கடித்துக்கொண்டு வேலைக்கு வருகிறேன். 'பொண்ணா பிறந்திட்டாலே , பொறுமையும், சமாளிக்கும் திறனும் இருக்கணும்!....:)

Maturity is not when we start speaking “BIG” things!
It is when we start understanding “small” things!

ப்ரியா, வேலை கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் :)

//15 வருடங்களாக வீட்டில் இருந்து விட்டு இப்பொ ஆபிஸ் போனால் ஒன்றுமே புரியவில்லை.//
இங்கே வேலை புரியவில்லை என்கிறீர்களா? அல்லது இத்தனை நாள் வீட்டில் இருந்து விட்டு இப்போது வேலைக்கு செல்வது பழக்கமில்லாதது போல் உள்ளது என்கிறீர்களா? இது தான் காரணம் என்றால், போக போக பழகி விடும். ஒரு வருடம் டச் விட்டு போய் வேலைக்கு செல்பவர்களுக்கே அப்படி இருக்கும். நீங்கள் 15 வருடங்கள் கழித்து செல்வதால், வேலையில் ஒன்ற ஒரு சில மாதங்களோ, ஒரு சில வாரங்களோ ஆகலாம். இது மேட்டரே இல்லைங்க.

இப்போது வேலையா? வீடா? என்று யோசித்தீர்களானால் ஒரு கருத்தை கவனத்தில் கொள்ளுங்கள். எத்தனையோ படித்த பட்டதாரிகள் தங்கள் இளவயதில் எம்ப்ளாய்மெண்ட் ஆபிசில் பதிவு செய்து விட்டு, வயதாகியும் காத்திருப்பார்கள். ஆனால் வேலை கிடைத்தபாடாய் இருக்காது. ஆனால் உங்கள் அதிர்ஷ்டம் நீங்க தேர்விலும் வெற்றி பெற்று வேலையும் கிடைத்துள்ளது. இதை சந்தோஷ மனநிலையோடு தக்க வைத்து கொள்ளுங்கள். நல்ல வேலை கிடைக்காமல் எத்தனை பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிலையில் இருந்து யோசித்து பாருங்கள்.

அல்லது இன்னொரு வழியை பின்பற்றி பாருங்கள். வேலைக்கு சென்றால் என்னென்ன நன்மைகள்..என்னென்ன தீமைகள்..வீட்டில் இருந்தால் கிடைக்க கூடிய நன்மைகள்.. தீமைகள் இவற்றை ஒரு பேப்பரில் எழுதி பாருங்கள். எந்த பக்கம் நன்மை அதிகம் இருக்கிறதோ.. அந்த பக்கத்தையே முடிவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு தெளிவான மனநிலையோடு நன்கு யோசித்து அலசி ஆராய்ந்து பாருங்கள். முடிவுக்கு வந்தவுடன் அதனால் ஏற்படும் நன்மைகளையோ, தீமைகளையோ ஏற்கவும் உறுதியோடு இருங்கள். ஆனால், எடுக்கும் முயற்சி எதுவாக இருந்தாலும் அதை சந்தோஷத்தோடும், மன அமைதியோடும் ஏற்றுக் கொள்ளுங்கள். முடிவு எடுத்த பின்பு ஒரு போதும் வருந்தாதீர்கள். முடிவு எடுத்துவிட்டு திரும்பி பார்த்தால் வருத்தம் தான் மிஞ்சும். அதனால், எதாவது ஒன்றை ஒருமனதோடு தேர்வு செய்யுங்கள். அதே மனதோடு கடைசி வரை இருங்கள்.

எனக்கு தோன்றியதை சொல்லியுள்ளேன். தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ப்ரியா
வேலை கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்..

கிடைத்த வேலையை சந்தோசமாக ஏற்றுக் கொண்டு செய்யுங்கள்.. குழந்தைகளும் ஒரு அளவுக்கு அவர்கள் வேலையை தானே செய்துக் கொள்ளும் வயதில் தான் இருக்கிறார்கள்.. எத்தனையோ பேர் படித்து விட்டு வீட்டில் சும்மா இருக்க முடியாமல் உள்ளனர்.. வேலையை உடனே விட நினைக்க வேண்டாம்.. பெரிய ப்ரேக் எடுத்து நீங்க வேலைக்கு போவதால் அப்படி இருக்கு.. ஒரு மூனு மாசம் வேலைக்கு போயி பார்த்துடுங்க.. எந்த ஒரு விஷயம் தொடங்கும் போதும் முதல் 3 லிருந்து 5 மாதம் தான் சவாலாக இருக்கும்.. அதில் நிலைத்து இருப்பது கடினம் தான் .ஆனால் 3 மாதம் தாண்டி விட்டால் இது தானா என தோன்றும்..ஆனால் அதை தாண்டனும்.. வேலை நேரம் எப்படி, வார விடுமுறை என்ன? வீட்டில் செய்யும் வேலைகளை எப்படி செய்கிறீர்களோ, அது போலவே இந்த புதிய வாழ்க்கையும் பழகிவிடும்..

உங்களுக்கென தனி மரியாதை, தனி சுதந்திரம், பொருளாதாரம் இருக்கும் .. குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கி கொடுங்கள். வீட்டுக்காரருக்கு, உங்க குடும்பம் , அவர் குடும்பம்னு எல்லாருக்கும் ஏதாவது வாங்கி கொடுங்க.. கிஃப்ட் பண்ணனும் என நினைப்பதை செய்யுங்கள். உங்களை உழைப்பில் குழந்தைகளுக்கு ஏதாவது நல்லதா செய்யுங்க.. ஒரு, ஒரு வருடம் தேவையான எல்லாவற்றையும் திருப்த்தியா செய்துவிட்டு, எந்த ஒரு கில்டியும் இல்லாமல் வேண்டும் எனில் வேலையை விடுங்கள்.

ஆனால் பணத்தால் வாங்க முடியாதது தான் இந்த குடும்பம்.. வேலை பளு, விடுமுறை இல்லா பணி, பயணிப்பது கடினம், கடினமான வேலை,வேறு தொல்லை என முக்கிய காரணம் எதுவும் இல்லாமல், வேலையை விட வேண்டாம்.. குடும்பத்துக்கும் நேரத்தை சரியான முறையில் ஒதுக்கி வேலைக்கு போயி தான் பாருங்க.. நான் ஒரு கம்பெனியில் HR ஆக இருக்கிறேன் என்றால், எந்த பிரேக்கும் இல்லாமல் அடுத்த கம்பெனிக்கு மாறும் போது, எனக்கும் கண்டிப்பாக அந்த கம்பெனியில் கல்சர் புரிய குறைந்தது 1 மாதமும், சகஜமான சுழலாக மாற 3 மாதமாவது ஆகும்.. எனவே உங்களுக்கும் கொஞ்ச நாட்கள் ஆகும், புரிய.. உங்களுக்கு ஊதியம் தருவதால், உங்களை பழக்கி வேலை வாங்காமல் விடமாட்டாங்க..சீக்கிரம் புரிஞ்சிடும் .. எல்லாமும் கடந்து போகும்.. :)

நானும் வேலைக்கு போகும் போது, ஏகப்பட்ட பிரஷர் தலைக்கு ஏறி, எங்கேயும் பிரச்சனை, சவாலா இருக்கும், இப்பவே இதை உதறிட்டு ஓடலாம் போல தோணும்..ஆனா ஒரு நிமிஷம் மனதை தேத்திப்பேன்.. நான் நினைத்ததை போலவே, ரெண்டு நாளுக்கு அப்புறம் தலைகீழா எல்லாம் மாறிடும், அட இதுக்கா வேலையை விட நினைத்தேனு தோணும்.. சில சமயம் காலையில் இருக்கும் கஷ்டம், மதிய சாப்பாடு முடிச்சிட்டு வரும் போது இருக்காது.

தைரியமா சமாளிக்கும் நம்பிக்கையோடு போங்க.. சில வருடங்கள் கழித்து வேலையும் கிடைக்காது, உங்களின் உழைப்பால் பிள்ளைகளுக்கும் எதுவும் வாங்க முடியாது. குடும்பம் கடைசி வரை வரும். இடையில் இந்த வேலையை தான கொஞ்சம் கவனித்து பாருங்க.. பிடிக்கலைனா விட்ரலாம்.. ஆனால் முயற்சி செய்யுங்க.. ஒரு 38 வயது வரையாவது போகலாம். பிள்ளைகள் வளர வளர இன்னும் போகலாம். இது என் தனிப்பட்ட கருத்து..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வேலை கிடைத்தற்கு வாழ்த்துக்கள் ப்ரியா!
வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பா இருக்கிற காலத்தில உங்களுக்கு வேலைகிடைச்சிருக்குனா, சந்தோஷமான விஷயம்பா. குழந்தைகள் இருவ்ருமே ஓரளவு வளர்ந்திட்டாங்க அப்படி இருக்கையில நீங்க ஏன் வருத்தமானு கேட்டிருக்கீங்க, வருத்தமனு நினச்சா வருத்தமான பாயிண்ட்ஸ், முடியாது, வேண்டாம், அதுல உள்ள கஷடம் இதுதான் நினைவுக்கு வரும்.
இத்தன நாள் வீட்டிலிருந்து இந்த வாழ்க்கை அனுவவிச்சீங்க. இனி வேலைக்கு போகும் வாய்ப்பை பயன் படுத்தி அந்த வாழ்க்கைக்கு மாறப்பாருங்க. மூக்குனு இருந்தா கண்டிப்பா சளினு ஒண்ணு பிடிக்கும். அதுக்காக நாம மூக்க வேண்டாம்னு சொல்வமா என்ன?? நீங்க வேலைக்கு போறின்ங்கனாலே குடும்ப அங்கத்தினர்கள் அதுக்கேத்தமாதிரி தங்களை தயார் படுத்திக்கிவாங்க.
வீட்டை விட்டு வெளிஉலக நடவடிக்களையும், உங்கள் மனம் ஆராய்ந்து பார்க்கத்துவங்கிடும்.
அதுபோல வீட்டு வேலைகள் வீட்டிலே இருந்து பார்ப்பதற்கும், வேலைக்கு சென்று கொண்டே பார்ப்பதற்கும் பெரிதான கஷட்டம் எதுவும் கிடையாது. இன்னும் சொல்லப்போனா வீட்டிலிருக்கும் போது அப்பறம் பாக்கலாம், கொஞ்ச நேரம் போகட்டுனு ஒத்தி போடும் பழக்கம் வரும். ஆனா இதுவே நீங்க வேலைக்கு போகனும் அப்படிங்கிற எண்ணத்தில எல்லா வேலைகளையும் அந்த அந்த நேரத்தில முடிக்கணும்னு ஒரு உத்வேகம் பிறக்கும்.
குழந்தைகளும் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் பக்க்குவம் நாள்பட வந்துவிடும்.
என்னோட எண்ணம் சந்தோஷமாக மனநிறைவுடன் நீங்கள் வேலையை தொடரலாம் என்பதே.
மன நிறைவுடன் வாழ வாழ்த்துக்கள் ப்ரியா;)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாழ்த்துக்கள்.
என்னைய கேட்டா நீங்க கொடுத்து வைச்சவங்கன்னு சொல்வேன்.
குழந்தைகள் பெரிசாகிட்டாங்க. ஓரளவுக்கு வீட்டு பிரச்சனைகள் முடிஞ்சுருக்கும். குழந்தை பிறப்பு லீவு இதெல்லாம் போட தேவையில்லை. வேலைல கன்டினுட்டி க்ரெக்டா இருக்கும்.
இப்படி நினைச்சு பாருங்க, முன்னாடி வேலை கிடைச்சுருந்தா, சமாளிப்பது கஷ்டம்தானே. இப்ப ஓரளவுக்கு உங்க பொறுப்புகள் முடிஞ்சுருக்கும்.
வனி அவங்க சொன்னமாதிரி வேலை பழகிட்டா நம்மலால சும்மா இருக்கு முடியாது.
நான் 20 வயதிலிருந்து வேலைக்கு போறேன். கஷ்டத்திலும் ஒரு நன்மை இருக்கதான் செய்கிறது.
என் குழந்தைபிறப்பு முடிந்து நான் ஆபிஸ் வந்தால் ஒண்ணும் பிடிபடலை. செட் ஆக 1 வருடம் ஆனது.
அந்த வகையல நீங்க லக்கி. ஆல் தி பெஸ்ட்.

babies

வனி பதிலுக்கு ரொம்ப தாங்க்ஸ்பா. நான் கரெக்டா டிசம்பர் 31 ஆர்டர் வாங்கினேன். இந்த புது வருசத்துல இருந்துதான் வேலைக்கு போரேன். வேலை பழக கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாக்குரேன்.

விஜி நீங்க கன்டிப்பா என்னை விட சின்ன வயதாதான் இருப்பீன்க, இவ்ளோ பொறுப்பா பேசறீங்க. 'பொண்ணா பிறந்திட்டாலே , பொறுமையும், சமாளிக்கும் திறனும் இருக்கணும்!. நானும் பழகிக்கிறேன்

இத்தனை நாள் வீட்டில் இருந்து விட்டு இப்போது வேலைக்கு செல்வது பழக்கமில்லாதது போல் உள்ளது. இதுதான்பா கரெக்ட். வேலைக்கு சென்றால் நன்மைகள் அதிகம், இது எனக்கே புரியுதுபா. ஆனாலும் நீங்க சொன்ன மாதிரி பழக கொஞ்ச நாள் ஆகும். பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி கல்பூ. (எல்லாரும் உங்களை அப்படிதானே கூப்பிடுறாங்க. நல்லாவும் இருக்கு). நான் அப்படி கூப்பிட்டால் கோச்சுக்க மாட்டிங்களே?

மேலும் சில பதிவுகள்