கர்ப்ப காலத்தில் சளி தொல்லை

நான் 9வார கர்ப்பம் .எனக்கு இப்போதோ ரொம்ப சளி தொல்ல பண்ணுது கர்ப்ப காலத்தில் சளி தொல்லைக்கு என்ன பண்ணனும்

சளித்தொல்லைக்கு தூதுவளை ரசம் வைத்து உண்ணலாம். இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் சிறிது மிளகை பொடித்து கலந்து குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும். இஞ்சியும் சளி தொல்லையை போக்கும். இருந்தாலும் அது அதிக சூடென்பதால் அதை இப்போது நேரடியாக எடுத்து கொள்வதற்கு பதிலாக ஒருநாள் விட்டு ஒருநாள் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். துளசி இலையை உண்டாலும் சளி தொல்லைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சூடான பாலில், ( 10மிளகு , சீரகம்15 ) பொடி செய்தது பனங்கற்கண்டு பொடி , 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வடித்து காலை , இரவு 2 நேரம் குடிக்கலாம்.

அதிமதுரம் கிடைத்தால் சிறு துண்டு வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கவும்.

சுக்கு - சிறிய துண்டு ,மிளகு 1/2 ஸ்பூன் , தனியா - 1 ஸ்பூன் பொடி செய்து கொள்ளவும். 3 டம்ளர் தண்ணீரில் தேவையான அளவு வெல்லம் அல்லது பனங்கல்கண்டு ,கருப்பட்டி ,சேர்த்து கொதித்து வரும் போது பொடிசேர்த்து விரும்பினால் இஞ்சி சிறிது இடித்து சேர்க்கலாம். ( துளசி இலை , கற்பூர வல்லி அல்லது ஓமவல்லி இலை ) சேர்க்கலாம். 2 முறை சூடாக குடிக்கவும்.

மேலும் சில பதிவுகள்