தேதி: September 26, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அவல் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
பால் - 1 1/2 கப்
கேசரி கலர் பொடி - கால் தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
முந்திரி - 10
நெய் - தேவையான அளவு
ஒரு கடாயில் சிறிது நெய்யை சூடாக்கி முந்திரியை போட்டு வறுக்கவும்.
பின் அவலையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே வைக்கவும்.
கடாயில் பாலை சூடாக்கவும். பால் கொதிவந்த பின் கேசரி கலர் பொடி, வறுத்த அவல் சேர்த்து வேகவிடவும்.
அவல் வெந்த பின் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து கிளறவும்.
ஒட்டாத பதம் வந்த பின் முந்திரி தூவி சூடாக பரிமாறவும்.
Comments
லக்ஷமி
ஹாய் லக்ஷமி,அவல் கேசரி சூப்பராயிருந்துச்சுங்க.அருமையான குறிப்பு தோழி.நன்றி லக்ஷமி.
அன்புடன்
நித்திலா