கோவையில் ஒரு டீ பார்ட்டி.. :-)

கோவை வாழ் அறுசுவை உறுப்பினர்களுக்கு,

ஒரு எதிர்பாராத கோவை பயணம். இன்னும் அரை மணி நேரத்தில் புறப்பட இருக்கின்றேன். நாளை மாலை கோவையில் சில உறுப்பினர்களை சந்திக்கலாம் என்று இருக்கின்றேன். ஒரு சின்ன டீ பார்ட்டி. எங்களுடன் கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் தெரிவியுங்கள். இது கெட்டுகெதர் அல்ல. சிறிய சந்திப்புதான். சில மணி நேரங்கள் நடக்கலாம். இடம் எங்கே என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. எத்தனை நபர்கள் என்பதை பொறுத்து அது தீர்மானிக்கப்படும். நான் எனது குடும்பத்தினருடன் வருகின்றேன். நாளை மாலை (23.01.2013, புதன்கிழமை) வர இயலுமாயின் எனக்கு தெரிவிக்கவும். என்னுடைய அலைபேசி எண் 99525 28028

ஆஹா கோவை மக்களே எஞ்சாய் பண்ணுங்கப்பா... வாழ்த்துக்கள் :-)

Don't Worry Be Happy.

அன்பு கோவை வாழ் அறுசுவை தோழ தோழிகளே, அட்மின் அண்ணா கூட டீ பார்ட்டிய, ( உங்க வீட்டு ,எங்க வீட்டு சாய் இல்ல ..:) நல்லா எஞ்சாய் பண்ணுங்கோ...!

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு அட்மின் அண்ணா ,நான் சுமி, இது தான் நான் முத்ல் முதலாக உங்களுடன் பேசுவது.. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமா? எதிர்பாராத கோவை பயணம்... அப்பிடின்னு தலைப்பு போட்டு கோவை வாழ் அறுசுவை உறுப்பினர்களை சந்தோசபடுத்தின மாதிரி திடீர் வெளி நாட்டு பயணம்னு ( நான் இருக்கிற இடத்தைப் போட்டா கோழீஸ் என்னய உன்டு இல்லன்னு ஆக்கிடுவாங்கண்ணா.. அது தான் பொதுவா போட்டேன்) எப்போ போட்டு எங்கள மாதிரி வெளி நாட்டு வாழ் அறுசுவை உறுப்பினர்களையும் சந்தோச கடலில் மூழ்கடிக்கப்போரிங்க...:) கூடிய சீக்கிரம் உங்ககிட்ட இருந்து அந்த சந்தோச செய்திய கேட்போங்கிற நம்பிகையோட நாங்க எல்லோரும் காத்துக்கிட்டு இருக்கிறோம்.....:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்