தேதி: September 26, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை இரண்டிலும் சுண்டல் செய்யலாம். செய்முறை ஏறக்குறைய ஒன்று போல்தான். சிறு வித்தியாசங்கள் இருக்கும். சுவையிலும் வித்தியாசம் தெரியும்.
கொண்டைக்கடலை - கால் கிலோ
மிளகாய் வற்றல் - 5
உப்பு - அரை மேசைக்கரண்டி
கடுகு - அரைத் தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சீனி - அரைத் தேக்கரண்டி
தேங்காய் - கால் கப்
வெள்ளை ரக பெரிய கொண்டைக்கடலையை எடுத்து, சுமார் 8 மணிநேரம் நீரில் ஊற வைக்கவும்.

பின்னர் குக்கரில் கொண்டைக்கடலையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, சீனி போட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகாய் வற்றலை கிள்ளி போட்டு ஒரு முறை வதக்கி விட்டு அதனுடன் கறிவேப்பிலை, தேங்காய் போட்டு 30 நொடி வதக்கவும்.

அதன் பிறகு வேக வைத்த கொண்டைக்கடலையை போட்டு 2 நிமிடம் கிளறி இறக்கவும்.

இந்த வெள்ளைக் கொண்டைக்கடலைக்கு பெருங்காயம் சேர்ப்பதில்லை.

இதே முறையில்தான் கறுப்புக் கொண்டைக்கடலையிலும் சுண்டல் செய்யவேண்டும். கறுப்புக் கொண்டைக்கடலையை சுமார் 12 மணிநேரம் ஊற வைத்தல் நல்லது.

ஊற வைத்த கடலையை குக்கரில் போட்டு, மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி, ஒரு மேசைக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி சீனி சேர்த்து, 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். எடுத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள் கால் தேக்கரண்டி, தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாய்ப் போட்டு வதக்கவும்.

பின்னர் அதில் வேகவைத்து எடுத்துள்ள கொண்டைக்கடலையைப் போட்டு 2 நிமிடங்கள் கிளறி இறக்கி விடவும்.

கறுப்பு கொண்டைக்கடலையில் சத்தும், சுவையும் சற்று அதிகம்.

அறுசுவை நேயர்களுக்காக இந்த சுண்டல் வகைகளை செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு. சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.

Comments
கொண்டைக்கடலை சுண்டல்
உங்க குறிப்பை செய்வதற்காகவே தேங்காய் சேர்த்து செய்தேன்.வழக்கமாக சுண்டலில் நான் தேங்காய் சேர்ப்பது இல்லை.நன்றாக இருந்தது.குறிப்பு வாழ்த்துக்கள்.
Kondaikadalai
today nenka senju katina method than panaporaen madam.picture supera iruku sumathy madam.enaku oru doubt, nan white kondaikadalai 5hours oora vaitha,ethana whistle vaikanum.pls tell me immediate mam
TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.
15TO20mins
15TO20mins