பள்ளி குழந்தைகளுக்கான கல்வி சார்ந்த கைவினை

ஹாய் தோழிஸ்..1-5 படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கான கல்வி சார்ந்த கைவினை பற்றி ஐடியா குடுங்க..

நம்ம அறுசுவையில் உள்ள கைவினை குறிப்புகள் தவிர ஐடியா குடுங்க...உ-ம்..வட்டம்,முக்கோணம்,செவ்வகம்,சாய்சதுரம் போல 10 வடிவம் கனத்த அட்டையில் வெட்டி ஒரு பெரிய வட்டமான அட்டையில் ராட்டு(ராட்டினம்) போல ஒட்டிருக்கேன். அதுவா சுத்தாதுப்பா..நடுவில நம்ம விரலை வைத்து விரலை சுத்தும்போது ராட்டு சுத்தறத பார்க்கிறமாதிரி இருக்கு..

மொத்தம 30 ப்ராடக்ட் பண்ண போறேன்..காகித பூக்கள் ,பானை ஓவியம் அ டிசைன்,நியூஸ் பேப்பர் வைத்து கொலாஜ் - பாத்ரூம்,கார்டன்,மணல் ஓவியம் இந்தியா மல்டிகலர்ல..

மடித்தால் மடியணும் ,கொஞ்சமா திக்கா இருக்கணும்.இந்த மாதிரி பேப்பர்க்கு பேர் என்ன? எங்க கிடைக்கும்?..திநகர் பாண்டியன் பேங்கர்ல் போனென்..கூட்டம் அதிகம்..பொறுமையாக தேடி பார்த்து வாங்க முடியல..ஐடியா கொடுங்க.

அடிக்க வர கலர்ஸ் மட்டும் இங்க கிடைக்குது..கூல் கலர்ஸ் எங்க கிடைக்கும்..http://www.arusuvai.com/tamil/node/21770 உள்ள பீச் கலர் மாதிரி

எல்லா மெட்டிரீயல்சும் கலெக்ட் பண்ண பிறகு தொடங்கவா..இல்ல எது கிடைக்குதோ அதை முதல்ல செய்யவா...ஒண்ணு செய்யும்போது ஏதாவது இல்லன்னா கடுப்பாகுது..பகல்ல யோசித்து நைட்டு 12 மணிக்கு செய்யறேன்..ஹிஹி பொண்ணுக்கு பயம்..டிஷ்யு பூவை 1 செகன்ட்ல வாட வச்சிட்டா...

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

இலைகளை நாமே செய்ய முடியுமா? எந்த மெட்டிரீயல்? ப்ளாஸ்டிக் இலை 5 பீஸ்தான் வாங்கினேன்..7அப் பாட்ட்லில் இலை செய்தால் பொருந்துமா?

மணல் பெவிகால் போட்டு ஒட்டிய பிறகு உதிர சான்ஸ் இருக்கா?

ஆரஞ்சு கலர்ல ஒரு பருப்பு+பச்சை பயறு போட்டு தேசிய கொடி பண்ணலாம்னு இருக்கேன்..பூச்சி வருமா?

பட்ஜெட் டைட்டு..ஒ.ஹெச்.பி ஷீட்டுக்காக க்ளாஸ் பெயின்ட்ஸ் வாங்கினேன்..பாதி பணம் அதுக்கே போய்டுச்சு..தனிஷ்காவின் முதல் பிறந்தநாளுக்கே ஒ.ஹெச்.பி ஷீட்டுக்காக க்ளாஸ் பெயின்ட்ஸ் பண்ண ஆசைப்பட்டேன் .3வது பிறந்த நாளே வர போகுது..ஒரு வெல்கமாது பெயின்ட எழுதணும்ப்பா..கலர் டிஷ்யூ கிடைக்கல.5 பேப்பர் போதும்..ஆனா 100 பீஸ் பாக்கெட்தான் வாங்கணுமாம்..வெள்ளை டிஸ்யூவில் எப்டி கலர் பண்ண?

ஷெல் வீடு பண்ண எங்கிட்ட கிளிஞ்சள் இருக்கு நிறய்யவே..ஆனா ஷேப்லஸ்ஸா இருக்கு..விளிம்பு உடைந்த மாதிரி..வீடு பண்ணும் போது தெரியற இடைவெளியை எப்டி சரி பண்ணலாம்? ஜிகினா தூள் செயற்கையாக தெரியும்...வேறன்ன பண்ண?

ஆசைபட்டு என்னனு தெரியாம கிளே வாங்கிடேன்..எப்டி யூஸ் பண்ண?

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

//மடித்தால் மடியணும் ,கொஞ்சமா திக்கா இருக்கணும்.இந்த மாதிரி பேப்பர்க்கு பேர்// காட்ரிச் பேப்பர்

அல்லது... ஹாண்ட்மேட் பேப்பர்!! நீங்களே செய்யலாம்.

//எல்லா மெட்டிரீயல்சும் கலெக்ட் பண்ண பிறகு தொடங்கவா..இல்ல எது கிடைக்குதோ அதை முதல்ல செய்யவா...ஒண்ணு செய்யும்போது ஏதாவது இல்லன்னா கடுப்பாகுது..//
ம்.. முதலாவது ப்ராஜெக்ட் -
1. பேப்பர் எடுத்து (இது டீவீ பார்க்கிறப்ப பண்ணலாம்) என்ன செய்யப் போகிறீர்கள் என்கிறதை ஸ்டெப் பை ஸ்டெப் எழுதுங்க.
2. அப்பிடியே பக்கத்தில ஒரு வட்டம் போட்டு ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் என்னென்ன தேவை, (குச்சி, காய்ந்த இலையானாலும்) குறிச்சு வைங்க.
3. ஒரு அட்டைப் பெட்டி / ஐஸ்க்ரீம் கண்டெய்னர்ல அந்த பேப்பர் & ஒரு பேனையை போடுங்க.
4. லிஸ்ட்டைப் பார்த்துப் பார்த்து தேவையான எல்லாவற்றையும் பெட்டியில் போட்டு டிக் பண்ணிட்டே வாங்க. (இதுதான் நான் செய்றது.)
வேலை ஆரம்பிக்கிற போது எது இல்லை என்கிறது தெரியும். அப்போது அவற்றையும், கத்தரிக்கோல், க்ளூ எல்லாம் சேர்த்து எடுத்து செக் லிஸ்ட்டை சரி பார்த்துக் கொண்டு ஆரம்பித்தால் கடுப்பாகாது. ;) ரிலாக்ஸ்டாக செய்யலாம்.

இந்த முறையில் உங்களை அறியாமல் ஒரே சமயம் 4, 5 ப்ராஜெக்ட்ஸ்சுக்கு பொருட்கள் தயாராக இருக்கும். ஒன்று க்ளூ / பெய்ண்ட் காய்ந்து கொண்டு இருக்கும் போதே அடுத்த ப்ராஜெக்ட் ஆரம்பித்து கொண்டு போகலாம். பிறகு திரும்ப வந்து தொடரலாம். பெட்டிகளை லேபிள் போட்டு வைக்கலாம்.

‍- இமா க்றிஸ்

//இலைகளை நாமே செய்ய முடியுமா? எந்த மெட்டிரீயல்?// துணி - விரும்பினால் ஸ்டார்ச் போடலாம் அல்லது பின்புறம் பசை பூசி டிஷ்யூ ஒட்டி flower making tools கொண்டு heat செய்து வடிவமைக்கலாம். காம்புக்கு பச்சை ஃப்லோரல் டேப் சுற்றி ஒட்ட வேண்டும். வேறு...கடதாசி, அட்டை, பச்சை கலர் ஷாம்பூ பாட்டில் http://www.arusuvai.com/tamil/node/13457, பச்சை ஸ்ட்ரா, ஷாப்பிங் பை http://www.arusuvai.com/tamil/node/12867, ப்ளாஸ்டிக் ஷீட், ப்ளாஸ்டிக் ப்ளேட், ப்ளாஸ்டிக் ஸ்பூன், ராஃபியா http://www.arusuvai.com/tamil/node/16705, பேப்பர் சர்வியெட்.

//7அப் பாட்டிலில் இலை செய்தால் பொருந்துமா?// ஆம். சீ த்ரூவாக இருக்கும். ஆனால் அழகாக இருக்கும். மெல்லிதாக சுடரில் காட்டி இஷ்டத்துக்கு வளைக்கலாம்.

//மணல் பெவிகால் போட்டு ஒட்டிய பிறகு உதிர சான்ஸ் இருக்கா?// இல்லை. எதற்கும் மணலைத் தூவியதும் சற்று கைகளால் அழுத்தி விடுங்கள். நன்றாகக் காயவிடுங்கள்.

//ஆரஞ்சு கலர்ல ஒரு பருப்பு+பச்சை பயறு போட்டு தேசிய கொடி பண்ணலாம்னு இருக்கேன்..பூச்சி வருமா?// அவ்வளவு விரைவாக வர சந்தர்ப்பம் இல்லை. ஒட்டும் போதே பூச்சி இல்லாதவற்றை ஒட்டுங்கள். பயமாக இருந்தால், நிறம் மாறாமல் மெல்லிதாக வறுத்து வைத்து ஒட்டலாம். ஃபெவிகால் வாசனைக்கு பூச்சி அண்டாது என்பது என் எண்ணம்.

//க்ளாஸ் பெயின்ட்ஸ் // அதிகநாள் வைக்க வேண்டாம். இந்தியா.. வெப்பம். காய்ந்து தூக்கிப் போடுவதை விட விரைவில் பயன்படுத்தி முடியுங்கள்.
//வெள்ளை டிஸ்யூவில் எப்டி கலர் பண்ண?// டெக்க்ஷர் மாறிவிடும். ;(

//வீடு பண்ணும் போது தெரியற இடைவெளியை எப்டி சரி பண்ணலாம்?// கிளிஞ்சலை ஒட்ட ஆரம்பிக்கும் முன்பே வீட்டு சுவரில்! ;) பொருத்தமான கலரில் லைனிங் கொடுக்க வேண்டும். இடைவெளியில் அதுதான் தெரியும்.

//ஜிகினா தூள் செயற்கையாக தெரியும்...வேறன்ன பண்ண?// முதலில் கடற்கரை மணல் (அல்லது கிடைக்கிற மண்) ஒட்டிவிட்டு பிறகு கிளிஞ்சல் ஒட்டுங்களேன்.

//ஆசைபட்டு என்னனு தெரியாம கிளே வாங்கிடேன்..எப்டி யூஸ் பண்ண?// எல்லா எம்சீல் / ப்ளே டோ ப்ராஜெக்ட்சும் பண்ணலாம். என்ன டைப் க்ளே! பார்த்துச் சொல்லுங்க. bake பண்ணக் கூடியதா? ம்... இங்க இருக்கிற ஃபாண்டன்ட் கேக் டெகரேஷன்ஸ் ட்ரை பண்ணலாம். முதல் கைவினைக் குறிப்பு - பிள்ளையார் எல்லாம் ட்ரை பண்ணலாம்.

‍- இமா க்றிஸ்

எல்லாத்தையும் இமா சொல்லிபுட்டாங்க :) எனக்கு பதில் சொல்ல இடமில்லையாக்கும். ஹிஹிஹீ

பருப்பு வகை பூச்சி வராம இருக்க கராஃப்ட் கடைகளில் கிடைக்கும் வார்னிஷ் பயன்படுத்தலாம். வருஷமானாலும் பூச்சி வராது. நவதானிய வினாயகர் எல்லாம் செய்து ஃப்ரேம் பண்றாங்களே... அதில் இதை பயன்படுத்துவாங்க.

மன் ஒட்டினா விழுமா... விழவே விழாது... நான் 9, 10 படிக்கும் போது மணல் கொண்டு செய்த ஒரு பெயிண்ட்டிங், இன்னும் வீட்டில் இருக்கு. சாதாரண சாட் பேப்பரில் தான் ஒட்டி இருக்கேன், ஏஞ்சல் படம் ஒன்னு மணல் வைத்து. ஃப்ரேம் எல்லாம் இல்லை, மற்ற சார்ட் பேப்பரோட கலந்து தான் இருக்கு. ஆனா உதிரல. கலர்ஸ் தான் கொஞ்சம் ஃபேட் ஆயிருக்கு... வருடங்கள் ஓடிடுச்சுல்ல. ;) மணல் தூவி அழுத்து விடுங்க, லேசா. மீதம் உள்ள மணலை தட்டிவிடுங்க காய்ந்ததும். ஃபினிஷ் கரக்ட்டா இருக்கும்.

////ஜிகினா தூள் செயற்கையாக தெரியும்...வேறன்ன பண்ண?// முதலில் கடற்கரை மணல் (அல்லது கிடைக்கிற மண்) ஒட்டிவிட்டு பிறகு கிளிஞ்சல் ஒட்டுங்களேன்.// - இமாக்கு தோணியதே தான் எனக்கு தோணியது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிழிஞ்சல்களான வீடு செய்ய .... உடைந்த கிழிஞ்சல் துகல்கள் கிடைத்தால் அதையே ஒட்டுங்க இல்லைனா உங்ககிட்ட இருக்கறத உடைச்சு ஒட்டுங்க ...பாக்க நல்லாயிருக்கும்.

Don't Worry Be Happy.

க்ளே வைச்சு குட்டிகுட்டியா ஃபுரூட்ஸ் , வெஜிடபிள் செய்து சாட்பேப்பர்ல ஒட்டி அதன் பயன்களை எழுதிவிடலாம்.

தானியங்கள் வைச்சு ப்ரமிட் ரெடி பண்ணலாம் ஃபுட் க்ரூப் மாடலா வைச்சு, அதிகமா வர பகுதி எனர்ஜி கிவ்விங் , அதுக்குமேல ஃப்ரோட்டின் இப்படி தொடர்ச்சியா வைச்சு ப்ரமிட் முடிக்கலாம்.

ப்ளாஸ்டிக் பாட்டில் மூடி வைச்சு ரோடு சிக்னல் செய்யலாம்.

முடிஞ்சவரை தூக்கிப்போடற பொருள் வைச்சே செய்யப்பாருங்க .. . பிஸ்தா செல் கூட அழகா இருக்கும் க்ராஃப்ட் செய்ய.

Don't Worry Be Happy.

இமா,வனி,லஷ்மி அக்கா...நன்றி,செமயார்க்கு ஐடியாவெல்லாம்...சந்தோசம்க்கா..products செய்ததும் pic in FB or gmail போடுகிறேன்..

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்