மலர் அலங்காரம் - 2

தேதி: January 23, 2013

4
Average: 4 (9 votes)

 

ராப்போ பூக்கள் (Raupo / Bulrush)
Flower Arranging Frog (உயரமான முனைகளுள்ளவை)
பரற்கற்கள்
தட்டையான செராமிக் பாத்திரம்
பொம்மைகள் (சிறிய நீர்ப்பறவைகள்)
கத்தி & Chopping Board
துணி / பேப்பர் டவல்

 

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். குளியலறைக்கான மலரலங்காரமிது. முதலிலேயே அலங்காரம் அமைய வேண்டிய இடத்தைத் தயாராக்கிவிடவும். உயரமான அலங்காரம் என்பதால் இடம் மாற்றி வைப்பது சிரமம்.
பூக்களின் கீழ் ஒன்றரை அல்லது இரண்டு அடி விட்டு ராப்போ தண்டை சிலும்பாமல் நேராக நறுக்கி எடுக்கவும். கையில் பிடித்து நறுக்க இயலாது. பலகையில் வைத்து கூரான கத்தியால் அழுத்தி நறுக்கவும். (இலைகள் பிரிந்து வந்தால் தனியாக எடுத்து வைக்கவும்). முட்களில் தண்டுகளைச் சொருகும்போது இலையைப் பிடிக்காமல் அடித்தண்டுப் பகுதியில் பிடித்து அழுத்தமாகச் சொருகவும். மூன்று பூக்கள் இருந்தால்கூட போதும். கையை எடுத்தால் சரிந்துவிடாமல் இருக்கவேண்டும். சரிவதுபோல இருந்தால் பூக்களை இடம் மாற்றிச் சொருக வேண்டும். (வெளியே இழுப்பது சிரமம். எனவே முதல் முறையே சரியாகச் சொருகிக் கொண்டால் நல்லது).
இலைகளின் அடியில் சீராக நறுக்கவும். ஒன்றிரண்டை சிறிதாக வெட்டிக் கொள்ளலாம். பொருத்தமான விதத்தில் பூக்களோடு இவற்றையும் சொருகிக்கொள்ளவும்.
தெரிவு செய்யும் பாத்திரம் வட்டமாக அல்லது நீள்வட்டமாக இருந்தால்தான் இந்த அலங்காரத்திற்கு அழகாக இருக்கும். எங்கே வைக்கப் போகிறீர்களோ அந்த இடத்தில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு மீதி வேலையைத் தொடரவேண்டும். பூக்கள் இலைகள் சொருகியுள்ள அமைப்பை பாத்திரத்தின் நடுவிலில்லாமல் சற்றுப் பின்புறம் ஒரு ஓரமாக வைக்கவும். உறுதியாக நிற்குமா என்பதைக் கவனித்துக் கொள்ளவும். ஃப்ராக் (Frog) மறையும் விதமாக பரற்கற்களை அடுக்கவும்.
உள்ளே பொம்மைகளை வைத்து மெதுவாக தேவையான உயரத்திற்கு நீர் நிரப்பவும். பாரமான பொம்மைகள் வைப்பதானால் கற்களைச் சரியான இடத்திற்கு நகர்த்தி அதன் மேல் பறவைகளை வைத்தால் நீர் நிரப்பியதும் மிதப்பது போல் தெரியும். (அல்லது பொருத்தமான உயரத்தில் ஷாட் க்ளாஸ் (Shot Glass) இருக்குமானால் ஒன்றைக் கவிழ்த்து வைத்து அதன்மேல் பறவையை வைக்கலாம். நீர் விட்டதும் கண்ணாடி பார்வையிலிருந்து மறைந்துவிடும்).
பழைய 'காஸரோல் டிஷ்' ஒன்றில் ரப்பர் வாத்துக்குஞ்சுகளை மிதக்க விட்டிருக்கிறேன். அவை அசைவது பார்க்க அழகாக இருக்கும்.
முழுமையான அலங்காரம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் :) ஐ லைக் இட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்க்கவே கொள்ளை அழகா இருக்கு. ஆனால் எனக்குத்தான் இந்த ராப்போ மலர்களைப் பற்றித் தெரியலையே. அதனால் இதையே எடுத்துக்கொள்ளட்டுமா!

அன்புடன்
ஜெயா

இமா ஆன்டி சூப்பரா,நேர்த்தியா இருக்கு.எனக்கும் செய்யணும் போல இருக்கு.ஆனா என் மகள்ட்ட இருந்து காப்பத்திடே இருக்கணும்.முயற்சி செய்றேன்.வாழ்த்துக்கள் :)

Kalai

மலர் அலங்காரம் கொள்ளை அழகு இமா.பார்த்துட்டே இருக்கத் தோணுது.

இமா

சிம்ப்ளி சூப்பர்ப்.. :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சிம்பிளான குறிப்புத்தான். ஆனால் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்து அனுப்பினேன். உயரம் 1 மீட்டருக்கு சற்று அதிகம். குளியலறையில் இருக்கிறது. போர்ட்ரெய்டில் படமெடுக்க அங்கு இடம் போதாதிருந்ததால் மேசையிலேயே செட் பண்ணி எடுத்தேன். உயரம் காரணமாக படம் பளிச் என்று வரவில்லை.

கொழுத்தும் வெயிலில் 3 மணி நேரப் பயணம். ராப்போ கண்ணில் பட்டதும் வெட்டியாயிற்று, ஆயத்தமாகப் போகாததால் ஈரமாக வைக்க காரில் வசதி இருக்கவில்லை. இலைகள் சற்று சுருண்டு போய் விட்டது. ;(

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.
ராப்போவுக்கு தமிழ்ப் பெயர் என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
@ ஜெயா... Typha என்று கூகுள் பண்ணுங்கள். ஒரு வகைப் புல் இது.

‍- இமா க்றிஸ்

அருமையாயிருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப அழகா இருக்குங்க இமா:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இம்மா அக்கா மலர் அலங்காரம் செம கியூட்டா ரொம்ப அழகா அருமையா இருக்கு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சூப்பர் ரொம்ப அழகாக இருக்கு.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

பார்த்துவிட்டேன். ரொம்ப அழகா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. தமிழ் நாட்டில் இது கிடைக்குமா என்று தெரியவில்லை.

ஜெயா

கருத்துச் சொன்ன சகோதரிகள் அனைவருக்கும் என் நன்றி.
@ ஜெயந்தி - //தமிழ் நாட்டில் இது கிடைக்குமா// இலங்கையில் இருக்கிறது. அதனால் அங்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். நகருக்கு வெளியேதான் தேடவேண்டும்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகா இருக்கு, நானும் செய்வதற்கு முயல்கிறேன். வாழ்த்துக்கள்.

வாழ்வது ஒருமுறை; வாழ்த்தட்டும் தலைமுறை.

நன்றி சகோதரி. அங்கே ராப்போ பூ கிடைக்கிறதா? எங்கே கிடைக்கும் என்பதை இங்கு பதிவிட்டு உதவ முடியுமா?

‍- இமா க்றிஸ்

ராப்போ மலர்களை Jeppiar கல்லூரியிலும் அதைச்சுற்றியுள்ள இடங்களிலும் கண்டேன்.

அன்புடன்
ஜெயா

;)) நன்றி, நன்றி, நன்றி ஜெயா. யார்டா இப்பிடி கூப்பாடு போடுறாங்க என்று பார்த்தேன். ;) கண்டுபிடித்தது சந்தோஷம். ;)
முயற்சிக்கப் போகிறீர்களா? அப்படியானால் ஒரு டிப் - இந்த தடவை மலிவாக ஒரு ஹேர்ஸ்ப்ரே வாங்கி பூக்களை ஒவ்வொன்றாக ஒரு அட்டைப் பெட்டியுள் பிடித்து சுற்றிலும் தாராளமாக ஸ்ப்ரே செய்துவைத்தேன். இன்னமும் நன்றாக இருக்கிறது. (இரண்டாம் வாரம்தான் பூக்கள் முதிரும்போது என்று நினைக்கிறேன், மெல்லிதாக ஒரு வாடை வந்தது. பிறகு சரியாகிவிட்டது.)

அங்க இதற்கு என்ன பேர் சொல்றாங்க ஜெயா?

‍- இமா க்றிஸ்

அது main road-ஆக இருப்பதால் யாரிடமும் என்னால் கேட்க முடியவில்லை. ஆனாலும் எங்கள் ஓட்டுநர் தண்ணீர் கோரை என்று கூறினார். சரியா என்று தெரியவில்லை.

"பூக்களை ஒவ்வொன்றாக ஒரு அட்டைப் பெட்டியுள் பிடித்து" சரியாக விளங்கவில்லை. விளக்கவும், please.
அன்புடன்
ஜெயா

//தண்ணீர் கோரை// இருக்கும். நன்றி.

//"பூக்களை ஒவ்வொன்றாக ஒரு அட்டைப் பெட்டியுள் பிடித்து"// லேட்டாக விளக்குறதுக்கு... சாரி. ;(
சாதாரணமா பிடிச்சு அடிச்சா மீதி ஸ்ப்ரே காற்றில சேர்ந்து சுவாசத்துல போய்ச் சேந்துரும்ல! இல்லாட்டா தரைல பட்டு சறுக்கும்; சுவர்ல கறை படியலாம்.
பெரூ...சா ஒரு அட்டைப் பெட்டி எடுத்து பூ உள்ள இருக்கிற மாதிரி பிடிக்கணும். பூ காம்பு நீளமா இருக்கிறதால இது கொஞ்சம் சிரமம். உள்ள வைக்க எல்லாம் முடியாது. ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணி பிடிச்சு ஸ்ப்ரே பண்றது. ;)

‍- இமா க்றிஸ்

உறவினர்களோடு செபாவின் ஊருக்குப் போயிருந்தோம். ஓடைக்கரையோரமாக பற்றை மறைவில் ஒரு பறவை தெரிய, அது சம்புக்கோழி என்று எனக்குச் சொல்லப்பட்டது. தொடர்ந்து சம்புப் புல் பற்றி விபரித்துக்கொண்டு போனார்கள். அப்போதுதான் பிடிபட்டது... அது ராப்போ என்று. மறந்துவிடும் முன் இங்கு பதிவு செய்கிறேன்.

‍- இமா க்றிஸ்

இமா இதனை சம்பு என்றும் சம்பை என்றும் சொல்வார்கள். நீரோடையில் நிறைய‌ விளைந்து தண்ணீரையே மறித்துவிடும் அளவுக்கு வளர்ந்து நிற்கும்.

ராப்போ என்று போட்டதால் எனக்கு ஏதோ ஆங்கிலப்பேர்னு நினைச்சு இருந்தேன். இந்த‌ ராம்போ எங்கூர் ஓடைல‌ நிறைய‌ வளர்ந்து நிக்கிது..:) இரயில் பாலங்கள் அடியிலும் நிறைய‌ வளர்ந்து நிற்கும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.