யோகா பண்ணும் முறையில் சந்தேகம்:

அன்பு தோழிகளே,நான் உத்தான பாதாசனம் செய்து வருகிறேன்,தொப்பையை குறைக்க,எனக்கு இதில் சில சந்தேகங்கள் உள்ளது,முதலாவதாக எப்பொழுது மூச்சை உள்ளிலுக்க வேண்டும்,எப்பொழுது மூச்சை வெளி விட வேண்டும்,அதாவது கால்களை உயர்த்தும்போது மூச்சை உள்ளிலுக்க வேண்டுமா அல்லது வெளிவிட வேண்டுமா?

2வது சந்தேகம்:
மூச்சை உள்ளிலுக்கும்போது வயிறும் உள்ளிலுக்க வேண்டுமா??அல்லது வயிறு நார்மலாக இருக்க வேண்டுமா??அல்லது வயிறு பலூன் போல மூச்சு உள்ளிலுக்கும்போது இருக்க வேண்டுமா?நானும் நிறைய வீடியோக்கள் பார்த்துவிட்டேன்,என்னுடைய இந்த சந்தேகம் மட்டும் தெளிவாக வில்லை
நான் வெளிநாட்டில் வசித்து வருவதால் யோகா மாஸ்டரிடம் எல்லாம் பயிற்சி பெற முடியாது,யாராவது தெளிவாக பதிலளியுங்களேன்

hai friends
anybody reply me

neenga kaalai uyarthumbodhu moochai ullilukkavendum. kaalai keelay irakkumbodu moochai veliyil vidavendum. vayirai normal-a ha veithukondaal podhumaanadhu.

மஞ்சு
இந்த ஆசனம் செய்யும் பொழுது இயல்பான சுவாசம் இருந்தால் போதும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹாய் மஞ்சு
கால்களை உயர்த்தும் போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.

,
பதில் அளித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி,நான் யோகா புத்தகம் வாங்கி படித்தேன்,அதில் உயர்த்தும் பொழுது முச்சை வெளிவிட வேண்டும் என்று இருந்தது,அதில் தவறாக பிரிண்ட் ஆகி இருக்குமோ?? மேலும் தெரிந்தவர்கள் விவரமாக கூறுங்கள்..
யோகாவிற்கான பொதுவான மூச்சு பயிற்சி விதிமுறை என்ன? யாராவது கூறமுடியுமா?

மஞ்சு
பொதுவாக கையை உயர்த்தினாலும் சரி சூர்ய நமஸ்காரத்தின் போது கழுத்தை தூக்கிப்(புஜாங்காசனா) பார்த்தாலும் சரி
மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
அனேகமாக கை,கால்,கழுத்தை மேலே உயர்த்தும் போது உள்ளிழுக்க வேன்டியிருக்கும்.
மனம்,மூச்சு,மெய் சேர்ந்து செய்வது சரியான முறை.

ரொம்ப நன்றி நிகிலா

உத்தான பாத ஆசனம்:
முதுக்குப் புறமாக சாதாரண நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். இரு கால்களும் சேர்ந்த நிலையில் இருக்க வேண்டும்ங்க, கைகளை உடலுக்கு பக்கவாட்டில் வைத்துக்கொண்டு உள்ளங்கை விரல்கள்(குப்புற) மூடிய நிலையில் தரையை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். உடலின் பக்க வாட்டில் வைப்பத்தற்கு(கைகள்)பதிலாக, தலைக்கு பின்பக்கமாக கைகளை நேராக நீட்டி வைத்தும் செய்யலாம். "இரு பாதங்களும் முன் நோக்கி இருக்க வேண்டும். மெல்ல கால்களை உயர்த்த வேண்டும். முட்டியை மடக்காமல் உயர்த்த வேண்டும். அரை அடி உயர்த்தினால் போதும், ஆசனம் செய்யும் போது இயல்பான சுவாசம் இருந்தால் போதும். 10 முதல் 20 வினாடி வரை செய்யலாம். 3 முறை செய்திடலாம்.
ஆரம்பத்தில் அரை அடி உயர்த்துவது, பிறகு பழக பழக ஒன்று மற்றும் இரண்டு அடி உயரம் வரை உயர்த்தி செய்யலாம்.
இது எனக்கு யோகால சொல்லிக்கொடுத்த முறைங்க. அதே போல புத்தகமும் கொடுத்திருக்காங்க, அதிலயும் இப்படித்தான் இருக்கு. இப்ப எனக்கு ஒரு சந்தேகம் இது சரியா?? தப்பானு??

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்புள்ள அருள்
நான் விவேகானந்த கேந்திர யோகா வகுப்பில் யோகா கற்றிருக்கேன் பா.
நீங்கள் கூறியபடி தான் உத்தான பாத ஆசனம் செய்யணும்.பா.
ஆனால் நாம் காலை உயர்த்தும் போது நமது சுவாசத்தை கவனியுங்கள்.அது உள்மூச்சாகத் தான் இருக்கும்.
அப்புறம் நாம் ஆசன நிலையில் 20 அல்லது 30 வினாடிகள் இருப்போமே அது இயல்பான சுவாசம்.
மீண்டும் காலை கீழே இறக்கும் போது வெளி மூச்சு தன்னாலே வந்துவிடும்.
இது நான் செய்யும் முறை அருள்.

அன்பான தோழிகளுக்கு யோகா முறையில் சந்தேகம் .நான் தற்போது யோகா போய்க்கொண்டிருகின்றேன்.நான் எல்லா யோகாவும்பயில்கிறேன். நான் காப்பர் டி போட்டுள்ளென்.காப்பர் டி போட்டுக்கொண்டு யோகா செய்யாலாமா?நான் ஒரு வெப்செய்டில் படித்தேன்.இடுப்பை வளைத்து செய்யும் யோகா செய்யக்கூடாது என போட்டிருந்தார்கள்.என் சந்தேகத்தை தீர்க்கவும்.என் யோகா மாஸ்டர் ஆண் என்பதால் எனக்கு கேக்க தயக்கமாக உள்ளது.தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்

மேலும் சில பதிவுகள்