டான்சில் பிரச்சினைக்கு வழி சொல்லுங்க தோழிகளே...ப்ளீஸ்..

வணக்கம் தோழிகளே என் பையனுக்கு டான்சில் பிரச்சினை இருக்கு,இப்போ தான் ஸ்டாட் ஆகிருக்கு டாக்டர் இது தான் ஆரம்பம் நு சொன்னாரு என்ன மாதிரியா அவனை கேர் எடுத்துக்கலாம் ,என்ன மாதிரியான உணவு குடுக்கலாம் எதை எல்லாம் குடுக்கக்கூடாது ,டான்சில் நா என்ன? அது ஏன் உருவாச்சு? உங்களுக்கு தெரிந்த தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே

என் பையனுக்கு வயது 9. வீட்டுவைத்தியம் எதாவது செய்யலாமா??

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ப்ளீஸ் தோழிகளே உங்கள் பதிலை ஆவலுடன் எதிபார்த்துக்கொண்டே இருக்கின்றேன்....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கவிதா சின்ன வயதில் எனக்கும் டான்ஸில்ஸ் பிரச்சினை இருந்தது. சித்தமருத்துவர் செய்ய சொல்லிக் கொடுத்த மருந்தைதான் பயன்படுத்தினேன். இப்போ எனக்கு பிரச்சினையே இல்லை. ஆனால் மருத்துவர் என்னை நேரடியாக பார்த்து பரிந்துரைத்த மருந்து. இது முழுக்க முழுக்க நேச்சுரல் பொருட்களால் செய்வதால் பக்க விளைவுகள் இருக்காது.

தோசைக்கல்லை சூடாக்கி அதில் சுத்தமான வெள்ளைத்துணியை பரப்பி அதன் மேல் கல்லில் வைத்து இடித்த பூண்டை பரப்பி சூடாக்க வேண்டும். லேசாக சூடு ஏறியதும் துணியோடு சேர்த்து எடுத்து பிழிந்தால் பூண்டு சாறு கிடைக்கும். அந்த சாறு எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு சுத்தமான தேன் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வச்சுக்கணும்.
காட்டன் பட்சை இதில் முக்கி உள் தொண்டைக்குள் தடவ வேண்டும். தினமும் இருமுறை. பையன்கிட்டயே சொல்லிக் கொடுத்து தடவ சொன்னீங்கன்னா ஈசியா இருக்கும். முதல் முறை செய்யும் போது பழக்கம் இல்லாததால் வாந்தி வருவது போல இருக்கும். பழகி விட்டால் பெரிய கஷ்டமே இருக்காது.

எனக்கு இந்த சிகிச்சை செய்யும் போது வயது 7தான்.

இப்பவும் அதிக இருமல் இருந்தால் இந்த மருந்தைதான் பயன்படுத்துகிறோம் வீட்டில் எல்லோருக்கும் இருமலுக்கும் நல்ல பலன் கிடைக்கிறது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப நன்றி கவிசிவா , சித்தமருந்து எடுத்தால் நல்லதா? இல்ல ஆங்கில மருந்து நல்லதா கவி..எனக்கு சின்ன சந்தேகம் அது தான்..நேற்று டாக்டர் டான்சில்ஸ் சொன்னதுல இருந்து மனசு உடைஞ்சு போய் இருக்கேன் கவி....பயம் வேற வந்துருசு...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கவிதா டான்சில்ஸ் எல்லாம் இந்த காலத்தில் பெரிய விஷயமே இல்லை. ஆங்கில மருத்துவமோ சித்தமருத்துவமோ மருத்துவர் சொல்வதை முறைய்யா ஃபாலோ பண்ணினாலே போதும். இதில் பயப்பட ஒன்றுமே இல்லை. தைரியமா இருங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப நன்றி கவி....உங்கள் பதில் உண்மையிலேயே எனக்கு ஆறுதலாக இருக்கிறது....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

sitha maruthuvam kai kudukum pa.

எனக்கும் டான்ஷில் 7 வயதில் இருந்தது....
வெது வெதுப்பான சுடுதண்ணிரில் உப்பு சேர்த்து அன்னார்ந்து (தொண்டையில் படும் படி) கொப்பலிக்க வேண்டும்....daily செய்யவெண்டும் ... ஐஸ் சம்மந்தபட்ட பொருட்கள் சாப்பிட கூடாது ......ஒரு வேலை ஐஸ் கிரீம் சாப்பிட்டால் உடனே சுடு தண்ணிர் குடிக்க வேண்டும்....cold varama parthukonga....

//டாக்டர் டான்சில்ஸ் சொன்னதுல இருந்து மனசு உடைஞ்சு போய் இருக்கேன்// கவி சொன்னதுதான் நானும் சொல்லுவேன். யோசிக்கிறதுக்கு எதுவும் இல்லை. ஏதாவது ஒருமுறையை மட்டும் முறையாகப் பிடித்துக் கொண்டு போங்கள். என் பெரியவருக்கு சின்னதில் நிறைய கஷ்டப்படுத்தி இருக்கிறது. அப்பப்போ டாக்டர் கொடுக்கிற மருந்தில் அடங்கிப் போகும். பிறகு எப்போ நின்றது என்று நினைவில்லை. இப்போ ஐஸ் எல்லாம் சாப்பிடுகிறார். எதுவும் இல்லை. பிறகு எப்போதோ இரண்டு முறைகள், அதுவும் ப்ளூ & இருமலின் தொடர்ச்சியாக மட்டும்தான் மட்டும் அழற்சி வந்தது.

‍- இமா க்றிஸ்

பதில் தந்த என் அனைத்து அன்பு தோழிகள் நிர்மலா ,லக்ஷ்மி,இமா அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்