பெண்களுக்கான 2 வீலர்

அன்புள்ள தோழிகளே!

எனக்கு ஒரு 2 வீலர் வாங்கவேண்டும். வெயிட் குறைவாக,ஷாப்பிங் திங்க்ஸ் வைக்க வசதியாக, எல்லாவிதத்தில்யும் நமக்கு ஏற்ற வண்டி எது என்று சொல்லவும்.

இன்டர்நெட் பூராவும் அலசி ஆராய்ச்சி பண்ணியாச்சு. இருந்தாலும் அனுபவசாலிகளின் மேலான ஆலோசனைகள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஹோண்டா ஆக்டிவா வெயிட் அதிகம் என்று சொல்கிறார்கள். ஸ்கூட்டி பெப் + வாங்கலாமா?

ரீ சேல் வேல்யூ பற்றி கவலையில்லை. எனக்கு 38 வயது ஆகிறது. என் பெண் குழந்தைக்கு 10 வயது இருவரும் ட்ராவல் பண்ண எளிதான வண்டி எது என்று ஆலோசனைகள் வழங்க வேண்டுகிறேன்.
நன்றி!

தோழி, ஸ்கூட்டி பெப்+ நல்லா இருக்கும். ஸ்கூட்டியிலேயே Streak கூட நல்லா இருக்கு. போனவாரம்தான் என் ஃப்ரண்ட் வாங்கியிருக்காங்க. வண்டியின் வெய்ட் மற்றும் ரீசேல் வேல்யு பற்றி கேட்டு சொல்றேன். ஹோண்டா ஆக்டிவா நல்லா லுக்கா ஓட்டவும் நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும் ஆனா செம்ம வெய்ட் வண்டி:) நான் அவங்ககிட்ட கேட்டுட்டு சொல்றேன்மா:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நான் ஸ்கூட்டி தான் வெச்சிருக்கேன். அந்த அனுபவத்துல சொல்றேன்... ஸ்கூட்டி வேண்டாம். :)

ஆக்டிவா என் ஃப்ரெண்ட் வெச்சிருந்தாங்க ஓட்டி இருக்கேன். ஹெவி வெயிட், ஆனா ஸ்கூட்டியை விட வண்டி நல்ல க்ரிப் கொடுக்கும், பேலன்ஸ் கிடைக்கும். ப்ரேக் ஸ்கூட்டியை விட பெட்டர். ஸ்கூட்டி ப்ரேக் அடிச்சி எத்தனையோ முறை இழுத்து விட்டிருக்கு என்னை ;) கொஞ்சம் ஸ்பீட் 50’அ தாண்டினாலே ஸ்கூட்டி நம்ம கண்ட்ரோலில் இருக்காது. மகளோட போகலாம் ஸ்கூட்டி நான் ரெகமண்ட் பண்ணவே மாட்டேன். அனுபவம். மழை நேரம் / இரவு நேரம் என்றால் எங்க வீட்டில் ஸ்கூட்டி எடுத்துட்டு வெளிய போக எப்பவும் தடா தான்... சின்ன கல்லில் ஏறினா கூட வண்டி பேலன்ஸ் போச்சு. டயர் க்ரிப்பே இருக்காது.

ஆனா ஆக்டிவாவும் ஸ்கூட்டி போல வேகமா (ரொம்பலாம் இல்லங்க... 50 போதும்) போய் திரும்பினா எல்லாம் பேலன்ஸ் குறையும். உஷாரா ஓட்ட வேண்டிய வண்டி தான். ஆனா ஸ்கூட்டியை விட பெட்டர்னு தான் சொல்வேன். இது இரண்டையும் விட TVS Wego நல்லா இருக்குன்னு சொல்றாங்க... விசாரிச்சு பாருங்க, யாராவது வெச்சிருக்கவங்களை. எப்பவுமே யாராவது மெக்கானிக்கை ஒரு ஐடியா கேளுங்க... அவங்க தான் நிறைய வண்டியை பார்க்கறவங்க, டெக்னிகல் டீடெய்ல்ஸ் தெரிஞ்சவங்க, யூஸ் பண்றவங்க அனுபவமும் தெரிஞ்சவங்க.... இது என் சஜஷன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நித்யா & வனிதா

ரொம்பவும் நன்றிப்பா. ரொம்பவும் குழம்பி போய்தான் இருக்கேன்.
என் தங்கை கூட மஹிந்திரா ட்யூரோ வெச்சிருக்காங்க. ஆனா என்னால அதை தள்ளக்கூட முடியலை.
உங்க ரெண்டு பேரின் ஆலோசனைகளையும் என் கணவர்கிட்ட சொல்லியிருக்கேன்.
மெக்கானிக் யார்கிட்டவாவது கேட்பது மிகவும் நல்ல யோசனையாய் தோணுது.

எனக்காக டைம் எடுத்து பதிவு போட்டதற்கு ரொம்பவும் நன்றி!

நல்ல வேலை... அதை செய்துடுங்க முதல்ல. சில வண்டிகளில் சில பிரெச்சனைகள் காமனா வரும். அதை பயன்படுத்தும் நாம கூட கவனிக்க மாட்டோம், ஆனா மெக்கானிக் நிச்சயமா அதே வண்டி பலர் கொண்டு வந்து பார்ப்பவர்கள்... அந்த ஃபால்ட் நம்ம வண்டியில் மட்டுமா, மற்றவர்களோடதிலும் வருதா, எந்த வண்டியில் எது எது ஃபால்ட் வரும்னு நல்லா தெரிஞ்சு வெச்சிருப்பாங்க. ஆல் தி பெஸ்ட்... புது வண்டிக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்