கண்ணிருடன் வழி தேடி காத்திருக்கிரேன் பதில் செல்லுங்கள் தோழிகளே

அன்புள்ள தோழிகளுக்கு வணக்கம் ஒரு பிரச்சனைக்கு முடிவு எடுக்க முடியாமல் குழம்பி போய் யாரிடம் ஆலோசனை கேட்பது என்று தெரியாமல் மண்டய் வெடிக்கும் சூழ்நிலை வந்த பிறகு உங்களின் ஆலோசனை கேட்க வந்தேன் பிரச்சனைக்கு வருவதுக்கு முன் என்னை பற்றி ஒரு சிறு அறிமுகம்

நான் மிகவும் soft character யாரயும் மனவேதனை படும்படி அதிர்ந்து கூட பேசமாட்டேன். யாராவது சத்தமாக பேசினால் கூட அழுதுவிடுவேன் எனக்கு திருமணமாகி 6 வருடமாக குழந்தை இல்லை எனவே டிரிட்மெண்ட்குக்காக கோவை வந்தோம் அம்மா வீடு கோவையில் தான் நான் ஜஸ்வர்யா மருத்துவமனையில் இப்போது சிகிச்சை எடுத்து வருகிரேன் இதற்கு முன் கூட பல முறை IVF செய்தும் பலன் இல்லை.யார் என்னிடம் எது கேட்டாலும் என்னால் தர முடியம் என்றால், தந்துவிடுவேன் மேலும் என்னை சுற்றி உள்ள அனனவருக்கும் என்னை மிகவும் பிடிக்கும்.

கணவரும் என் மீது உயிரயே வெய்து உள்ளார் ஒரு மனிதன் இப்படி எல்லாம் கூட இன்னொரு உயிரை நேசிக்க முடியுமா அதுவும் 6 வருடமாக ஒரு பச்சிளம் குழந்தை போல் செல்ல பெயரிட்டு (புச்சு) எப்போதும் இப்படிதான் அழைப்பார். நாலு பேர் உள்ளார்கள் அல்லது பொது இடம் என்று பிரித்து பார்க்காமல் இப்படிதான் அழைப்பார். எனக்காக என் அம்மா வீட்டில் இருந்து கொண்டு ஒரு நல்ல அந்தஷ்தான ஆள் எனகே எனக்காக தன் தொழிலை இங்கு மாற்றி கொண்டு என்னிடம் (சொல்ல முடியாத அளவுக்கு) அன்பு பொழியும் மனித தெய்வம் அவர்.

பிரச்சனை என்னவேன்றால் நல்ல பெண்ணாக இருந்த நான் சமிப காலமாக கோபம் சொல்ல முடியாத அளவுக்கு மிக மிக மிக கோபம் கொள்கிறேன் யாரவது தவறோ குற்றமோ செய்தாலும் அவர்களிடமே போய் இனி இது போல் செய்ய கூடாது என்றும் அறிவுறை கூறி திருத்தி உள்லேன் ஆனால் அவர்கள் செய்த குற்றதய்யொ தவறயொ யாரிடமும் கூற மாட்டேன் கண்டிக்கும் போதும் தனியாக அழைய்து தான் கண்டிபேன்

ஆனால் இப்பொது யாரவது சின்ன தவறு செய்தாலும் யார் அருகில் இருக்காங்க என்று பார்க்காமல் அவர்களை திட்டுவதுடன் அவர்களை சார்ந்தவர்களையும் திட்டுகிரேன் மேலும் மற்றவர்களிடம் கோள் சொல்கிரேன் அவர்களை மட்டம் தட்டுகிரேன் எதாவது பொதுவாக பேசும் போதும் ஒருவரை பற்றி ஒருவரிடம் குறை கூறுகிரேன் பின் என்னய் நினைய்து நானே கேவளமாக நினைக்கிரேன் அன்பு கணவரிடமும் கோபம் கொள்கிரேன் அதிகமாக அலுகிரேன் என்ன நானே மிக தாழ்வாக கருதுகிரேன் விட்டில் யாரவது பேசினாலும் என்னை பற்றி தான் பேசுகிரார்காள என ஒட்டு கேட்க தோனுகிறது

இப்போது தான் தம்பிக்கு திருமணமாகியது 3 மாதம் தான் ஆச்சு தம்பி மனைவி 3 மாதமாக கற்பமாக உள்ளால் அத பார்க்கும் போது நான் கற்பமாக முடியவில்லையே என ஏங்குகிரேன் அவள் மசக்கை காரணமாக ஒரு வேலையும் செய்வது இல்லை இதை காரணமாக கொண்டு அவளிடம் நேரடியாக கேட்காமல் மற்றவர்களிடம் அதிசயமாக உண்டாகி இருக்காளா உலகில் யாரும் குழந்தை பெற்கவில்லை இவள் தான் அதிசயமாக உள்ளால் என குறை கூறுகிரேன் கடவுளிடம் ஆத்திரம் கோள்கிரென் என் இயலாமை நினைய்து வேதனை படுகிரேன் என்னை வேறுக்கிரேன்.என் கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வெக்கலாமா என எண்ணுகிரேன். நான் எதாவது ஆசிர்மத்தில் சேர்ந்துவிடலாமா என யோசிக்கிரேன்

அனைவரயும் நேசித்த நான் அனைவராலும் நேசிக்கபட்ட நான் தொலைய்து போகிரேன் என்னை நான் மீட்க வழிஉண்டா.......................................கண்ணிருடன் வழி தேடி காத்திருக்கிரேன் பதில் செல்லுங்கள் தோழிகளே

வணக்க்ம் பிரியா.. நானும் கோவை ல தான் இருக்கேன். இப்ப தான் உங்க பதிவு படிச்சேன். நீங்க கடவுள நம்புவிங்களா? உங்களுக்கு பிடிச்ச கடவுள நல்லா கும்பிடுங்க. கண்டிப்பா உங்களுக்கு கடவுள் உங்கள மாதிரியே அன்பான, அழகான குழந்தை கொடுப்பாரு. நம்பிக்கையோட இருங்க. உங்க இயலாமை தான் உங்களுக்கு கோபமா திரும்புது. உங்கள மாதிரி குழந்தை இல்லங்கிற பிரச்சினை நிறைய பேருக்கு இருக்கு. இந்த தளததில் எல்லாருமே பிரச்சினைகள சொல்லி இருக்காங்க. படிச்சு பாருங்க தெரியும். மலை வேம்பு பத்தி தெரியுமா உஙகளுக்கு. http://www.arusuvai.com/tamil/node/19398 இந்த லின்க் ல போய் படிச்சு பாருங்க. என்னோட தோழி மலை வேம்பு juice குடிச்சாங்க. இப்ப அவங்க 3 மாதம் கர்ப்பமா இருக்காங்க. நீங்களும் குடிச்சு பாருங்க. கண்டிப்பா கிடைக்கும். உங்களுக்கு மலை வேம்பு (அதுவும் ஒரு வகையான வேப்பிலை தான்.) கிடைக்குதானு பாருங்க. கிடைக்கலைனா எனக்கு சொல்லுங்க. சேரன் மாநகர் ல இருக்கு. உங்களுக்கு தேவையான எல்லா தகவ்லுமே நம்ம அறுசுவை தளத்துல இருக்கு. பொருமையா படிங்க. நல்லதே நடக்கும். சீக்கிரமே நல்ல விஷயம் சொல்லுவிங்க பாருங்க. நன்றி....

டியர் பிரியா,
உங்களின் பதிவைப் படித்து எனக்கு மிகவும் மன வருத்தமாகத்தான் இருந்தது. உங்களுக்கு எப்படி பதில் போட என்று கூட எனக்குத் தெரியவில்லை தோழி. கவலைப் படாதீர்கள். இந்த பிரச்சனை உலகில் உள்ள எல்லா நாட்டவர்களுக்கும் இருந்து வருகிற போதிலும்,நம் நாட்டு பெண்களே அதிக அளவில் மன அழுத்தத்திற்க்குள்ளாகிறார்கள் எனலாம். இதற்க்கு மிக முக்கிய காரணம் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் சமுதாயம்.வெளி நாடுகளில் இதை ஒரு பிரச்சனையாகவே பார்ப்பதில்லை.மாறாக எனக்கு தெரிந்து இப் பெண்களில் பலர் அதிக தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வார்கள்.நேர்மறையாகவும்(Positive) கையாளுகிறர்கள்

இந்த உலகத்தில் வேதனைக்குறிய விஷயங்களில் ஒன்று என்ன தெரியுமா?தாலி கட்டிய கணவனே தன் மனைவியை குழந்தை பெற இயலாதவள் என்று புண் படுத்தி புறக்கணிப்பது.ஆனால் உங்களை உயிருக்குயிராய் நேசிக்கும் அன்பான கணவருக்கு முன் உங்கள் பிரச்சனைகளை தூசு என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கோபத்திற்க்கான காரணம் எனக்கு புரிகிறது.இந்த உலகில் உள்ள எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டேத்தான் இருக்கிறது.சிலருக்கு வெளியே தெரியும்,பலருடைய பிரச்சனைகள் வெளியே தெரிவதில்லை.மனதை ஒருமுகப் படுத்தி யோகா,தியானம் என்று முயர்ச்சித்துப் பாருங்கள்.

///அனைவரயும் நேசித்த நான் அனைவராலும் நேசிக்கபட்ட நான் தொலைய்து போகிரேன் என்னை நான் மீட்க வழிஉண்டா................. ///
என்று கேட்டுள்ளீர்கள். நிச்சயமாக உண்டு.

முதலாவது, குழந்தை இல்லை என்கிற எண்ணத்தை மாற்றுங்கள்,உங்களுக்கு குழந்தை பிறப்பு தாமதமகிறது என்று நம்புங்கள், நம்பிக்கை தானே வாழ்க்கை.

தனிமையாய் இருப்பதை தவிருங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு பொழுது போக்கில் கவனம் செலுத்துங்கள் அல்லது பொழுது போக்கை உண்டாக்கிக் கொள்ளுங்கள்.

வேலை பார்க்க விருப்பம் இருந்தால் கணவருடன் அதைப் பற்றி கலந்தாலோசியுங்கள்.

///என் கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வெக்கலாமா என எண்ணுகிரேன்.///

ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்??? உங்களுக்கு நீங்களே குழி தோண்டப் பார்க்கிறீர்கள்.மட்டுமல்லாது உங்களை நேசிக்கும் உங்கள் கணவரின் மனதையும் புண் படுத்தப் பார்க்கிறீர்கள்.
""வேண்டாம் கண்ணம்மா, இப்படி ஒரு எண்ணம் வேண்டவே வேண்டாம்""

IVF பலனளிகவில்லையென்றால் ஏன் மாற்று முறையை யோசிக்கக் கூடாது.
தோழி சொன்னது போன்று மலை வேம்பு சாறு குடித்துப் பாருங்கள்.கரு முட்டை(Egg donors) வங்கியின் மூலம் பயனடையலாமே.(surrogation)என்ற முறையும் பயனளிக்கும்.

கடைசியாக பரிசுத்த வேதாகமத்திலிருந்து(Holy Bible) உங்களுக்கு ஒரு வரியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்,குழந்தை இல்லாத அன்னாள் என்கிற ஒரு பெண் மனம் நொறுங்கி வேதனைப் பட்டு அழுத போது அவள் அன்பான கணவன் அவளிடம் சொன்ன ஒரு விஷயம் அன்னாளே ஏன் அழுகிறாய்??? பத்து குழந்தைகளை விடவும் நான் உனக்கு அதிகம் (பெரிது) அல்லவா என்று.
(1சாமுவேல் 1;8)

மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள்,உங்களுக்காக நானும் இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

ப்ரியா, உங்களின் பதிவுகளிலேயே உங்கள் மன வலிகளை உணர முடிகிறது. முதலில் நீங்கள் இந்த இழைக்கு தலைப்பாக "வழி தேடி காத்திருக்கிறேன் பதில் கொடுங்கள் தோழிகளே" என்று போட்டிருந்தீர்கள் என்று நினைக்கிறேன். பிறகு அதில் கண்ணீரையும் இணைத்து கேட்டிருப்பது நீங்கள் மனதளவில் எந்தளவு துயரத்தை அனுபவித்து கொண்டிருந்தால் இப்படி சேர்த்து போட்டிருப்பீர்கள் அறிய முடிகிற்து.

//ஒரு பிரச்சனைக்கு முடிவு எடுக்க முடியாமல் குழம்பி போய்// முதலில் இது பிரச்சனையே இல்லை ப்ரியா. உங்களிடம் ஏற்பட்ட மாற்றம் என்று தான் சொல்லவேண்டும். மாற்றத்தை முன்னேற்றமாக மாற்ற வேண்டுமானால் முதலில் குழப்பத்தை விட்டொழியுங்கள்.

//நான் மிகவும் soft character யாரயும் மனவேதனை படும்படி அதிர்ந்து கூட பேசமாட்டேன். யாராவது சத்தமாக பேசினால் கூட அழுதுவிடுவேன்// ரொம்ப அமைதியா இருக்கவங்க பேச தொடங்கினாலோ, கோபபட தொடங்கினாலோ அது அவர்களுக்கே சற்று அதிகப்படியான செய்கையாக தான் தோன்றும்.

//டிரிட்மெண்ட்குக்காக கோவை வந்தோம் அம்மா வீடு கோவையில் தான் நான் ஜஸ்வர்யா மருத்துவமனையில் இப்போது சிகிச்சை எடுத்து வருகிரேன் இதற்கு முன் கூட பல முறை IVF செய்தும் பலன் இல்லை// உங்களுக்கு சிகிச்சையில் கருத்தரிக்காமல், இயற்கையாகவே கருத்தரிக்க வாய்ப்புகள் இருக்கும். அதனால் இந்த சிகிச்சை பலன் தரவில்லை என்றே எடுத்துக் கொள்ளுங்கள். தோழியே, அட்வைஸ் தருவது சுலபம். ஆனால் அதை சுமப்பவர்களுக்கு தான் அதன் கொடுமையும், வேதனையும் புரியும் என்பதை நான் நன்கறிவேன். இருந்தும், எங்களின் இந்த ஒரு சில வார்த்தைகள் தரும் ஆறுதலால் நீங்கள் மீண்டு வந்தால் அதுவே எங்கள் சந்தோஷம். ஆயிரம் வைத்தியர்கள் தீர்க்க முடியாத ஒரு நோயை ஒரு நிமிட ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தந்து தீர்த்து வைக்கும் என்பது என் திடமான நம்பிக்கை.

//யார் என்னிடம் எது கேட்டாலும் என்னால் தர முடியம் என்றால், தந்துவிடுவேன் மேலும் என்னை சுற்றி உள்ள அனனவருக்கும் என்னை மிகவும் பிடிக்கும்.
// ப்ரியா, நான் சொல்வது சினிமாத்தனமான டயலாக்காக இருந்தாலும், இது தான் உண்மை. கடவுள் நல்லவர்களை சோதிப்பார். ஆனால் கைவிடமாட்டார் என்றே நம்புங்கள். என் ஓரகத்தி ஒருத்தருக்கு 15 வருடங்களாக குழந்தை இல்லை. அவர் போன வருடம் இயற்கையான முறையில் கருத்தரித்து ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். நம்புங்கள் தோழியே.. இந்த அதிசயம் நிச்சயம் உங்கள் வாழ்வில் உங்களுக்கும் நிகழும்.

//எனக்காக தன் தொழிலை இங்கு மாற்றி கொண்டு என்னிடம் (சொல்ல முடியாத அளவுக்கு) அன்பு பொழியும் மனித தெய்வம் அவர்// இதைவிட உங்களின் மன வேதனைக்கு சிறந்த மருந்து வேறென்ன இருக்க முடியும். குழந்தை இல்லையென்றாலே அடுத்த வருடமோ, அடுத்த 6 மாசத்திலோ அடுத்த பெண்ணின் ஜாதகத்தை தேடி போகும் ஆண்களுக்கு மத்தியில் இத்தனை அன்பை பொழியும் கணவனை நினைத்து கொண்டாடுங்கள். என் தோழி ஒருத்திக்கு 10 வருடங்களாக குழந்தை இல்லை, அவர் கணவர் இரண்டாம் திருமணமும் செய்து கொண்டார் இவளின் சம்மதம் இல்லாமலேயே.. உங்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தவோ, உங்கள் மனதை மேலும் கஷ்டப்படுத்தவோ இதை சொல்லவில்லை தோழியே. உங்கள் கணவரின் அருமை மேலும் உங்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காகவே இதை சொன்னேன். குழந்தைகளுக்கு நோய் வந்தால் கசப்பான மருந்தை தருகிறோமே என்று வருத்தப்பட்டு தராமல் இருந்தால் அது நமக்கு நஷ்டம், நம் குழந்தைகளுக்கும் கஷ்டம். அந்த குழந்தையின் இடத்தில் உங்களை வைத்து பார்த்து தான் மேலே சொன்ன சம்பவத்தை சொன்னேன்.

//என் கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வெக்கலாமா என எண்ணுகிரேன். நான் எதாவது ஆசிர்மத்தில் சேர்ந்துவிடலாமா என யோசிக்கிரேன்
//

என்னங்க இவ்ளோ ஈசியா சொல்லிட்டீங்க. ஆங்காங்கே குடிக்கார கணவனையும், சந்தேகப்பேய்களையும், பணம்பறிக்கும் கொள்ளைக்காரனையும் பெண்டாட்டி வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் முதுகெலும்பில்லா புழுக்களையும் கூட கணவன் என்ற அந்தஸ்தை தந்து அவர்களை வெளியே விடாமல் கட்டிக்காப்பாற்றி வருகிறார்கள் நம் தமிழ் பெண்கள். நீங்க என்னடான்னா... உங்க மேல இத்தன அன்பை வச்சிருக்கும் கணவரை இன்னொரு பெண்ணுக்கு தாரை வார்த்து தந்துட்டு ஆசிரமத்துக்கு போய்டுவேன்னு சொல்றீங்களே.. ஏங்க, நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா? இனிமே அவ்ளோ தான்னு.. குழந்தைக்காக காத்திருக்க உங்களுக்கு இருக்கும் பொறுமை 6 வருஷங்கள் தானா? தோழியே, இதே அறுசுவையில் வருடம் பத்தை கடந்து கூட ஏதோ ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையை கண்களில் தேக்கி வைத்துக் கொண்டு தங்கள் வயிற்றை தடவி பார்த்துக் கொண்டு, நாட்கள் தள்ளி போகாதா என ஏங்கிக் கொண்டும் இருக்கும் குழந்தை சுமக்காமலே குழந்தையின் நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் தாய்கள் எத்தனை எத்தனை பேர். நீங்க முதல்ல உங்களை சுத்தி நீங்களே போட்டிருக்கும் வட்டத்தை விட்டு வெளியே வந்து பாருங்க.. உங்களை போலவே, உங்களுக்கும் ஒரு படி மேலே இது போன்ற வருத்தத்தில் ஊறி கிடப்பவர்கல் எத்தனை பேர் என்பது தெரிய வரும். உங்களையே நீங்கள் கேட்டு பாருங்கள். உங்கள் கணவர் இன்னொரு பெண்ணுடன் உங்கள் எதிரிலேயே வாழ்வதை உங்களால் பார்த்து சகித்து கொண்டிருக்க முடியுமா?

உங்கள் கோவம், அழுத்தம் அனைத்திற்கும் காரணம் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தின் பிரதிபலிப்பும், மற்றவர் கேட்கும் கேள்விகளின் தாக்கமும் தான். கொண்டவன் சரியாக இருந்தால் கோட்டை ஏறி போர் புரியலாம் என்பார்கள். உங்களை கைபிடித்த கணவர் உங்களை புரிந்து உங்கள் மேல் உயிரையே வைத்துள்ளார். இந்த மாதிரி சூழ்நிலைகளில் கணவரின் அன்பே யானைபலத்தை கொடுக்கும். எதையும் எதிர்கொள்ளும் மனோ உறுதியையும் தரும். கல்யாணம் முடித்த ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளின் பிறந்த வீட்டு ஆட்களைவிட புகுந்த வீட்டு ஆட்களை விட கணவனே பிரதானம். அவரே உங்களுக்கு பக்கபலமாக இருக்கும் போது நீங்கள் அவரிடம் உங்கள் கவலைகளையும், துயரங்களையும், பங்குபோட்டு கொள்ளலாம். அதை களைய என்ன வழி என்று கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம். யாருடைய தூற்றலும், துவேஷமும் என் மனதை பதம் பார்க்காது. அதற்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன் என்று உள்ளத்தளவில் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். தனியாக இருக்கும் சூழ்நிலைகளை தவிர்த்து எப்போதும் குடும்பத்தினருடனே இருக்க பாருங்கள். தனிமை தான் பெரிய எதிரியே. தனிமையில் தான் கண்டதையும் சிந்தித்து குழம்பி கொள்ள தோன்றும்.

அதிகமாக சிந்திக்கிறீர்கள் என்ற நிலை வரும்போது உங்கள் கணவருடன், பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கோ,பார்க்கிற்கோ சென்று வாருங்கள். இயற்கை காற்றையும், நாலுவித மனிதர்களையும் காணும் பொழுது மனம் லேசாகும். தோழியே, ஒன்றை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். கடவுள் நம் தலையெழுத்தை ப்ரெஷ்ஷாக இன்று எழுதி வைக்க மாட்டார். நாம் பிறக்கும் முன்னே நமக்கு எழுதி தான் அனுப்பி வைத்திருப்பார். அனைத்துமே விதிப்படி தான் நடக்கும். நாம் வருந்தியோ, துயரப்பட்டோ, கண்ணீர் சிந்தீயோ எதையும் மாற்ற முடியாது. நமக்கு கிடைக்கும் என்றால் அது நிச்சயம் நாம் எதிர்பாராத தருணத்தில் கூட நம் கைக்கே வந்து சேரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு இருந்தால், ஆன்மீக புத்தகங்களை படியுங்கள்.. மனம் படிப்படியாக அமைதியாகும். உங்களுக்கே தெரியாம உள்ளே புதைந்து இருக்கும் கவலை,துயரம், வேதனைகளை வெளியில் கொணர்ந்து தூக்கி எறிய வேண்டும் என நீங்கள் பிரியப்பட்டால் ஒரு நல்ல சைக்யாட்ரிஸ்டை அணுகி தீர்வு காணுங்கள். கூடிய விரைவில் உங்க எதிர்பார்ப்பு, எண்ணப்படி ஆரோக்கியமான அறிவான குழந்தைக்கு தாயாக என் மனப்பூர்வ வாழ்த்துக்கள். உங்களின் கண்ணீரோட கூடிய வேண்டுதலுக்கு என் பிரார்த்தனைகள் நிச்சயம் உண்டு தோழியே...நல்லதே நடக்கும்..

பி.கு :- மேற்கூறியவற்றில் நான் எதாவது உங்கள் மனம் வருந்தும்படி சொல்லியிருந்தால் மன்னித்து விடுங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ப்ரியா,

முதலில் வீட்டை விட்டு ஒரு பத்து நாள் இருவரும் ஒரு டூர் போயிட்டு வாங்க...ரெசார்ட் மாதிரி ஒரு இடத்தில் நல்லா ஜாலியா இருந்துட்டு வாங்க...மனசு ரிலாக்ஸ் ஆகும்...எதை பற்றியும் கவலைப்படாம குழந்தைக்காக ட்ரை பண்ணுங்க...கண்டிப்பா கிடைக்கும்..

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ஆறுதல் வார்தக்கும்,அறிவுரைக்கும் மிக்க நன்றி உங்களின் வார்தைகள் எனக்கு கீறி ரண பட்டு புரையொடி போன புண்ணுக்கு மிகவும் ஜாக்கிரதையாக அக்கரையோடு மருந்து போட்டது போல் இருந்தது அதற்கு என் மனமார்ந்த நன்றி

உண்மை அன்பு சாவது இல்லை

Unga mail id sollunga. Nan ungala contact panren thozhi.

No people are here without problem.Nammai thandiya oru sakthi undu athai nambunga.Malaivembu pathi nanum kelvi patruken.My friend told me it give good result.So u try to drink that.

You dont miss ur husband..Wish u all success..

hai akka anna amma &all friii gud morg :)

பிரியா நீங்கள் எழுதி இருப்பதை படித்தேன் தோழி, கவலை வேண்டாம், நம்பிக்கையே வாழ்க்கை. கண்டிப்பாக நடக்கும் என நினையுங்கள் முதலில். அந்த நினைவை மேலோட்டமாக எண்ணாமல் மனதின் அடி ஆழம்வரை நினையுங்கள் தோழி. ஒவ்வொரு நிகழ்வும் நம்மனதில் தோன்றும் நேர்மறை எண்ணங்கலின் வாயிலாகவே நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் ஏன் கோபம் கொள்கிறோம், என நினைக்காமல், நாம் நம் எண்ணெத்தை வெளிப்படையாக சொல்லிவிடுகிறோம், கொஞ்சம் அதிக உஷ்ணத்துடன் என எண்ணுங்கள், பிறகு போக போக கொஞ்சம் கண்டும் காணாமல் இருக்க பழகுங்கள் உங்கலுக்கு பிடிக்காத நிகழ்வுகளை, அப்புறம் படிப்படியாக குறந்துவிடும். நான் கோபம் அடைக்கிறேன் என அடிக்கடி நினைக்காமல் நானும் மற்றவர்கள் போலதான் என நினையுங்கள். தோழி தியானம் மிக முக்கியம், இல்லியேல் உங்களுக்கு பிடித்த பாடல் கேளுங்கள். மேலும் மூச்சை கவனியுங்கள், அது நல்ல பலனை கொடுக்கும்.

கோவையில் கணபதியில் உள்ள சிவாமருத்துவமனையில் "வம்சம்" என்னும் பிரிவும் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹாய் பிரியா, எப்படி இருக்கிங்க?

மேலும் சில பதிவுகள்