எனக்கு சாப்பாடு முறை பற்றி சொல்லுஙக plsssssssssss.

வணக்கம் தோழிகளே,
நான் எப்பொழுது 2 மாதமாக உள்ளேன் இது எனக்கு 2 வது குழந்தை. முதல் குழந்தைக்கு 18 மாதம் ஆகிறது. நான் பிரான்ஸ்சில் தனியாக உள்ளேன். எனக்கு எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை. காலை எழுந்ததிலிருந்து வாந்தி இருக்கிறது. முதல் குழந்தைக்கு சரியாக சாப்பிடாமல் அவளுக்கு குடலில் பிரச்சனை இருந்து ஆப்ரேஷன் செய்தது. ஆதலால் எனக்கு சிறிது பயமாக இருக்கிறது தோழிகள் எனக்கு சாப்பாடு முறை பற்றி சொல்லுஙக plsssssssssss.

தோழி எனக்கும் 2 மாதம் தான் நானும் தனியாக இருக்கிறேன் முதல் குழந்தைக்கு 4 வயது அவனையும் கவனித்து கொண்டு நாமே சமைத்தும் சாப்பிடுவது ரொம்ப கஷ்டம். அதிலும் இந்த வாந்தியால் பெரும் தொல்லை, உங்களால் எவ்வளவு முடியுதோ அதுவரை சாப்பிடுங்கள். சப்பிட பிடிக்காத நேரங்களில் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். பசியோடு மட்டும் இருந்து விட வேண்டாம்.

அன்புடன்,
zaina.

முதல் குழந்தைய பார்த்துகிட்டு வீட்டையும் பார்த்துகிட்டு இருப்பது இப்ப சிரமம் தான். கவலை படாதீங்க.
வாந்தி அதிகம் இருந்தா மருத்துவரிடம் மருந்து வாங்கிக்குங்க. அது தான் சிறந்தது.
சத்து மாவு கஞ்சி வைத்து குடிங்க.
கொஞ்ச நேரத்துக்கு ஒரு முறைனு சிறிது சிறிதா சாப்பிடுங்க.
புதினா, கொத்தமல்லி சட்னி சேர்த்துகோங்க.
முடிந்தவரை சத்தானதா சாப்பிடுங்க.
முளைகட்டிய பயிறு, சாலட், பழங்கள், சூப், உளுந்து கஞ்சி, புதினா துவையல்,இப்படி சேர்த்துகோங்க. பால் குடிக்க முடியாட்டி பனங்கல்கண்டு, சுக்கு , குங்குமப்பூ சேர்த்து குடிங்க.
காபி, டீ, பிஸ்கட், இதெல்லாம் வேண்டாம்.நெஞ்சு கரிக்கும். பிரெட் சாப்பிடனுன்னா மைதா வேண்டாம். கோதுமை பிரெட் சேர்த்துகோங்க.
கைப்பிடி அளவா இருந்தாலும் பரவாயில்லை.முடிந்த போது சாப்பிடுங்க. சத்தா சாப்பிடுங்க. இங்க கர்பிணி பெண்களுக்கான உணவுகள் நிறைய பேர் குடுத்துருக்காங்க. அதை பாருங்க.

சில லிங்க் :

http://www.arusuvai.com/tamil/node/7129

http://www.arusuvai.com/tamil/node/12560

http://www.arusuvai.com/tamil/node/5607

http://www.arusuvai.com/tamil/node/19968

http://www.arusuvai.com/tamil/node/10010

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்