ஹேர் க்ளிப்

தேதி: January 26, 2013

5
Average: 4.1 (19 votes)

 

விரும்பிய நிறத்தில் துணி
க்ளிப்
ஊசி, நூல்
ஸ்டோன்

 

முதலில் துணியில் இதே போல் வட்ட வடிவில் 5 துண்டுகளை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
நறுக்கிய துண்டுகளில் ஒன்றை எடுத்து படத்தில் காட்டியபடி மடிக்கவும்.
ஊசியில் நூல் கோர்த்து துணியின் ஓரத்தில் ஒட்டுத் தையல் போடவும்.
தையல் போட்டபின் நூலை இழுத்தால் படத்தில் உள்ளது போல் ஒரு இதழ் கிடைக்கும். இதேபோல் 5 இதழ்கள் தயார் செய்து கொள்ளவும்.
5 இதழ்களையும் சேர்த்து தைத்து முடிச்சு போடவும். பூ தயார்.
பூவின் நடுவில் ஸ்டோன் ஒட்டி, க்ளிப்பின் மீது பூவை ஒட்டி விடவும். அழகிய ஹேர் க்ளிப் ரெடி. ஆடையின் நிறத்திற்கேற்ப இதேபோல் செய்து கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அருமையா செய்து இருக்கீங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அருமையான மற்றும் எளிய குறிப்பு. செய்து பார்த்திட்டு சொல்லுகிறேன். வாழ்த்துக்கள் தோழி.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

நிகி நீங்க சொன்னது இதுதானா.சீக்கிரமா வந்துருச்சி.ஹேர் க்ளிப் சிம்பிள் அண்ட் நீட்.அழகா இருக்கு.செய்துடறேன்.வாழ்த்துக்கள் நிகி :)

Kalai

அழகாக இருக்கிறது நிகிலா.

‍- இமா க்றிஸ்

அருமையா சிம்பிளா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி
முதலில் எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

முசி
முதல் கருத்து தெரிவித்திருக்கீங்க ரொம்பவும் .நன்றி முசி.

லீமா தாமஸ்
செய்வது ரொம்பவும் ஈசி தான்.அவசியம் செய்து பாருங்க.நன்றி லீமா..

ஹாய் கலா
சிம்பிள் அண்ட் நீட்டா இருக்கா.... கட்டாயம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க கலா
வாழ்த்துக்கு நன்றி கலா

வாழ்த்துக்கு ரொம்பவும் நன்றி இமா

வனி
இது செய்றது சுலபமானது வனி.
வாழ்த்துக்கு நன்றி வனி.

it is very easy to make. thanks.

shagila

தான்க்யூ ஷகிலா

ஹேர் க்ளிப் செய்முறை ரொம்ப ஈஸியா, அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.

நன்றி வினோஜா.ரொம்ப நாளா காணோம்.கேட்டதும் லின்க் கொடுப்பீங்களேன்னு நினைச்சிக்குவேன் உங்களை. நலமா

நிகிலா அக்கா கிளிப் செம க்யூட்டா இருக்கு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

azhaga sonninga

so.......cute

Thank u Kani
Thanks Jegan
Thanku Manju