PLS HELP ME

என் வயது 32. நான் +2 வில் கணிதத்தில் தேர்ச்சிபெறவில்லை. சில காரணங்களினால் தொடரமுடியவில்லை. இப்போது கணிதம் மட்டும் எழுத முடியுமா? அல்லது கரஸ்சில் என்ன டிகிரி பண்ணமுடியும்.பதில் சொல்லுங்கள் தோழிகளே.

நீங்கள் படித்தது ஸ்டேட் போர்டு பள்ளியில்தான் என்று நம்புகின்றேன். எனக்கு தெரிந்த வரையில் நீங்கள் கணிதத்தேர்வு மட்டும் இப்போது எழுதலாம். இப்போதைய சிலபஸ்ஸை படிக்க வேண்டி இருக்கும். ஏதேனும் ஒரு டியுடோரியல் கல்லூரியில் விசாரித்தீர்கள் என்றால் விபரம் கூறுவார்கள்.

அப்படி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பிறகு, உங்களது வயதிற்கு நேரடியாக கல்லூரியில் சேர்ந்து டிகிரி படிக்க முடியுமா என்பது தெரியவில்லை. கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு ஒவ்வொரு பட்டப்படிப்பிற்கும் வித்தியாசமான வயது உச்சவரம்பு இருக்கின்றது. நீங்கள் மேற்கொண்டு என்ன படிக்கப் போகின்றீர்கள் என்பதை பொறுத்தது.

தொலைதூரக் கல்வி என்றால் வயது பற்றின கவலை இல்லாமல் படிக்கலாம். கணிதத்தில் தேர்ச்சி பெறாமலே, பத்தாம் வகுப்பு தேர்ச்சியை வைத்துக்கூட ஓபன் யுனிவர்சிட்டி மூலம் படிக்கலாம். ஆனால் ரெகுலர் டிகிரிக்கு உள்ள மதிப்பு இதற்கு இருக்காது. எல்லாம் ஒரே டிகிரிதான் என்று சொல்வார்கள். சில இடங்களில் இதனை ஏற்பதில்லை. நீங்கள் மேற்கொண்டு படிப்பது எதற்காக என்பதை தெளிவாக முடிவு செய்துகொண்டீர்கள் என்றால், அதற்கு தகுந்தாற்போல் அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்யலாம்.

Thanks for your reply.

Bharathi

நான் அமெரிக்கவில் இருக்கிறேன். வந்து 2மாதம் ஆகிறது. என்னால் என் குழந்தையை பள்ளியில்விடும்போது ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. எப்படி ஆங்கில அறிவை வளர்த்து கொல்லுவது. இங்கு ஆங்கிலம் பயிற்சி கொடுக்கும் இடங்களில் செர்ந்தால் ஆங்கிலம் வளருமா? வேறு முறைக்ளை சொல்லுங்கள். அதே நினைத்து மன அழுத்தம் வருகிற்து. எப்படியாவது என் கவலையை தீருங்கள் தோழிகளே .நன்றி

எனக்கும் இதே பிரச்சனை தான் இருந்தது...இப்போ ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குறேன்... என் கணவர் இதுதான் எனக்கு செய்தார்..
1. கணவருக்கு சுத்தமா தமிழ் வராது...என்னுடன் பேசிப்பேசியே தமிழ் நன்கு கதைக்கிறார்..அவர் ஆங்கிலத்தை மறக்க ஆரம்பித்துவிட்டார்.அதனால் ஒரு முடிவு செய்து இருவரும் ஆங்கிலத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டோம்.. நான் விடும் பிழைகளை திருத்துவார்.

2. டீவியி தழிழ் சனல்களை கட் பண்ணி ஆங்கில நிகழ்ச்சிகளையே பார்க்கத்தொடங்கினேன்.

3. இன்டர்னெட்டில் ஆங்கில கட்டுரைகள், பயிற்சிகள், பொது அறிவுகள், மற்றும் செய்திகள் பார்க்க கற்றுக்கொண்டேன்.

4. சரியோ பிழையோ ஆங்கிலத்திலேயே கதைக்கவும்.
5. ஒவ்வொரு நாளும் 5 சொற்கள் டிக்ஸ்ஸனெரியிலிருந்து எடுத்து ஒரு பேப்பரில் எழுதி fridge இல் ஒட்டி அதை பாடமாக்கவும்.
வேண்டுமென்றால் நான் ஆங்கிலம் கற்ற வெப் சைட் உங்களுக்குத்தருகிறேன்..
முயற்சி செய்தால் கண்டிப்பாக ஒரு மாதத்திலேயே ஆங்கிலம் பேசீடலாம்.

மிகவும் நன்றி லலிதா. உங்கள் கருத்து எனக்கு நம்பிக்கையை தருது. நீங்கள் படித்த முறையும் சொல்லுங்கள் படித்த வெப்சைட்டையும் சொல்லுங்கள். டி.வியில் என்ன பார்க்கலாம்?பிலிஸ் லலிதா எனகாக என்னும் கொஞ்சம் சொல்லுங்கள் இன்னும் டிப்ஸ் கொடுங்கள்பிலிஸ்.

நான் இருக்கும் நாட்டில் அமெரிக்காவிலிருந்துதான் எல்லா நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகுது. நான் life style நிகழ்ச்சிகளையே பார்ப்பேன்... உங்கள் ஈ மெயில் ஐடீ கொடுங்கோ... நான் இன்று அல்லது நாளை link அனுப்புறேன்... மனம் தளறவிடாமல் படிக்கவும்.

.மறுபடியும் நன்றி.தப்பாக எடுக்க வேண்டாம். எனக்கு மெயில் ஐடி இல்லை.என் ஹஸ்பன்ட்தான் இருக்கு. இங்கு கொடுக்லாமா? எனக்கு ஒன்னுமே புரியலை.பொது இடத்தில் ஐடி கொடுக்ககூடாது என்று சொல்லுவார்கள்.பிலிஸ்பா தப்பாக எடுக்காதிங்க. எனக்கு உதவி பண்ணுங்ப்பா.மத்த மக்களிடம் பேசுவற்கு கூட பயம்தான் வருது. வெப் சைட் கொடுங்கள்பா. சொல்லாமல் இருங்காதிங்க பிலிஸ்

ohh yaa நானும் மறந்துட்டேன்...ஆனால் மற்ற வெப் சைட் முகவரியும் கொடுக்கலாமா என்று தெரியவில்லை....அதுதான் குழப்பமாக இருக்கு... anyway I sent this for ur good future ....but u must study at least 2 hrs a day.....

:-) நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

// ஆங்கிலத்தில் பேச முடியவில்லை.// ஆனால் பேசுவது புரிகிறது அப்படித்தானே! அப்படியானால் உங்களுக்கு ஆங்கிலம் தெரியும்.

பயமில்லாமல் பேசுங்க. டீச்சர்சுக்கு உங்க பிரச்சினை புரியும். பிழையா பேசினாலும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க. புரியாட்டா கேட்பாங்க. உங்களைப் போல எத்தனையோ பேரைப் பார்த்திருப்பாங்க அவங்க.

குழந்தை ஃப்ரெண்ட்ஸ் கூட நீங்களும் ரெண்டு வார்த்தை பேசுங்க. அவங்க பெற்றோரைப் பார்த்தா சிரிச்சுட்டு ஒரு 'ஹாய்' சொல்லுங்க. அவங்களா பேச்சை ஆரம்பிக்க, உங்களுக்கும் தன்னால பேச வரும். எப்பவும் "எனக்கு ஆங்கிலம் தெரியாது,' என்று நினைக்காதீங்க. டீச்சர் பேசுறது புரியாட்டா கேளுங்க. வேற மாதிரி சொல்லிப் புரிய வைப்பாங்க. அவங்க கடமை அது.

குழந்தைக்கு என்ன வயது? எந்த வகுப்பில் படிக்கிறார்? தினமும் அவங்க ஸ்கூல் பாடங்களை எடுத்துப் பாருங்க. வீட்டுப் பாடத்துக்கு உதவுங்க. இதற்காக கட்டாயம் நேரம் ஒதுக்க வேண்டும். குழந்தை பார்க்கிற டீவீ ப்ரோக்ராமை நீங்களும் பாருங்க. குழந்தைக்கென்று லைப்ரரில கதைகள் எடுத்து வாங்க. சேர்ந்து தினமும் ஒரு குட்டிக் கதை படிக்கலாம். அவங்க அறிவு & உங்க ஆங்கில அறிவு வளருறதோட குழந்தை கூட நெருக்கமும் அதிகம் ஆகும். ஒரே கல்லுல 3 மாங்காய். ;)

//ஆங்கிலம் பயிற்சி கொடுக்கும் இடங்களில் செர்ந்தால் ஆங்கிலம் வளருமா?// சேருங்க, நல்ல விஷயம். நிச்சயம் வளரும். ஆனா... தானாக வளராது. ;) நீங்கதான் வளர்க்கணும். பயிற்சி எடுக்கணும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தவிர்க்காமல் பேசுங்க. அதுதான் பயிற்சி. இப்படி வகுப்புகளில் சேரும்போது சந்தர்ப்பங்கள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன. க்ளாசுக்கு போங்க. பிறகு உங்கள் அனுபவங்களை இங்கு வந்து சொல்லுங்க. தேவையானால் டிப்ஸ் கிடைக்கும்.

ஆங்கிலம் எழுதுவதை விட பேசுவது சுலபம். ஸ்பெல்லிங் தெரிய வேணாம்; இலக்கண சுத்தமாகப் பேசக் கூட வேணாம். உங்க கருத்தை முன்னால இருக்கிறவங்களால தெளிவா புரிஞ்சுக்க முடிஞ்சா போதும். மற்றவர்கள் பேசுவதை அவதானித்துக் கொள்ளுங்க. காலப் போக்கில் தன்னால் பேச வரும்.

//அதே நினைத்து மன அழுத்தம் வருகிற்து.// கர்ர்ர்ர்... வந்து 2 மாசம்தானே ஆகுது! லலிதா சொல்லி இருக்கிறதை படிச்சீங்க இல்ல! அதெல்லாம் சரியாகிரும் சீக்கிரம். ஆமாம், 'இங்லிஷ் விங்லிஷ்' பார்த்தீங்களா? சூப்பர் படம். கட்டாயம் பாருங்க.

//ஆங்கில அறிவை வளர்த்து கொல்லுவது.// ;)))) கொலை செய்யுறது சட்டப்படி குற்றம். :) தமிழைக் கொல்லப்படாது. இமா போலீஸ்ல புடிச்சு கொடுத்துருவாங்க. ;)

ம்... உங்களுக்கு உதவ இன்னொரு வழி இருக்கு. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும். நீங்கள் எந்த அளவு ஆர்வமாகா இருக்கிறீர்கள் என்பதைப் பார்த்து, பிறகு சொல்கிறேன். ;D

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்