ப்ரஸ்டு ஃப்ளவர்ஸ் & ஃப்ளேஸ் மாட் ஃப்ளவர் ப்ரஸ்

தேதி: February 6, 2013

5
Average: 5 (3 votes)

 

மரத்தாலான ப்ளேஸ் மாட்ஸ் - 2
பெரிய தடித்த அட்டைகள் (Corrugated Cardboard)
ப்ளாட்டிங் பேப்பர் (Blotting Paper)
விங் நட்ஸ் & போல்ட்ஸ் (Wing Nuts & Bolts) - 4
ட்ரில்லிங் மெஷின் & பொருத்தமான Bit
க்ளாம்ப்ஸ் (Clamps)
மெட்டல் ஸ்கேல்
அடையாளமிட மெல்லிய பேனா
க்ராஃப்ட் நைஃப்

 

ப்ரஸ்டு ஃப்ளவர்ஸ் & ஃப்ளேஸ் மாட் ஃப்ளவர் ப்ரஸ் (Pressed Flowers & Placemat Flower Press) செய்வதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வாழ்த்திதழ்கள், கைவினைகள் செய்வதற்காக பூக்களைப் புத்தகங்களில் வைத்து அழுத்தி எடுக்கலாம். எல்லா பூக்களுக்கும் புத்தகம் சரிவருவது இல்லை. புத்தகத்தில் வைத்தால், விரித்துத் தேடும்போது பூக்கள் கசங்கிப் போகும் வாய்ப்பு இருக்கிறது. 'ஃப்ளவர் ப்ரஸ்' (Flower Press) இருந்தால், பூக்களின் தடிமனைப் பொறுத்து அதிக அழுத்தம் கொடுத்து உலரவிடலாம். பூக்கள் கசங்காமல் இருக்கும். தேவையானதை எடுத்துக் கொண்டு மீதியை மீண்டும் அப்படியே சேமித்து வைக்கலாம்.
படத்தில் காட்டியுள்ளவாறு ப்ளேஸ் மாட்களில் நல்ல பக்கங்கள் வெளியே இருக்குமாறு வைத்து க்ளாம்ப் மாட்டிக் கொண்டு நான்கு மூலைகளிலும் ட்ரில்லிங் மெஷின் கொண்டு துளைகள் செய்துகொள்ளவும். (பிறகு, எந்த மூலைகள் ஒன்றாக வரவேண்டும் என்பதை மறக்காமலிருக்க, ஏதாவது ஒரு மூலையில் உட்பக்கமாக இரண்டு மாட்களிலும் பர்மனண்ட் மார்க்கர் கொண்டு அடையாளம் செய்துவைக்கவும்).
ஒரு ப்ளேஸ் மாட்டை அட்டைமேல் வைத்து சுற்றிலும் வரைந்துகொள்ளவும். துளைகள் இருக்கும் இடங்களையும் அடையாளம் செய்துகொள்ளவும். பின்பு துளைகளுக்குச் சமீபமாக, காட்டியுள்ளபடி நான்கு மூலைகளையும் வெட்டிவிடவும்.
அடையாளமிட்டுள்ள மீதிக் கோடுகள் வழியாக வெட்டிக்கொள்ளவும். இந்த அட்டையை அளவாக வைத்து, இதே போல் குறைந்தது மூன்று அட்டைகள் தயாராக்கவேண்டும்.
அதே அட்டையை அளவாகக் கொண்டு நான்கு துண்டுகள், ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து வெட்டிவைக்கவும்.
அடுக்கும் போது: முதலில் ப்ளேஸ் மாட், ஒரு அட்டை, இரண்டு ப்ளாட்டிங் பேப்பர், ஒரு அட்டை, இரண்டு ப்ளாட்டிங் பேப்பர், ஒரு அட்டை, ப்ளேஸ் மாட் என்று இந்த அமைப்பில் அடுக்கவும்.
போல்ட் நீளத்தைப் பொறுத்து இடையில் அடுக்குகளின் எண்ணிக்கையை கூட்டலாம். மாட்கள் வளையக் கூடியனவாக இருந்தால் அடுக்கு எண்ணிக்கை குறைவாக இருப்பதே நல்லது.
ப்ரஸ் செய்வதற்கு புதிதாக மலர்ந்த மலர்களாக காலை வேளையில் பறித்து எடுக்கவேண்டும். தேவையற்ற பாகங்களை வெட்டி எறிந்துவிட்டு ப்ளாட்டிங் பேப்பர்கள் நடுவே அடுக்கி போல்ட் செய்யவும். எத்தனை நாட்கள் உலரவிடவேண்டும் என்பது பூக்களைப் பொறுத்தது.
ப்ரஸ் செய்த மலர்களாலான வாழ்த்திதழ்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகு. நமக்கு இம்புட்டு டெக்னிக் எல்லாம் தெரியாது.. ஆனா சிறு வயதில் செய்திருக்கேன் இது போல் பூக்கள், இலைகளை காய வைத்து, அட்டையில் ஒட்டி. இன்னும் வீட்டில் இருக்கு. எப்படி இத்தனை காலமா தாக்கு பிடிக்குதுன்னு நினைப்பேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா அருமை! உங்கள் வாழ்வில் போர் அடிக்குதுங்கற வார்த்தையை உபயோகப்படுத்தீர்ப்பீர்களா என்பதே கேள்விகுறிதான். எத்தனை பொறுமை எத்தனை ஈடுபாடு ?

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

இமா ஆன்டி அருமை.என்ன பொறுமை.உங்க பொறுமையும்,வேலையும் கிராஃப்ட்ல தெரியுது.ரொம்ப அழகா இருக்கு.வாழ்த்துக்கள் :)

Kalai

//எப்படி இத்தனை காலமா தாக்கு பிடிக்குதுன்னு // ஆமாம் வனி. பூமியில் விழுந்தால் உக்கிப் போய்ருது. இப்பிடி எடுத்து வைச்சா எவ்வளவு காலமானாலும் அப்பிடியே இருக்கு இல்ல! சின்னதுல ஸ்கூல்ல குப்பைமேனித் தாவரம் அழுத்தி ஒட்டினதுதான் எனக்கு இதுல ஆசை வர வைச்சுது.
முதலாவது கருத்து ;) மிக்க நன்றி வனி. :)
~~~~~~~~
ஹாய் ஜெயந்தி & கலா... இருவருக்கும் என் நன்றி. ஒரு ரகசியம் சொல்லிவிட்டுப் போகிறேன். ;) ப்ரஸ் ரெடிமேடாகக் கிடைக்கும், ஆனால் கிடைக்காது.
கிடைத்தாலும், விலையையும் பொருளையும் பார்க்க 'என்னடா இந்த விலை சொல்றாங்க!' என்று ஏங்குவது போல இருக்கும். சிலது உள்ளே ப்ளாட்டிங் பேப்பருக்குப் பதில் வெறும் பேக்கிங் ஷீட் தான் இருக்கும். எப்படி இருந்தாலும் ஒரு நிலையில் அட்டை, கடதாசி எல்லாம் மாற்றித்தான் ஆகவேண்டும்.

ப்ளேஸ்மாட்ஸ் உண்மையில் அலன் யோசனை. 13 வயதாக இருந்த பொழுது, அவரது மாமி ஒரு புத்தகத்திலிருந்த ப்ரஸ் படத்தைக் காட்டி, 'இப்படி ஒன்று வாங்கத் தேடுகிறேன்,' என்று சொல்ல, வேண்டாமென்று தூக்கி வைத்திருந்த பழைய மாட்களில் இரண்டை எடுத்து மீதிப் பொருள் எல்லாம் சேகரித்து செய்துகொடுத்தார்.

என்னிடம் ஏற்கனவே இருந்த ப்ரஸ் போதவில்லை. பொருட்கள் எல்லாமே வீட்டில் இருந்ததால் இன்னொன்று செய்தேன். அப்படியே அறுசுவையோடு பகிர்ந்துகொண்டேன். யாருக்காவது பயன்பட்டால் சந்தோஷப்படுவேன்.
~~~~~~~~~~~~
குறிப்பில் சொல்ல மறந்த முக்கிய குறிப்பு - ப்ளாட்டிங் பேப்பருக்குப் பதில் பேப்பர் சர்வியெட், கிச்சன் டவல் பயன்படுத்த இயலாது. அவற்றிலுள்ள மேடு பள்ளங்கள் பூக்கள், இலைகளிலும் தெரியும்.

‍- இமா க்றிஸ்

சூப்பர் இமாம்மா...

நானும் வனி சொன்னதை போல சின்ன வயதில் செம்பருத்தி பூ, ரோஜா இதழ்கள் எல்லாம் பெரிய பெரிய புக்ஸ் நடுவில் வைத்து ப்ரஸ் செய்துள்ளேன்..அடிக்கடி எடுத்து பார்ப்பேன். அதை இவ்வளவு அழகாக பயன்படுத்த முடியும் என்பதை உங்களிடம் தான் பார்க்கிறேன்..

இரண்டாம் படத்திலுள்ள மலர்களும், கடைசி படமும் கொள்ளை அழகு...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ரொம்ப அழகா அருமையா இருக்குங்க :-) வாழ்த்துக்கள்

நட்புடன்
குணா

வாவ் பென்டாஸ்ட்க் வொர்க் சூப்பர் அஹ்ஹ் இருக்கு கடைசி படம் உங்கள் கைவினை எல்லாம் அவ்ளோ அழகு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

//உங்களிடம் தான் பார்க்கிறேன்..// ;)) புதிதாக எதுவும் இல்லை. இது எல்லோரும் செய்வதுதான் ராஜி.

கருத்துக்கு என் நன்றிகள் ராஜி, கனி & குணா.

‍- இமா க்றிஸ்