ப்ளாஸ்டிக் ஸ்ட்ரிங் கீ செயின்

தேதி: January 19, 2013

5
Average: 4.4 (10 votes)

 

ப்ளாஸ்டிக் ஸ்ட்ரிங் - 2
கம்பி வளையம் - ஒன்று
குயிக் ஃபிக்ஸ் - சிறிது

 

கம்பி வளையத்தினுள் இரண்டு வண்ண ப்ளாஸ்டிக் ஸ்ட்ரிங்கையும் உள்ளே நுழைத்துக் கொள்ளவும்.
சரி பாதியாக ஸ்ட்ரிங்கை மடிக்கவும். நடு பகுதியில் வளையம் இருக்கும் படி செய்யவும்.
இப்போது வளையத்தின் இரண்டு பக்கமும் இரண்டு வண்ண ஸ்ட்ரிங்கும் இருக்கும். ஒரு வண்ண ஸ்ட்ரிங்கை மேல் நோக்கியும், எதிர் பக்கம் உள்ள மற்றொரு வண்ண ஸ்ட்ரிங்கை கீழ் நோக்கியும் மடித்து கொள்ளவும். மற்ற இரண்டு ஸ்ட்ரிங்கையும் இவற்றின் இடையே விட்டு படத்தில் இருப்பது போல் முடிச்சு போடவும்.
முடிச்சு போட்ட பின்பு 4 முனைகளையும் சமமாக பிடித்து இழுத்து நன்கு இறுக்கி விடவும். ஒரு சதுரம் கிடைக்கும்.
இப்போது ஸ்வஸ்திக் போல் 4 முனைகளும் 4 திசையில் இருக்கும். அதில் இரண்டு நேரெதிர் ஸ்ட்ரிங்கை மீண்டும் எதிர் திசைகளில் மடித்து பிடித்து கொள்ளவும்.
இப்போது குறுக்கே உள்ள இரண்டு ஸ்ட்ரிங்கில் ஒன்றை படத்தில் உள்ளது போல் நுழைக்கவும்.
மற்றொன்றையும் எதிர் திசையில் அதே போல் நுழைக்கவும். (முதல் ஸ்ட்ரிங்கின் மேலே விட்டால், அடுத்த ஸ்ட்ரிங்கின் அடியில் நுழைக்க வேண்டும்),
மீண்டும் 4 முனைகளையும் ஒரே அளவில் இழுத்து சதுரத்தை சரி செய்து இறுக்கி விடவும். இதே போல் தேவையான அளவு பின்னிக் கொண்டு கடைசி இரண்டு பின்னல் போடும் போது முந்தைய பின்னலின் மேல் நடுவில் சிறிது குயிக் ஃபிக்ஸ் வைத்து பின்னி முடிக்கவும். கடைசியாக 4 முனைகளையும் முடிச்சு போட்டு மீதத்தை நறுக்கி விடவும்.
நறுக்கிய முனையை லேசாக தீயில் காட்டி அழுத்தி விட்டால் நன்றாக ஒட்டி விடும். இப்போது ஸ்ட்ரிங் பார்க்க சதுரங்களை அடுக்கி வைத்தது போல இருக்கும்.
அழகான சுலபமான கீ செயின் தயார். இந்த ப்ளாஸ்டிக் ஸ்ட்ரிங் ஸ்ப்ரிங் போன்ற தன்மை உடையது. இதை வைத்து உருண்டையாக, சதுரமாக என எப்படி வேண்டுமானாலும் பின்னலாம். நூலில் செய்வது போல் சிறு சிறு பொம்மைகள், குழந்தைகளுக்கு ப்ரேஸ்லெட், கழுத்துக்கு மாலை என விரும்பியவாறு செய்யலாம். அப்படி செய்யும் போது நடுவில் முத்துக்கள், மணிகள் கோர்க்கலாம். இன்னும் அழகு சேர்க்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

செய்முறையில் சுலபமாக புரிகிறது செய்து பார்த்து மாட்டிட்டு சொல்கிறேன் மீதியை......

அழகா இருக்கு வனி. ஸ்ட்ரிங் வாங்கி செய்து பார்க்கிறேன். எப்படி இதெல்லாம்... எங்க கத்துக்கறீங்க வனி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனி கீ செயின் சூப்பரா இருக்கு ரொம்ப எளிமையா சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள் :) கலர் காம்பினேசன் சூப்பர் வனி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி அழகா பின்னியிருக்கீங்க..எதையுமே விட்டுவெக்கிறதாயில்ல அப்படித்தானேப்பா;))
வாழ்த்துக்கள் வனி;)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ur hand work is very nice and ur nails also.pls bring tips for strong nails also.color combination romba nalla iriku.once again valthukal.

Nadpathellam nalluthuke

வனி
ரொம்ப அழகா இருக்கு.. கலர் காம்போ செம.. வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனி கீசெயின் புரியும்படி சொல்லி இருக்கீங்க.ரொம்ப அழகு . எனக்கு செய்யணும் போல இருக்கு. .இது கூடை பின்னும் முறை தானே வனி.

வனிதா அக்கா கீசெயின் அழகா இருக்கு.நானும் இதேபோல Gimp வைத்து நிறைய Boondoggles செய்துருக்கேன் முன்னாடி.படங்கள் தேடனும்,கிடைத்தால் fbல போடறேன்.இப்போ மறுபடியும் செய்யும் ஆசையை துண்டிடீங்க.வாழ்த்துக்கள்:)

Kalai

ரொம்ப அழகா இருக்கு வனித்தாக்கா :)

வாவ் கலர்புல் கீ செயின் ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா கலர் காம்னேஷன் வெரி நைஸ் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

ரேணு... அடடா... எம்புட்டு நாளாச்சு உங்களை பார்த்து ;) எப்படி இருக்கீங்க? இனியாவது வருவீங்களா? குட்டீஸ் நலமா? மிக்க நன்றி.

கவிசிவா... மிக்க நன்றி. இம்முறை ஊருக்கு போயிருந்தப்போ ஒரு வேலையா அடையார் பக்கம் போனேன், க்ராஃப்ட் ஷாப் பக்கம் பார்த்ததும் உள்ளபோய் ஒரு நோட்டம் விட்டேன், இது என்ன எதுக்குன்னு அங்க நமக்கு தெரிஞ்ச ஒருவர் சொன்னார்... வாங்கினேன். :) இப்ப தான் செய்ய டைம் கிடைச்சுது.

சுவா... மிக்க நன்றி ;)

அருள்... மிக்க நன்றி ;) அறுசுவை மேல உள்ள ஆசை... அதான் எந்த இடமும் விடுறதில்லை.

சிவமதி... மிக்க நன்றி :) இந்த நகம் டிப்ஸ் எல்லாம் சொல்லும் அளவுக்கு நான் அதுக்கு ஒன்னும் பண்றதில்லை. அதுவா வளருது. நீங்க தேவா குறிப்புகள் பாருங்க, பயன்படும்.

ரம்யா... மிக்க நன்றி :) இந்த ஸ்ட்ரிங் எல்லாம் ஃபோட்டோவை விட நேரில் கலர் சூப்பரா இருக்கு.

நிகிலா... மிக்க நன்றி ;) எனக்கு கூடை பின்ன தெரியாதுங்க... சின்ன வயசுல பின்னியது.

கலா... மிக்க நன்றி. இது போல் எதில் வேண்டுமானால்ம் செய்யலாம். ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் செய்யும் நூல் வகைகள் கூட பயன்படுத்தலாம். :)

ஜெசிமீன்... மிக்க நன்றி :)

கனி... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா செய்து இருக்கீங்க,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கீ செயின் ரொம்ப அருமைங்கோ, வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

முசி, குணா... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது மோதிரம் பின்னும் ஒயரா அல்லது வேறா. அடையாரில் எங்கு கிடைக்கிறது என்று தெரிந்தால் சொல்லவும்.

அன்புடன்
ஜெயா

அழகாய் இருக்கு வனி, வாழ்த்துக்கள்.. நான் ஸ்கூல் டேசில் செஞ்சிருக்கேன்.. ஸ்ட்ரிங்கோட முனைகளில் நலைலான் ரப்பர் பேன்ட் சேர்த்து ஜடை மாட்டியா யூஸ் பன்னிபோம்..

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

:) சாரி வனி. டெய்லி வந்து பார்த்துட்டு வேற யாராச்சும் பிங் பண்ண, ஓடிருவேன். பிறகு மறந்து போய்ரும். :)

கலர் கலரா அழகா இருக்கு.
சின்னதுல என் சைக்கிள் சாவி, பாக்கிங் டேப்ல இப்பிடி பண்ணி மாட்டி இருந்தேன். அழகா இருக்கு என்று யாரோ எடுத்து பார்த்துட்டு, ஒளிச்சு வைச்சு பெல் அடிக்கிறப்ப மறந்துபோய் போய்ட்டாங்க. ;( தேடிட்டு இருக்க... எங்க க்ளாஸ்ரூம்ல ஸ்டார்ஃப் மீட்டிங் என்று டீச்சர் வந்து துரத்திட்டாங்க. பிறகு கொழுத்துற வெயில்ல கர்ரென்று நடந்து வீட்ட போய்... டூப்ளிகேட் சாவி எடுத்து திரும்ப வந்து சைக்கிள் எடுத்துப் போனேன். ;( பிறகு... அழகா எதுவும் சாவில மாட்டுறதுக்கு யோசனையா இருக்கும். கொசுவர்த்தி சுத்த வைச்சதுக்கு தாங்ஸ். ;D

‍- இமா க்றிஸ்

superb and easy make

akka easy ah puriudhu ana andha plastic strips enga kidaikum

மிக்க நன்றி. மோதிரம் பண்ற வொயர் அப்படின்னா?? எனக்கு தெரியலயே. நான் அடையாரில் ஆர். எஸ். ஷாப்பிங் செண்டரில் வாங்குவேன். அங்கு எல்லாம் கிடைக்கும் ஜெயா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) நான் இப்ப தாங்க இப்படி ஒரு ஸ்ட்ரிங்கையே பார்த்தேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னை விடாமல் எல்லா கைவினையிலும் ஊக்குவிக்கும் இமாவா சாரி சொல்றது :( நோ நோ நோ. பாருங்க... நீங்க சின்னதுல பண்ணதை நான் இம்புட்டு பெருசாகி தான் பண்ணிருக்கேன் ;) மிக்க நன்றி இமா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) க்ராஃப்ட் கடைகளில் கிடைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

romba thanks akka,
nan senju pathen nalla vanthathu bt first time ndra nala konjam sariah varala ana nalla alaga irundhudhu akka