வேலண்டைன்ஸ் டே கார்டு

தேதி: February 2, 2013

5
Average: 4.2 (5 votes)

 

கார்ட் ஸ்டாக் பேப்பர் - விரும்பிய நிறங்கள்
வெள்ளை நிற கார்ட் ஸ்டாக் பேப்பர் - கால் அங்குல அளவு
ஃபோம் ஷீட் - ஆரஞ்சு, ப்ரௌன் நிறங்கள்
க்வில்லிங் டூல்
கத்திரிக்கோல்
க்ளு

 

தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். ஆரஞ்சு நிற ஃபோம் ஷீட்டில் இதய வடிவில் வெட்டி வைக்கவும்.
கார்டு செய்ய விரும்பும் நிற பேப்பரை மடித்து வைக்கவும். வேறு நிற கார்ட் ஸ்டாக் பேப்பரை கார்டின் நடுவில் வைத்து ஒட்டுவதற்கு தேவையான அளவில் வெட்டி வைக்கவும்.
ப்ரௌன் நிற ஷீட்டில் விரும்பிய வடிவில் பூக்கள் செய்து வைக்கவும். பச்சை நிற பேப்பரில் இலை வடிவங்கள் வெட்டிக் கொள்ளவும். பிறகு கார்டில் வெட்டி வைத்த பேப்பரையும், ஃபோம் ஷீட்டில் வெட்டி வைத்துள்ள இதயத்தையும் ஒட்டவும். அதைச் சுற்றி ஒரு பச்சை நிற ஸ்ட்ரிப்பை ஒட்டி விடவும். இதயத்தின் நடுவில் செய்து வைத்துள்ள பூக்கள், இலைகளை படத்தில் காட்டியுள்ளபடி ஒட்டிவிடவும்.
வெள்ளை நிற ஸ்ட்ரிப்பை க்வில்லிங் டூலில் வைத்து சுற்றி ஒட்டி ஒரு பக்கத்தில் விரல்களால் லேசாக அழுத்தி வளைத்து விடவும். இது பறவையின் உடல் பகுதி .இதே போல நான்கு செய்து கொள்ளவும்.
இறகுகள் செய்வதற்கு பேப்பரை க்வில்லிங் செய்து ஒட்டி வளைக்காமல் அழுத்திவிடவும்.. இதேபோல 8 செய்து கொள்ளவும். பறவையின் முகத்திற்கு ஸ்ரிப்பை சுற்றி ஒட்டி வட்டமாக இருக்குமாறு செய்து வைக்கவும். சிறிய மஞ்சள் நிற பேப்பரில் பறவையின் அலகுகள் செய்யவும் .சுற்றி வைத்துள்ள ஸ்ரிப்புகளை படத்திலுள்ளது போல பறவை வடிவில் கார்டில் ஒட்டி விடவும். கண்களுக்கு கருப்பு மணியை ஒட்டவும். இதய வடிவத்தின் மேல்பக்கம் நடுவில் ஒரு சிறிய பேப்பரை வளைத்து ஒட்டி பறவைகளின் அலகுகள் அதை பிடித்திருப்பது போல ஒட்டிவிடவும்.
சிம்பிளாக செய்யகூடிய வேலண்டைன்ஸ் டே வாழ்த்து அட்டை தயார்.
இதே போல க்வில்டு செய்த ஆண், பெண் உருவம் கொண்ட வாழ்த்து அட்டை இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வேலண்டைன்ஸ் டே கார்டு டிசைன் சூப்பர் வாழ்த்துக்கள். ஆண், பெண் உருவம் கொண்ட கார்டு அழகோ அழகு.

எத்தனை அழகான டிசைன்... சூப்பர் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க அசத்தல், பறவைகள் வடிவம், கடைசி படத்தில் உள்ள ஆண் பெண் உருவம் எல்லாமே கொள்ளை அழகு.
Happy Valentines Day நம்ம அறுசுவை தோழிகளுக்கு

சூப்பர் டிசைன் அழகா இருக்கு, கடைசி பொம்மைகள் இரண்டும் க்யூட்டா இருக்கு.

இரண்டுமே அழகாக இருக்கின்றன கலா. பறவைகள், மனிதர்கள்... சூப்பர்.

‍- இமா க்றிஸ்

Supera iruga card

Very nice

Nalla job irutha soluga pls

ரொம்ப அழகான டிசைன்;சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சான்ஸே இல்ல கலை....சிம்ப்ளி சூப்பர்ப்...கடையில் வாங்கியதை மிக அழகாக வீட்டிலே செய்து காட்டியிருக்கீங்க....வாழ்த்துக்கள் கலை...

Expectation lead to Disappointment

வாவ்...சூப்பர்ப்...கடைசி அட்டை ரொம்ப ரொம்ப சூப்பர்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

கலா உங்க கிரியேட்டிவிட்டி கலக்கலா இருக்கு... வாழ்த்துக்கள்...
உங்க வொர்க் அளவுக்கு முடியாவிட்டாலும், எதாவது சிம்பிள் டிசைன் செய்து இந்த வேலண்டைன் க்கு ஹப்பிய இம்ப்ரெஸ் பன்னனும்னு ஆசையா தான் இருக்கு... பார்ப்போம்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

வாழ்த்து அட்டை கலக்கலா செய்திருக்கீங்க கலா மேடம், ரொம்ப அருமை :-)

நட்புடன்
குணா

குறிப்பை வெளியிட்ட அறுசுவை டீம்க்கு மிக்க நன்றி:)

Kalai

கார்டு பிடித்ததில் சந்தோசம்.மிக்க நன்றிங்க:)

Kalai

வனிதா அக்கா மிக்க நன்றி :)

Kalai

மிக்க நன்றிங்க :) உங்களுக்கும் வேலண்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்:)

Kalai

மிக்க நன்றிங்க :)

Kalai

இமா ஆன்டி உங்களுக்கு பிடிச்சதில் சந்தோசம்.மிக்க நன்றி :)

Kalai

மிக்க நன்றிங்க:)

Kalai

மிக்க நன்றிங்க :)

Kalai

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க மீனா :)

Kalai

மிக்க நன்றிப்பா :)

Kalai

ரொம்ப நன்றி பிரேம்ஸ்.கட்டாயம் செய்துகொடுத்து அசத்துங்க :)

Kalai

மிக்க நன்றிங்க :)

Kalai