கொள்ளு சுண்டல் (காணம்)

தேதி: September 26, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கொள்ளு - 2 கப்
சின்ன காரட் - 2
பெரிய வெங்காயம் - 2
மிளகாய் - 3
இஞ்சி - ஒரு துண்டு
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

கொள்ளை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். காரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி பிறகு இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை பொடியாக சீவிக் கொள்ளவும்.
குக்கரில் கொள்ளு, உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைத்த எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து பெருங்காயத் தூள் போட்டு வதக்க்கவும்.
பின்னர் அதில் நறுக்கின வெங்காயம், துருவிய காரட், நறுக்கின பச்சை மிளகாய் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன் பிறகு அதனுடன் வேக வைத்த கொள்ளு சேர்த்து 30 நொடி வதக்கி விடவும்.
கொத்தமல்லி தழையினைத் தூவவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
இது சுவையானது மட்டுமல்ல. வாயுத் தொல்லை, சளித் தொந்திரவு போன்றவற்றிற்கு நல்ல மருந்தும் கூட.
இந்தக் குறிப்பினை வழங்கி, சுவைமிகு சுண்டலை செய்து காட்டியவர் திருமதி. சகுந்தலா வெங்கட்ராமன் அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

திருமதி. சகுந்தலா வெங்கட்ராமன் அவர்களுக்கு,

கொள்ளு சுண்டல் அருமையாக இருந்தது. எனக்கு செய்யனும்ன்னு ரொம்ப நாள் ஆசை,ஆனால் இங்கே பலமுறை தேடியும் கிடைக்கவில்லை.இப்போ தான் இதை செய்ய முடிந்தது. அருமையான சுவையான குறிப்பிற்கு நன்றி.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.